Categories
அரசியல் மாநில செய்திகள்

1000 ஆண்டை… 100 ஆண்டில் அடைந்தவர் கலைஞர்… மாஸ் காட்டிய ஸ்டாலின்..!!

கலைஞர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.   கலைஞருக்கு சிலை வைக்க வேண்டியது ஏன் என்று கூற வேண்டுமென்றால் அந்த சிலைகள் அவரது கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும் அண்ணா என்றால் இன உணர்வு, கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முழுவதும் ஒரே சாதி தான் என்று அறிவிக்க தயாரா..? பாஜகவிடம் கீ.வீரமணி கேள்வி..!!

இந்தியா முழுவதும் இனி ஒரே சாதி தான் என்ற சட்டத்தை பாஜக கொண்டுவர தயாராக இருக்கிறதா? என திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறந்த பின்பும் வாழ்கிறார்.. கலைஞரை விலங்குகளோடு ஒப்பிட்டு வைரமுத்து புகழாரம்..!!

கலைஞர் இறந்த பின்பும் அவரது தத்துவத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை விலங்குகளுடன் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது பிரமாண்ட பொதுக்கூட்டம்… மம்தா பேனர்ஜிக்கு நினைவு பரிசு வழங்கிய ஸ்டாலின்..!!

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்று வரும் பொதுகூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மம்தா பேனர்ஜி அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதியின் சிலையை திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களின் தலைமையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த சுஷ்மா சுவராஜ்க்கு திமுக சார்பில் பொதுக்கூட்ட மேடையில் மவுன அஞ்சலி..!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு  திமுக சார்பில் பொது கூட்ட மேடையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் மம்தா பானர்ஜி மலர் தூவி மரியாதை..!!

தமிழக அரசியலின் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் தமிழக அரைநூற்றாண்டு கால அரசியலில் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா அவர்களின் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

கலைஞரின் சொந்த ஊரில் அமைதி பேரணி… 1000க்கும் மேற்பட்ட மக்கள் மௌன அஞ்சலி..!!

கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று அவர் பிறந்த ஊரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதிப் பேரணி நடத்தினர். தமிழகத்தின்  அரசியல் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி அநடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த இடத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மீண்டும்’ ‘மீண்டும்’ சொல்கிறேன்.. தமிழகத்திடம் பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம்.. தமிழிசை பேட்டி..!!

தமிழகத்திற்கு பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற ஒரு பொய்யான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தனர். ஆனால் தமிழகத்திடம் பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறிவந்தேன் என்றும், அக்கருத்து தற்பொழுது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், மத்திய அரசுக்கு  நன்றியை தெரிவித்துக் கொண்டார். […]

Categories
கட்டுரைகள் பல்சுவை மாநில செய்திகள்

தமிழக அரசியலின் அச்சாணி… என்றென்றும் கலைஞர்..!!

தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்த கலைஞரின் அரசியல் வரலாற்றை ஒரு சிறு தொகுப்பாக இச்செய்தியில் காணலாம். எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி தமிழகத்தின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். தென்முனையில் வள்ளுவருக்கு 137 அடியில் சிலை எழுப்பி தமிழின் புகழை ஓங்கச் செய்த அவர் மறையும் வரை தமிழக அரசியலில் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்து வந்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர்.  1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் திரையுலகின் சகாப்தம்…. கலைஞரும், சினிமாவும் ஒரு சிறிய தொகுப்பு..!!

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதியின் சினிமா  வரலாற்றை இச்செய்தியில் சற்று விரிவாக காண்போம். தமிழும், வடமொழியும் கலந்த வசனங்கள், மேலோங்கிய பாடல்கள் விளங்கிய திரைப்படங்கள், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகள் என 1940களில் இப்படி இருந்த திரையுலகை ஒரு தீட்டிய பகுத்தறிவு கருத்து, சமத்துவம் பேசும் மாந்தர்கள், பாமரர் பற்றிய கதைகள் என தமிழ் படத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அதில் திணிக்கும் வசனங்களால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் சிலை திறப்பு விழா… அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பு..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை  நேரில் சந்தித்த  மு.க ஸ்டாலின் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை  முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின்  உருவ சிலையானது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று  திறக்கப்பட உள்ளது.  இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை  சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே  சென்று  மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்றார். இதையடுத்து உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறந்த தலைவர்” எம்ஜிஆரா ? கலைஞரா ? சட்ட பேரவையில் காரசார விவாதம்…!!

சிறந்த அரசியல் தலைவர் கலைஞரா ? எம்ஜிஆரா ? என்பது    குறித்து சட்டப்பேரவை  கூட்டத் தொடரில் காரசார விவாதம் நடைபெற்றது.  தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், உங்கள் தலைவர் எம்ஜிஆர்க்கு தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் தான் என்றும், எனவே உங்களுக்கும் எங்களுக்கும் […]

Categories
அரசியல்

“ராஜதந்திரம் அறிந்தவர் கலைஞர் “மம்தா புகழாரம் ..!!

ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம்  சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு  அரசியல் […]

Categories

Tech |