அரசின் தவறுகள் உயிர்பலி வாங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம் என […]
Tag: #kamalhasan
கொரோனா அச்சத்தால் நடிகர் கமலஹாசன் ஏப்ரல் ஆறாம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். மேலும் கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும், மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரத் துறை […]
தமிழகத்திற்கு மிகச் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது எனவும் அந்த ஆளுமை கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கவிஞர் சினேகன் கூறியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் மண்டல நகர ஒன்றிய செயலாளரை அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞரும் மாநில இளைஞரணி செயலாளருமான சினேகன் கூறியதாவது, மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நான் ஈரோட்டிற்கு வந்திருந்த பொழுது கண்ட எழுச்சியை இப்போதும் என்னால் காணமுடிகிறது. நமது ஒரே […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள்நீதிமய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை மசோதா திருத்த சட்டம். இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழகத்திலும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் இச்சட்டத்திற்கு எதிராக வலுப்பெற்றன. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் […]
அரசு தவறு செய்தவர்களை தப்பிக்க செய்கிறது. அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக கமல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கயவர்களை தப்பிக்க விடுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து உங்களுக்கு பேனர் வைக்க வில்லையா? என்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார். அதில், தனக்கும் ரசிகர்கள் பேனர் வைக்க தான் செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் நான் கூறிய அறிவுரையானது, […]
சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நேற்று நடிகர் விஜய் பேசியதை தொடர்ந்து இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரணச்செய்தி கேட்பதுதான். சுப ஸ்ரீயின் மரணச்செய்தியும் அப்படிப்பட்டதுதான். தன்னுடைய ரத்தம் சிந்திக் கிடப்பதை பார்க்கும் பொழுது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல. எல்லாருடைய மனதிலும் திகிலும் மரணம் வழியும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிக்பாஸ் போன்ற ஒரு மோசமான பண்பாட்டு கலாச்சார சீரழிவை இளைய தலைமுறையின் மனங்களில் விதைக்கின்ற குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்கின்ற நிகழ்ச்சிகளை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆகிவிட்டால் மக்களுக்கான அரசியல் செய்வதற்கு வந்த பிறகு […]
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக இந்தி நடிகர்களுக்கு பதிலாக தமிழ் நடிகரே நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கமல்ஹாசனும் , அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர் . மேலும், அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், விவேக் , பிரியா பவானி சங்கர், ரகுல் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் மீரா மிதுன் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை […]
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேர்தல் சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தேர்தல் குறித்து கூறி […]