அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. 75வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.. அந்த வகையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.. அவர் கூறியதாவது, அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. […]
Tag: kamalhaasan
நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராவார். இவர் அவரது வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்த வலியுடன் கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட போது அவரது காலில் மீண்டும் […]
வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி மக்களுடன்தான் என அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (நவ. 2) சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று (நவ. 2) அக்கட்சி தலைவர் உரையாற்றியுள்ளார். இந்நிலையில் அது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடகப்பிரிவு அறிக்கை […]
பிரதமர் மோடி டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல்ஹாசன் பதிவிட்ட கருத்துக்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து பிரபல நடிகரும், […]
கொரோனா அச்சத்தால் பெற்றோர் கெஞ்சி கேட்டும் வேலையை விட்டு விலகாத 108 ஆம்புலன்ஸ் டிரைவரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகனான பாண்டித்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடிகர் கமல் ஹாசனின் குடும்பம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களைதாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்ற நடிகை ஸ்ருதிஹாசன் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். அதேபோல், அவரது தாயார் சரிகா மும்பையில் […]
வீட்டிலேயே இருங்கள், பத்திரமாக இருங்கள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 5 பேர் கிட்ட இருந்து 25 பேர் கிட்ட பரவும், அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுக்க விலகி இருக்கவேண்டும் என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என […]
இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!” என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! என்று முக ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக […]
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார். உலக மகளிர் தினம் இன்று ( மார்ச்8 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் பலவேறு இடங்களில் பல்வேறு விதமாக மகளிர் தினம் கொண்டாடபடுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மகளிர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி […]
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக இணை இயக்குனர் குமார் , நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த […]
கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய்யும் , நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியும் அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைக்கா […]
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில் பல அடி உயரத்தில் இருந்து விழுந்த […]
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் […]
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து பெப்சி அமைப்பு தொழிலாளர் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த ஆர்.கே.செல்வமணி , ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும்போது ஆங்கில படங்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் , வானத்திலிருந்து 60அடி 100 அடி உயரத்திலிருந்து படப்பிடிப்பை நடத்த தொழில் நுட்பக்கலைஞர்கள் முன்வருகிறார்கள். அதற்கு […]
இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் , இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இதில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத […]
இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து குறித்து லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த […]
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் […]
இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தில் பலியான , காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக லைக்கா நிறுவனம் ரூ 2 கோடி அறிவித்துள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் […]
இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தோருக்கு கமல் அஞ்சலி கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார் இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், என் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்தாக பார்க்கிறேன். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது. சினிமாவில் 100 கோடி , 200 கோடி என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. சினிமாவில் […]
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா […]
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை தொடர்ந்து […]
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த பட […]
நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று இரவு 10: 30 மணியளவில் […]
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை தொடர்ந்து […]
பாஜக விரும்பும் கலாச்சார திணிப்பை ஒரு நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்று திமுக ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது என்று தமிழக முதல்வர் பழனிசாமிபாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயம், பாசன வசதி, […]
மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார். […]
மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால் என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இந்த குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதையற்றவனாகி விடுவான் ஒரு இந்தியன் என்று தெரிவித்துள்ளார். பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள Sebastian & sons என்கின்ற புத்தக வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாக்ஷேத்ராவில் நடைபெற இருந்தது. இந்த விழாவுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அனுமதியை […]
தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நாதுராம் கோட்சே 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தியை சுட்டுக்கொன்றார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் (30 ஆம் தேதி) மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காந்திஜியின் 72-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று பலரும் அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் […]
நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட் செய்ததையடுத்து, தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது […]
டெல்லி சட்ட சபை தேர்தலில் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், […]
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக – காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். மும்பையில் இருந்து சென்னை வந்த கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரு கட்சியினர் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் […]
கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் டிச.23ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தமிழகத்திலும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக சார்பில் 23-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. […]
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், […]
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ”தேச விரோத சக்திகளின் தொடக்கம் இது. இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. வாக்கு வங்கிக்காக […]
அப்பா கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் புதிய செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய செல்போன் கடையை திறந்து வைத்து, 1+ செல்போனின் புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி ஹாசன், கோவை […]
’உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்று கூறினார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘உங்கள் நான்’ என்ற விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் கமல் குறித்து […]
இடைத்தேர்தல் பயத்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 ஆம் தேதியும், கடைசியாக அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் […]
இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் நீதி […]
கதையே இல்லாத படத்தை ஓட்ட வேண்டுமென்று நடிகர் விஜய் இப்படி பேசியுள்ளார் என்று அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் […]
இசை வெளியீட்டு விழாவை விஜய் மிக சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று நடிகர் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார் நடிகர் விஜய். சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் […]
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த குடும்பத்தினருக்கு கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]
30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக […]
பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி […]
காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது […]
கமலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த பேச்சுக்கு சர்சையை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் […]
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]
டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரி செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புகார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரையும் நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது டெல்லியில் இருந்து கொண்டு ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது என்று விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் […]
கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மனு அளித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பின் செய்தியாளர்களை சந்திதித்த அவர் கூறியதாவது, கடந்த மாதம் 18ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு சென்ற தனது கணவர் பின்பு சடலமாக வீட்டிற்கு திரும்பினார் என்றும் தனது […]