மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் ஏழைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முதாட்டியான பூபதி அதே பகுதியில் இருக்கும் கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே கொள்ளையடித்துக் கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பூபதி கழுத்தில் […]
Tag: #kadalur
புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் பேட்டை பகுதியின் அருகாமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்டிருந்த ஹான்ஸ் மற்றும் பான்பராக் ஆகிய புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து […]
குளிப்பதற்காக சென்ற டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பத்திரக்கோட்டை பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் குளிப்பதற்காக குழந்தை குப்பம் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிபாரவிதமாக ராஜ் நீரில் மூழ்கினார். இதனையடுத்து அவர் மூழ்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீருக்குள் குதித்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]
கடலூரியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரை பார்வையிட்ட பின் அங்கிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அம்முதியவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசித்து வரும் நாகப்பன் என்பது போலீசாருக்கு […]
பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் பாலாஜியின் விருப்பத்தை அவரது பெற்றோர்கள் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி மதுவில் விஷத்தை கலந்து குடித்து […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த மனுவில் நிவர் மற்றும் புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, உளுந்து, மணிலா, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான இழப்பீடுகளை முறையாக கணக்கெடுத்து, அதற்கான காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க […]
புத்தாண்டு தினமான நேற்று மது கடைகளில் விற்பனையானது ரூபாய் நாலரை கோடியை எட்டியுள்ளது. தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது அமோகமாக இருக்கும். இதற்காக பண்டிகை காலங்களில் மதுபானங்கள் இருப்பில் வைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி அதிகளவில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்னரே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் அதிகளவு மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து புத்தாண்டு தினத்தன்று மது […]
கடலூர் அருகே தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பார்த்த கட்சியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த புவனகிரி என்னும் பகுதியில் பெரியார் சிலை அருகே திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக என அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அப்பகுதியில் கூடி பாஜக […]
தங்களை விவசாயிகள் என்று கூறி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 12 லட்சம் மோசடி செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி சிறு குறு விவசாயிகள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூபாய் 6000 தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ் விவசாயி அல்லாதவர்களும் பயன் பெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. அந்த வகையில், […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவன் போஸ்டர் அடித்து நன்றி சொல்லியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால் 6 கட்ட நிலையில் கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலானோர் […]
கடலூர் அருகே நிவாரணத்தொகை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை 5வது கட்டமாக தொடர்ந்து அமுலிலுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூபாய் 7,500 ரொக்கமும், மாநில அரசு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்றும், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இத்துடன் ரூபாய் 10 […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. […]
கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த விழாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று தப்பியோட, பிரபாகரன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சம்பவ இடத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகளை மூடியுள்ளனர். இதனால் மது பிரியர்கள் எங்கேயும் சட்டவிரோதமாக சாராயம் கிடைக்கிறதா என்று தெரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களது இந்த ஆசையை பயன்படுத்தி பலர் இக்காலகட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டவும் நினைத்து விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தக்க […]
கடலூரில் வருகின்ற 26ஆம் தேதி முழு ஊரடங்கை கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
கடலூரில் முக கவசம் அணியாத வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் அனைத்தும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன. அதிலும் ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சமூக விலகலை கடைபிடிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த […]
கடலூரில் சாரயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் சட்டவிரோதமாக எங்கேனும் மது கிடைக்குமா? என்று அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முந்திரி தோப்புக்குள் சாராயம் காய்ச்ச உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ […]
கடலூர் அருகே முன்பகை காரணமாக 70 வயது முதியவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற தந்தை மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் விவசாய தொழில் செய்து வருபவர் அய்யாக்கண்ணு. இவருக்கும் இவரது உறவினரான மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்பகையாக மாறிப்போக இருவரும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் நேற்று அய்யாக்கண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர் தனது மகனுடன் […]
கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன் ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து […]
கடலூர் அருகே விபத்தில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைக் அடுத்த இருப்புகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய வின்சன்ட். இவர் சேப்பிளநத்தத்தில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவரும் இவரது நண்பரான அமல்ராஜ் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது புதுப்பட்டி பகுதி அருகே சென்ற சமயத்தில் இவர்கள் மோட்டார் […]
கடலூர் அருகே மாமியார் திட்டியதால் மூன்று மகன்களுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருக்கு திருமணமாகி அருள் மல்லி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டியன் குடும்பத்திற்காக உழைக்க சிங்கப்பூர் சென்றுவிட அருள்மல்லி அவரது மாமியார் மற்றும் மகன்களுடன் பள்ளிப்பட்டிக்கு வசித்து வந்துள்ளார். எனவே மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது […]
கடலூர் அருகே கணவனை கத்தியால் குத்திய மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை அடுத்த சின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமல்மதி. இவருக்கும் இவரது மனைவியான மயில் அழகி என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராரில் மயில் அழகி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட அங்கு சென்று தனது மனைவியை தன்னுடன் […]
கடலூர் அருகே ரோடுரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதமானதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சென்னை செல்லும் பசாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. தற்போது அங்கே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் பணியின்போது ரோடுரோலர் தவறுதலாக மோதியதில் அம்பேத்கர் சிலையின் கைவிரல், அதன்பீடம் சேதமடைந்து இரும்பு கூண்டும் தகர்ந்தது. […]
கடலூர் அருகே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 9 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்த தனது மகனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே விசாரித்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் நண்பரான ஹரிதாஸ் […]
கடலூரில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாக கூறி பொதுமக்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த கீரனூரில் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் சாதிய பாகுபாடு எங்களிடம் காட்டுவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை மாணவ மாணவிகள் […]
வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மகள் தந்தை தற்கொலை செய்துகொண்டனர். கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி. பாத்திர தொழிலாளியான பாவாடைசாமியின் மகள் சங்கீதா புதுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு மனம் முடித்து கொடுத்துள்ளார் பாவாடை சாமி. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சங்கீதாவின் கணவர் ராஜேஷ் மேலும் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.. இதனை அடுத்து தந்தை வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா பின்னர் கணவன் […]
கடலூர் அருகே அடமானம் வைப்பது போல் வைத்து ரூ98 லட்சம் பெற்றதோடு அடமானம் வைத்த பொருளையும் திருடி சென்று விற்ற வியாபாரிகள் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் முந்திரி வியாபாரிகளான செல்வமணி மற்றும் கலைமணி ஆகிய இருவரும் தலா 560 என்ற கணக்கில் 1120 முந்திரி முட்டைகளை அடமானம் வைத்து ரூபாய் 90 லட்சம் கடனாக பெற்றனர். இதற்கு பரசுராமன் மற்றும் […]
கடலூரில் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த வண்டிகேட் பகுதியில் உள்ள பாசிமுத்தான் ஓடையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று செடி கொடிகளில் சிக்கி மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட ஊர்மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிணத்தை மீட்டு இறந்து கிடந்தவர் யார் என்று விசாரிக்கையில், அவர் சேலம் மாவட்டம் […]
கடலூரில் கடைகளுக்கான வாடகையை பலமடங்கு ஏற்றியதை கண்டித்து வியாபாரிகள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் நகராட்சிக்கு சொந்தமாக மஞ்சக்குப்பம், முதுகூர், பான்பரி உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் சுமார் 650 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நியாயமான முறையில் மாதம்தோறும் வாடகை நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வியாபாரிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக பல மடங்கு வரியை உயர்த்தி நகராட்சி அறிவித்தது. அந்த வரியை செலுத்தாதவர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தது. அதிகப்படியான வாடகையால் நொந்த […]
கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை மனு மூலம் கலெக்டருக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வருவதற்கு முன்பாக வருவாய் ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் தொடங்கியது. அப்போது […]
கடலூர் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் நகராட்சிக்கு உட்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் நகராட்சி சார்பாக வாடகை வசூலித்து கொண்டிருந்தனர். திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் கடையில் வாடகை தொகையை 10 மடங்கு நகராட்சி உயர்த்தியுள்ளது அதாவது 1000 ரூபாய் வாங்கப்பட்ட கடைகளுக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் நகராட்சி அலுவலரிடம் முறையிட்டனர். ஆனால் வாடகை தொகையை குறைக்க […]
தமிழகத்தில் சம்பா அறுவடை நடந்து வரும் கடலூர் மாவட்டத்தில் தான் நெல் பயிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்க வைத்து வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலம் பூண்டி, சித்தலம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி காணப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பொங்கல் திருவிழாவை தங்கள் […]
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுகொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் எரியானது. அப்பகுதி விவசாயம் மற்றும் குடிநீருக்கும், சென்னை நகரின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் ஏழு முறை நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் அனக்கரை வடவாறு வழியாக வினாடிக்கு 1,668 கனஅடி வீதம் காவிரிநீர் […]
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தீப்பற்றி எரிந்தது. அரியலூர் மாவட்டம் ஆலத்தூரில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு சேலம் வாழப்பாடி நோக்கி புறப்பட்ட சரக்கு லாரி கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்பக்கத்தில் அதிக அளவில் புகை வெளியேற ஓட்டுநர் லாரியை உடனடியாக சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் லாரி […]
கடலூரில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவரும் 7 மாத கர்ப்பிணியான இவரது மனைவி கிருஷ்ணவேணியும் நேற்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையைடுத்து கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய […]
கடலூரில் தந்தையை கைது செய்த மனவேதனையில் மகன் காவல்நிலையம் முன் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சில நாட்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் ஹாலோபிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது மகன் அனந்தராமன் நேற்று ஊருக்கு வந்த கையுடன் பெட்ரோல் கேனை கையில் […]
கடலூரில் வேலை பார்த்த நகை கடையிலையே ஊழியர் 104 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையம் பகுதியை அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் கலைச்செல்வம். இவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். நாள்தோறும் கடை மூடும் சமயத்தில் ஊழியர்களிடம் இருந்து நகையை பெற்று அவற்றை சரிபார்த்து லாக்கரில் வைப்பதே இவரது பணி. அந்த வகையில் 6 வருடங்களாக […]
நெய்வேலி என்எல்சியில் திருட்டு கும்பலிடம் கத்திகுத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலுள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மணி, சபரிவாசன், சுதாகர், சண்முகம் ஆகியோர் […]
கடலூரில் தேர்தல் பகை காரணமாக பிரச்சாரம் செய்த நபரின் குடிசையை கொளுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த பாப்பன் கொல்லை மேற்கு நகரில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் அதே பகுதியில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான ஹலோ பிளாக் என்னும் பொருளை கடை அமர்த்தி விற்பனை செய்து வருகிறார். கடைக்கு அருகாமையிலேயே தங்க வேண்டும் என்பதற்காக ஓரிரு மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஓய்வெடுத்து வந்துள்ளார். […]
கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் காணிக்கையாக வழங்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிடவும் பிரசித்தி பெற்ற கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது உண்டு. இந்த கோவிலில் கூறப்படும் சிதம்பர ரகசியம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் சிதம்பர ரகசியத்தை அடையாளமாக வில்வ இலைகள் கூறப்படுகின்றன. ஆகையால் சிதம்பர நடராஜன் கோவில் 1சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் இன்று பக்தர்களால் காணிக்கையாக […]
கடலூரில் பிரசவம் பார்த்த பெண்மணி வயற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததாக கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் அப்பகுதியில் உள்ள நெடுவன்குப்பத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரியா கர்ப்பமாக அவருக்கு கடந்த மாதம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு அவருக்கு அழகான […]
கடலூரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தகராறில் அதிமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை அடுத்த எத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தாராவ். இவர் நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அருள் காந்தாராவின் வீட்டிலுள்ள மேஜையை அவரது அனுமதி இன்றி எடுத்து வந்து கேக் வெட்டியதோடு […]
கடலூரில் குப்பை கொட்டுவதை தவிர்க்க அரிசி மாவு கொண்டு துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் குப்பைகளை அகற்ற நகராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் அரிசிமாவு கொண்டு குப்பை கொட்டாதீர்கள் என்று புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேல வீதியில் அமைந்துள்ள இந்த பள்ளியின் வளாகத்தில் மார்க்கெட் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் பழ கழிவுகளை கொட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அதை உண்ணுவதற்கு மாடுகள் […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை […]
கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது. இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் […]
கடலூரில் வீடு மனை அங்கீகாரம் வழங்குவதற்காக ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அதிகாரியாக சக்கரவர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் வடலூர் மட்டுமல்லாமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை யும் சேர்த்து பொறுப்பேற்று பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குறிஞ்சிபாடி தானுர் கிராமத்தில் வசித்து வரும் மோகன் தாஸ் என்பவர் 25 […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணையின் வடிகட்டியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அணை அருகில் உள்ள சிறு கால்வாய் தொட்டியில் தண்ணீர் தேங்கி வருகின்றன. குறுகிய ஆழமுடைய சிமெண்ட் வடிகால் தொட்டியில் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதால் அவர்களது அடிப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்களை அணை பகுதிக்குள் […]
கடலூர் அருகே நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உண்ணாமைலை செட்டி சாவடியில் மது விலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரினை சோதனை செய்ததில் 148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் […]
கடலூர் மாவட்டம், தெர்மல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெர்மல் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஹிந்த் தேவி என்பவர் தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று இருந்தார் , அங்கு பணிகள் முடிந்தவுடன் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அன்றே அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது , […]