உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்காவை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரீம்ஷாதக்கா பகுதியில் இருக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் பூங்காவை முறையாக பராமரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் 28 சென்ட் பரப்பளவில் இருக்கும் கல்வட்டக்குழி இடத்தை ஆய்வு […]
Tag: Kallakurchi
விளையாட்டு மைதானம் அமைக்க இருக்கும் இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட ஏகவலைவா மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடியபடியே கணினி குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். அதன்பின் பள்ளியின் பின்புறத்தில் மத்திய அரசு சார்பாக 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கூடிய மைதானம் அமைக்க இருப்பதாக இருக்கும் இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் […]
தாயின் கண் முன்னே மகன் மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஐதராபாக்கம் கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தனது தாய் ரஞ்சிதாவுடன் கோவிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வந்த மினி லாரி அவர் மீது மோதியுள்ளது. இந்நிலையில் தாயின் கண் முன்னே மினி […]
கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாயவன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் செயலாளரான பெருமாள், இணைச் செயலாளரான ஏழுமலை மற்றும் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்று காலத்தில் பணி செய்து வருகின்றதனால் பயோமெட்ரிக் முறையில் […]
வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதினால் அதை பொதுமக்களுக்கு இலவசமாக வியாபாரிகள் வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியிருக்கும் 30-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 5 ரூபாய் என்ற விலையில் இளங்கோ மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். அப்போது திடீரென வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி […]
விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்வராஜ் உடலை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]
மின்தடை ஏற்பட்டதினால் அதை சரி செய்ய முயற்சியும் போது விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அவிரியூர் கிராமத்தில் அருள்ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அதில் பழுது ஏதேனும் இருக்கிறதா என பார்ப்பதற்காக மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி அருள்ஜோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த […]
அரும்பாக்கம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை திருக்கோவிலூர் நகராட்சியில் இணைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேளதாளனூர், கனகநந்தல், கீரனூர், கீழ் தாழனூர், அரும்பாக்கம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை புதியதாக உருவாக்கப்பட உள்ள திருக்கோவிலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரும்பாக்கம், கனகநந்தல் ஊராட்சிகள் […]
ஆலையின் சுடு சாம்பலில் தவறி விழுந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக எமப்பேர் ஏரிக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த ஏரியில் அரிசி ஆலையிலிருந்து வாகனங்கள் மூலமாக சூடு சாம்பல் கொண்டு வரப்பட்டு […]
சட்ட விரோதமாக சாராயத்தை பதுக்கி வீட்டில் வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூட்டை கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் அவரின் வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் சேகரை கைது செய்து அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]
சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது வண்டிப்பாளையம் பகுதியில் சென்ற நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக பாண்டியனின் கார் மீது மோதியுள்ளது. இதில் செயல்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்த தடுப்பு கட்டையின் மேல் மோதி நின்றுள்ளது. இவ்விபத்தில் பாண்டியன் காயமடைந்துள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் […]
கல்லூரி அலுவலகத்தில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஜி.ஓ நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கல்லூரி அலுவலகத்தில் இருந்த பீரோவில் 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணம் வைத்திருந்திருக்கிறார். அதன்பின் ஊழியர்கள் வழக்கம் போல் […]
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகங்காத்தான் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வெங்கடேஷிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். […]
காலாவதியான மாத்திரைகளை 13 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு இம்மாவட்டத்தை சுற்றி இருக்கும் 15-க்கும் மேலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்காகவும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதில் அவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து […]
கார் ஓட்டுனரை இரும்பு குழாயால் தாக்கி கொலை மிரட்டல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் வசந்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதனால் வசந்த ராஜ் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு வந்த ரமேஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை இரும்பு குழாயால் தாக்கி பின் கொலை […]
திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலு என்பவரை பதினோர மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
விவசாயி ஒருவரின் வீட்டில் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தங்களுடைய வாயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது தமிழரசியை பாம்பு கடித்து உள்ளது. இதனால் […]
வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் கலெக்டர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தரமான காய்கறி விற்பனைகள் செய்யப்படுகிறதா என, காய்கறிகளின் விலை நிலவரம் குறித்தும், உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை விவசாயிகள் காய்கறிகள் எடுத்து வருகின்றார்களா என ஆய்வு செய்துள்ளார். இதில் புதிதாக காய்கறி விற்பனை செய்வதற்கு 40 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட தோட்டக்கலை, […]
50 மணல் மூட்டைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்று கரையில் இருந்து மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியிலிருந்து மணலை கடத்தி வந்து மூட்டைகளாக கட்டி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை […]
பால்களை கொள்முதல் செய்யாததால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தீர்த்தாபுரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் மூலமாக அப்பகுதியில் இருக்கும் 280 உற்பத்தியாளர்களிடமிருந்து நாள்தோறும் காலை நேரத்தில் 2,000 லிட்டர் மற்றும் மாலை நேரத்தில் 1,400 லிட்டர் பால்களை கொள்முதல் செய்து வந்துள்ளனர். இதை தினமும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் 15 நாட்களில் ஒரு நாள் மட்டும் […]
சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொண்டனந்தல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக வைத்திருக்கின்றனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சரவணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் […]
ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தங்களின் கிராமத்தின் அருகில் இருக்கும் மணிமுத்தாறு அணை கட்டி கீழ்ப்புறத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் டிராக்டர் மூலம் மணல் கடத்தி சென்று விற்பனை செய்வதாக கூறியுள்ளனர். இன்னிலையில் ஆற்றிலிருந்து மணல் எடுத்து அதே பகுதியில் இருக்கும் மாரியம்மன் […]
மனைவி குடிப்பழக்கத்தை விட சொன்னதால் மன உளைச்சலில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புக்கிரவாரி பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கமுடைய சின்னதுரை மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவனிடம் […]
சாராயம் விற்பனை செய்ய பாலித்தீன் பை கொடுத்து உதவி செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் சாராய விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிக்கு சென்று சாராய வேட்டையில் ஈடுபட்ட போது சாராயம் விற்பனை செய்த சீனிவாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் கூலிக்காகத் தான் சாராயம் விற்பனை செய்வதாகவும், பெரியசாமி என்பவர் […]
சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் சார்பாக 75-வது சுதந்திர தின விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் தேசியக்கொடியின் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட கலெக்டர் உலகத்தின் […]
சர்க்கரை நோய்க்கு பயந்து பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தப்பேட்டை கணபதி நகர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுகந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகந்தா கடந்த 6 மாத காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் தனியார் மருத்துவ மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து சர்க்கரை நோய் வந்தால் விரல்களை […]
போர்வெல் எந்திர லாரியிலிருந்த 2 குழாய்களைப் திருட முயற்சி செய்த வாலிபரை நிறுவனத்தின் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் போர்வெல் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் திவாகர் என்பவருடன் சேர்ந்து கம்பெனி அலுவலகத்தின் அருகில் இருக்கும் வராண்டாவில் துவங்கியுள்ளனர். அப்போது அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த போர்வெல் இந்திரன் லாரியில் இருந்த துளை போட […]