Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து பேசிய நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ், யுவனேஷ், விக்னேஷ் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்தீஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து….. 2 பேர் பலி; 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

தீ விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வருகிற 26-ஆம் தேதி முதல்…. பிரபல கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்…!!!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு  அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். இதனையடுத்து கோவில் வளாகத்தில் இருக்கும்  நவராத்திரி மண்டபத்தில் மாலை நேரத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளி தினமும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அங்கு மாலை நேரத்தில் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அறியாமல் வீடியோ எடுத்த நண்பர்கள்…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் நாலு ரோடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெகதீசன் தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் ஜெகதீசன் குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். இதனை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவர் வசிக்கும் மாடி வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்த நிலையில் இருந்துள்ளது. நேற்று முன்தினம் லோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் பூச்சி பெயர்ந்து லோகநாதனின் 10 வயதுடைய மகன் நேதாஜி மீது விழுந்தது. இதனால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தாய்…. ரத்த வெள்ளத்தில் கிடந்த கொத்தனார்…. காஞ்சியில் பரபரப்பு சம்பவம்…!!

கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் கொத்தனாரான விஜய்(23) என்பவர் தனது தாய் பாஞ்சாலியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் விஜய் செவிலிமேடு பெட்ரோல் நிலையம் எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மகன் தன்னை பார்க்க வராததால் பாஞ்சாலி அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முடியை வெட்டுமாறு வற்புறுத்திய பெற்றோர்…. கல்லூரி மாணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெலடிப்பேட்டை அண்ணா தெருவில் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இலக்குவன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இலக்குவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்கலம் கிராமத்தில் தினேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் வீட்டுமனை மற்றும் காலி மனை உள்ளிட்டவற்றை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தினேஷ் மகாதேவிமங்கலம் கிராமத்தில் கூடுதல் பொறுப்பாக வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் மனு அளித்துள்ளார். அப்போது 8000 லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா பெயர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதி கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர்…. காஞ்சியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வினோத் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கனரக லாரியில் மார்பில் கற்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரிலிருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் வினோத்குமாரின் கால் இடிபாட்டில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பள்ளி மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேதாசலம் நகரில் ஆட்டோ ஓட்டுநரான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக விஜய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர் கூறிய தகவல்…. குழந்தையுடன் சிக்கிய தம்பதியினர்…. போலீஸ் அதிரடி….!!

தம்பதியினர் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழவந்தாங்கல் கிராமத்தில் பிரபாகரன்-சுஜாதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ஆம் தேதி சுஜாதாவிற்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று சுஜாதாவின் மாமியார் அவரை கழிவறைக்கு அழைத்து சென்று திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது. இது குறித்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது, ஒரு தம்பதியினரை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்…. இடிக்கப்பட்ட கோவில்…. பொதுமக்களின் போராட்டம்….!!

கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மேலும் அங்கு கனகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் கோவிலை இடித்து அகற்றி விட்டனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீனம்பாக்கம் ராணுவ அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜி வேலைக்கு சென்றபிறகு கவிதா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கவிதா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தன்னை கடித்த பாம்பை…. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறுவன்…. காஞ்சியில் பரபரப்பு…!!

சிறுவன் தன்னைக் கடித்த பாம்பை அடித்து அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாம்பேட்டை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏழு வயதுடைய தக்ஷித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென கொடிய விஷமுள்ள பாம்பு ஓன்று இந்த சிறுவனை கடித்து விட்டு ஓடியது. இதனால் அந்த சிறுவன் அதனை துரத்தி சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைதெறிக்க ஓடிய தம்பி…. அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தம்பிக்கு பதிலாக அண்ணனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவன் மேடு பகுதியில் செந்தில்குமார் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரகு என்ற தம்பி உள்ளார். இவரின் மீது 2 கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் தனது தந்தைக்கு ஈமச்சடங்கு நடத்துவதற்காக செந்தில்குமார் குடும்பத்தினருடன் அமர்ந்து வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து திடீரென மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் செந்தில்குமாரின் வீட்டிற்குள் நாட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை….? ஆட்டோ டிரைவருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டோ டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்காளிமேடு பகுதியில் ஆட்டோ டிரைவரான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த ஆட்டோ டிரைவரான அன்பழகனிடம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மணி என்பவர் திடீரென தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். மேலும் மணி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அன்பழகன் காவல் நிலையத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அதனால தான் கொன்னுட்டேன்” பேராசிரியைக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கள்ளக்காதல் தகராறில் திருமணமாகாத கல்லூரி பேராசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அனிதா தனது அறையில் கடந்த 9-ஆம் தேதி மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உதட்டில் ரத்த காயத்துடன்…. பேராசிரியரின் மர்மமான மரணம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி நகரில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது வீட்டு தரைத்தளத்தில் அனிதாவின் அக்கா சண்முக கனி மற்றும் அவரது கணவர் வெள்ளைச்சாமி போன்றோர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து பணி முடித்துவிட்டு அனிதா மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது இரவு 11 மணி அளவில் அனிதாவின் அறையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“நான் தான் முதல்ல போவேன்” மோதிக்கொண்ட பேருந்துகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

தனியார் நிறுவன பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு பேருந்துகள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேருந்துகளில் 40 பெண் ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இரண்டு பேருந்துகளின் டிரைவர்களும் ஒருவரை ஒருவர் முந்துவதற்காக வேகமாக சென்றுள்ளனர். இதனால் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சாலையோரம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்கு தானே போனாள்…? சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கடன் தொல்லை அதிகரித்ததால் இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் 2-ஆவது மதகு அருகில் இளம்பெண்னின் சடலம் கிடப்பதாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற பேருந்து… தி.மு.க. பிரமுகருக்கு நடந்த விபரீதம்… காஞ்சியில் பரபரப்பு…!!

நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பேருந்து மோதிய விபத்தில் தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், தி.மு.க பிரமுகருமான பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  தனது வீட்டில் இருந்து சின்ன காஞ்சிபுரம் டி.கே நம்பி தெரு வழியாக நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது, வாலாஜாபாத் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக பார்த்திபனின் மீது மோதி விட்டது. இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட சத்தம்… காவலாளி கண்ட காட்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுபான கடை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வல்லாரை கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை முழு ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த டாஸ்மாக் கடையில் காவலாளியாக பணிபுரியும் பன்னீர்செல்வம் நள்ளிரவு நேரத்தில் கடையிலிருந்து சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உடனடியாக பின்புறம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக இப்படியா பண்ணுறது…? நண்பர்களுக்கு நடந்த துயரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

போதைக்காக எலுமிச்சம் சாறை தின்னரில் கலந்து குடித்தால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசங்கர், கிருஷ்ணா என்ற இரு நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களான இந்த மூன்று பேரும் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்த சங்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அந்த 3 பேருடன் இணைந்து… கணவன் கொடூரமாக கொன்ற மனைவி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கணவனின் தலையில் இரும்பு குழாயால் அடித்து மனைவி கொலை செய்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கோவூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரின் தாய் மாங்காடு காவல் நிலையத்தில் தனது மகன் பாஸ்கர், மருமகள் உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போனவர்களை தேடி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சொல்றத செய்ய மாட்டீங்களா…? கடைகளில் அலைமோதிய கூட்டம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா விதிகளை பின்பற்றதால் காஞ்சிபுரத்தில் உள்ள 11 கடைகளுக்கு  அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பட்டு புடவை வாங்குவதற்காக தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் காந்தி சாலை என்ற பகுதியில் உணவு, ஜவுளி கடைகளில் அரசு அறிவித்த படி முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் கூடியுள்ளன‌‌ர். இதனை அடுத்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையாளர் காந்தி சாலை பகுதிகளில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாணவர்களின் படிப்பு என்னவாகும்….? ஸ்கூல மூட கூடாது…. பெற்றோர்களின் போராட்டம்…!!

பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்ததால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருகிறது.. இந்நிலையில் திடீரென இந்த பள்ளியை மூட போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென இவ்வாறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்த வாலிபர்… மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை… காஞ்சியில் பரபரப்பு…!!

பூட்டிய வீட்டை உடைத்து மாற்றுத்திறனாளி பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக மாற்றுத்திறனாளியாக மாறிவிட்டார். இவருடைய தாயார் இவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அதே பகுதியில் வசித்து வரும் லாரி டிரைவரான முத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… கட்டிட மேஸ்திரிக்கு நடந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் ஜானகிராமன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவர் ஓரிக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வெளிங்கபட்டரை ரோடு என்ற இடத்தில் இவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நல்லாதான் போயிட்டு இருந்துச்சு… திடீரென என்னாச்சுன்னு தெரியல…. பெண்ணிற்கு நேர்ந்த துயரம்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பாக்கம் கிராமத்தில் சங்கர் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கட்டுமான பணியை முடித்து விட்டு தன்னுடன் சித்தாள் பணிக்காக வந்த மகாத்மா காந்தி சாலையில் வசித்து வரும் இந்திரா என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் மாகரல் காவல் நிலையம் அருகே இவர்களின் மோட்டார் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“காற்று வரல” அதான் அப்படி பண்ணுனோம்…. கைது செய்யப்பட்ட சிறுவர்கள்… புகாரளித்த வடமாநில தொழிலாளர்கள்…!!

செல்போன் திருடிய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னா குமார் என்பவரும், அவரது உறவினரான ஹரிலால் குமார் என்பவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி தெருவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டினில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டிற்குள் நுழைந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்றவர்கள்… திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… காஞ்சியில் பரபரப்பு…!!

10 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏட்டிபாளையம் கிராமத்தில் சௌரிராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாத்திமா ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் இரண்டாவது மகளான பிரமியாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் செய்யாறு சென்றுள்ளனர். இந்நிலையில் பாத்திமா ராணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அப்போ இதே வேலைதான் நடக்குதா… வசமாக சிக்கிய நபர்… கைது செய்த காவல்துறை…!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் மண்டபம் பகுதியில் சின்ன காஞ்சிபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அப்போது போலீசார் விசாரிக்கும் போது அந்த நபர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சசிகுமார் என்பதும், அவர் கடையின் பூட்டை உடைத்து 500 ரூபாய் திருடியதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இவ்ளோ லேட் பண்றீங்க… தீக்குளிக்க முயன்ற வாலிபர்… காஞ்சியில் பரபரப்பு…!!

போலீசாரின் நடவடிக்கை தாமதமாக இருப்பதாக கூறி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அமரம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி மூன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததால், பவித்ரா தான் ஒரு கார்டுக்கு மட்டும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றிவர்… சிறுமிக்கு நடந்த திருமணம்… போக்சோவில் தள்ளிய தாய்…!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் சர்தார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்கள்… கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்ராம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் இயங்கி வந்துள்ளது. இங்கு கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் பாக்யராஜ், ஆறுமுகம் மற்றும் முருகன் போன்ற 3 தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி அவர்கள் இறந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நாங்க அங்க கூட்டிட்டு போகலாம்னு நெனச்சோம்… அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க… கண்ணீர் வடிக்கும் உறவினர்கள்…!!

உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சத்தம்… பார்த்ததும் அலறிய ரஞ்சிதம்… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்து விட்டது. அந்த பாம்பு மூதாட்டியை கடித்தவுடன் அவர் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். அவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சின்ன பிரச்சனைக்கு இப்படி பண்ணலாமா… மரணம் தான் தீர்வா… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடகால் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எழுச்சூர் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மனம் உடைந்த சூர்யா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சு கொடுங்க…. நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் அடுத்தடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஏழுமலை என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தனியார் துறையில் 5% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனை அடுத்து உத்திரமேரூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்கல… வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக போலீஸார் 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகரல் போலீசாருக்கு வளதோட்டம் பாலாற்று படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, சம்பா இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மூன்று பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எங்க போனாலும் ஒன்னாவே போவோம்… சகோதரர்களின் அளவில்லாத பாசம்… ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை… தவிக்கும் குடும்பத்தினர்…!!

அண்ணன் தம்பி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செட்டியார் பேட்டை பகுதியில் வினோத்குமார், சதீஷ்குமார் என்ற  சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இதில் வினோத்குமாருக்கு சுகன்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தையும் இருக்கின்றனர். மேலும் சதீஷ்குமாருக்கு ஒரு மனைவியும், 6 மாத குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் வினோத்குமார் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மண்டித் தெருவில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இவரது சகோதரர் சதீஸ்குமார் அதே பகுதியில் பழுதுபார்க்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… கோவிலுக்கு சென்ற பெண்கள்… நடந்த துயர சம்பவம்…!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஐயங்கார் குளம் பகுதியில் மங்கையற்கரசி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு உறவினரான மைதிலி என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் இவர்களது மொபட் ஐயங்கார்குளம்-மோரணம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களின் மொபட்டின் மீது மோதி விட்டது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… ரொம்ப கஷ்டமா இருக்கு… பெண் எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானம்பதி பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் அங்கு உள்ள மானாமதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவருடைய வயிற்று வலி சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மன […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏற்பட்ட பெரும் விபத்து… தீவிர சிகிச்சையில் ஒருவர்… சிறையில் அடைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள்…!!

பாறை சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி உள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து மீட்பு படையினர் அந்த பாறை இடுக்குகளில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடமாநிலத்தை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திட்டமிட்டபடி துவங்க முடியல… பறிபோன உயிர்கள்…. போராட்டத்தால் பரபரப்பு…!!

கல்குவாரி விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சோனா அன்சாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அங்கு ஏற்பட்ட பாறைச் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாழ்வா? சாவா? போராட்டம்… நல்ல வேளை எல்லாரும் தப்பிச்சிடாங்க… பெரும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டவர்கள்…!!

கல்குவாரி பாறை இடிந்து இறங்கிய விபத்தில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த ஆறுமுகசாமி, சரவணகுமார், தேவராஜன் மற்றும் சேகர் போன்றோருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கல்குவாரியில் காலை 9 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 200 அடி பள்ளத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் உதவியுடன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்குவாரியில் மேல் பகுதி பாறை இடிந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பேனர் வைக்க முயற்சித்தவர்கள்… நண்பர்களுக்கு நடந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு…!!

பேனர் வைக்க முயன்ற போது உயர் மின்னழுத்தம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் பேனர் வைக்கும் தொழில் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயற்சி செய்தபோது, பேனரின் கம்பியானது அங்கு இருந்த உயர்மின் அழுத்த கம்பியின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அவர் இல்லாம இருக்க முடியல… குடும்பத்தினரிடம் அடிக்கடி சண்டை…. விரக்தியில் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… காஞ்சியில் பரபரப்பு…!!

பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் பிரீத்தி ஷீலா என்பவர் வசித்துவருகிறார். இவர் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவனை பிரிந்த இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரீத்தி திடீரென அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அதன் பின்  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு… எங்களுக்கு அது ரொம்ப முக்கியம்… கோரிக்கை விடுத்த மீனவர்கள்…!!

தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதிக அளவில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள கடற்கரையோரம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையானது சூளேரிகாட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆலைக்கு கடல்நீர் கொண்டுவருவதற்காக கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக பெரிய பாறாங்கற்கள்  கொட்டப்பட்டுள்ளன. அங்கு கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக கொட்டப்பட்ட இந்த கற்களால் அதன் பக்கத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… 2 மணி நேரத்திலேயே தீர்வு…!!

நகை மற்றும் செல்போன் திருடிய நபரை புகாரளித்த 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மலில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி புதூரில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் மண்டபத்தின் மாடியில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories

Tech |