Categories
அரசியல் மாநில செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு.!!

3 தொகுதி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், நாம் தமிழர், என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவரும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் (30ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டி.!!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுவார் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்ட பேரவை தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் அக்கட்சியின்  தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ஆலோசனைக்கு பின் நேற்று இரவு காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக், நாங்குநேரி தொகுதியில்  ரூபி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி”… என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுத்தர பாஜக முடிவு.!!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர பாஜக முடிவு செய்துள்ளது.   புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக விருப்பமனுக்களை பெற்று வந்த நிலையில், பாஜகவும் அதே தொகுதிக்காக விருப்பமனுக்களை பெற்றதால் அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன்பின் நேற்று முன்தினம் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக தலைமை அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவுக்கு புதுச்சேரி பாஜக அதிர்ச்சியடைந்தது. தங்களுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டி.!!

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து  திமுக,  அதிமுக,  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்   இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் நடைபெற்று, அதன் விவரம் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதன் படி விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் சா.ராஜநாராயணன் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பிரவினா மதியழகன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவிக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து  திமுக,  அதிமுக,  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்   இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் நடைபெற்று, அதன் விவரம் கட்சி தலைமைக்கு அனுப்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி வேட்பாளர்கள் (நாளை மறுநாள்)  நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து  திமுக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நேற்று முன் தினம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதேபோல  நாம் தமிழர் கட்சியும் 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் : காங். வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு… கே.எஸ். அழகிரி.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான  வேட்பாளர்கள்  நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து  திமுக நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை இன்று அறிவித்தது. அதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் 3 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல்…. “தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழு”… திமுக அறிவிப்பு..!!

திமுக சார்பில் நாங்குநேரி இடைத்தேர்தலில், தேர்தல் பணியாற்றிட தொகுதி தேர்தல் பணிப் பொறுப்புக் குழுவினரை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.    தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக நாம் தமிழர்,தமிழ்நாடு காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக சார்பில் நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.!!

 நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை இன்று அறிவித்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். […]

Categories

Tech |