கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அரசின் வேண்டுகோளின் படி, மத்திய […]
Tag: #KadamburRaju
ஆளுநரிடம் திமுக மனு கொடுத்ததற்கு விரக்தி காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தனது பேத்தியின் காதணி விழாவிற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது” என்றார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் […]
’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ படத்தில் கதாநாயகியாக நடித்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்” இந்தப் படம் பெண் காவலர்கள் பணியில் இருக்கும்போது ஏற்படும் சிரமங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளரான இருந்த சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். இந்நிலையில் ’மிக மிக அவசரம்’ படம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. ’மிக […]
சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை, மக்களால் அவர் புறக்கணிக்கப்படுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் சிவாஜி கணேசனின் 92வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சிவாஜி சிலைக்கு மகன்கள் […]
ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் மகன் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது பேசிய முக ஸ்டாலின்,பொறுத்தார் பூமி ஆள்வார், ஆகவே நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார். மேலும் பேசிய ஸ்டாலின், முதல்வர் பழனி சாமி […]