‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ள நடிகை கங்கனா கடற்கரையில் மதிமயங்கி விளையாடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பாலிவுட் குயினாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ படத்தில் நடித்துவருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலிலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறன. இந்தப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துவருகிறார். பிரியாமணி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் […]
Tag: #KanganaRanaut
கிரிக்கெட் வீரர் விராத் கோலி போல் ஆக்ரோஷ தன்மைக்காக பல்வேறு விமர்சனங்களை தான் சந்தித்திருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கும் தனக்கும் இடையே பொதுவான தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “எனக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவரும் நானும் வெவ்வேறு பின்புலத்தில் உள்ளோம். தனது தனித்துவத்தால் அவர் பெயர் […]
ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்ற நடிகர் சைஃப் அலி கானின் கருத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் வருகைக்குமுன் இந்தியா என்றொரு கருத்தியலே இல்லை என்று நடிகர் சைஃப் அலி கான் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் அவரைக் கடுமையாக சாடி கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சைஃப் அலி கான் போன்றவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு, குறுகிய கண்ணோட்டத்துடன் இதுபோன்ற […]
கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படத்தில் நடித்திருக்கும் கங்கனா, தேசிய அளவில் கபடி விளையாட்டில் சாதித்தவரின் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். ஆங்கிலேயர்கள் தூக்கி பிடித்த கிரிக்கெட்டை விட மிகவும் கவர்ச்சியானது கபடி என்று கூறியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பற்றிதான் அதிக அளவில் புகழ்பாடப்படுகிறது. ஆனால் அதைவிட கவர்ச்சிகரமான விளையாட்டாக கபடி இருக்கிறது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.கங்கனா ரணாவத் நடித்திருக்கும் புதிய படமான ‘பங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. […]
மும்பை: இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனநாயகத்தில் வன்முறை பொருத்தமானதல்ல என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மேலும் ஒரு பேருந்தின் விலை தெரியுமா என்றும் வன்முறையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை நடிகை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். மும்பையில் நடந்த திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்துக் கொண்ட கங்கனா இதுகுறித்து கூறும்போது, ”எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்து இங்கு வன்முறையில் ஈடுபட உங்களுக்கு […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உருவப்படத்திற்கு கங்கனா மலர்தூரி மரியாதை செய்யும் புகைப்படத்தை சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் குயினாக வலம் வரும் கங்கனா […]
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படப்பிடிப்பு கங்கனா ரனாவத் நடிப்பில் இனிதே தொடங்கியுள்ளது. ‘தலைவி’ படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக கிளப் போர்டுடன் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சாயிலேஷ் ஆர் சிங் […]
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’தலைவி’ திரைப்படத்திற்காக பரத நாட்டியம் கற்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. ஏ. எல். விஜய் இயக்கத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’யில் நடித்துவரும் பிரபல நடிகை கங்கனா ரனாவத், தன் கதாபாத்திரத்திற்காக மணாலியில் இருக்கும் தனது வீட்டை ஒரு நடனப் பள்ளியாகவே மாற்றியிருப்பது அவரது ரசிகர்களால் சிலாகித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவயது முதலே பரத […]