கனமழை காரணத்தினால் வெப்பநிலை குறைந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tag: kanamalai
கனமழை பெய்து வருவதால் அணையில் தண்ணீர் நிரம்பி சீறிப்பாய்ந்து ஓடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஏரியில் கனமழையால் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதை பொதுமக்கள் அனைவரும் கடை வாசல்களில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் காட்சிகளை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை அடுத்து சமீப காலங்களாக ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூரில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதினால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் […]
வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த கனமழை அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் அளவு பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததினால் ஒரு சில பகுதிகளில் மிதமான கனமழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் 92.12 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது வளிமண்டல சுழற்சி காரணத்தினால் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய தொடங்கியதால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]
தொடர்ந்து பெய்த கனமழையால் தடுப்பு அணைகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம், அலசந்தாபுரம் மற்றும் திம்மகெடா நீர்வீழ்ச்சி பகுதிகளில் தொடர் கனமழையால் நீர்வீழ்ச்சியில் உருவாகும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பூதனாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் நாராயணபுரம் மற்றும் திம்மாம்பேட்டை மண்ணாற்றின் வழியாக ஆவார குப்பம் பாலாற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனையடுத்து மழையால் அலசந்தராபுரம், நாராயணபுரம், கொடையாஞ்சி, அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் […]
விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் மொத்தமாக 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் இதில் சராசரியாக 4.23 மில்லிமீட்டர் பதிவாகி இருக்கிறது.
தொடர்ந்து பெய்யும் கனமழையால் பயிர் நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி உள்பட 4 பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 3௦௦ ஏக்கர் நெற்பயிர் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதன் பின் நெய்வேலி மற்றும் […]
காலைப் நேரத்தில் இருந்த வெப்பநிலை மாறி திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் தமிழகத்தில் திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் இம்மாவட்டத்தில் சாரலாக மிதமான மழை பெய்துள்ளது. ஆனால் பண்ருட்டி, […]