புதன்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் 1 கோடி 17 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அவ்வாறு கடந்த புதன்கிழமையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் 5232 பருத்தி மூட்டைகளுடன் 854 விவசாயிகள் விற்பனைக்காக வந்துள்ளனர். இதில் சத்தியமங்கலம், அன்னனூர், மகுடஞ்சாவடி, ஆத்தூர், புளியம்பட்டி, கொங்கணாபுரம், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் பருத்தியை கொள்முதல் […]
Tag: #kallakkurichi
சிறுமி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவரை அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும் கடத்திச்சென்ற தமிழ்செல்வனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் ஜோதிமணி-சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் 5 பேர் இணைந்து ஜோதிமணியின் வீட்டு கதவை தட்டிய சத்தம் கேட்டு வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் […]
குட்டையில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் பாண்டியன்குப்பத்தில் உள்ள ஒரு குட்டையில் 40 வயது நிரம்பிய ஆண் நபர் தவறி விழுந்ததை கவனித்த ஊர்மக்கள் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த வீரர்கள் குட்டையில் விழுந்த நபரை இரண்டு நாட்கள் தேடி வந்த நிலையில் நேற்று அவர் பிணமாக மிதந்ததை கண்டு பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர். இதனைதொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவலியாங்குளம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் தனது மாமனாரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவுவாயிலின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய இரும்பு கேட்டை அவர் தொட்டார். […]
உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் 10க்கும் மேற்பட்ட கடைகள் இழுத்து மூடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் […]