பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும் என்று திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம் தேதி) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் […]
Tag: #kanimozhi
சென்னை லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் […]
பெரும்பான்மையான இந்துக்களின் பாதுகாவலர்கள் என பாஜகவினர் தங்களை நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை எனவும், திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடைப் போன்றது என்று கனிமொழி எம்பி சாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, […]
தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது திடீரென்று திமுக தொண்டர்கள் லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் […]
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 1 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கும் என கனிமொழி எம்பி தெரிவித்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடர்பான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திராவிட கழக […]
மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை […]
2018ல் இணையதள சேவை அதிகமுறை துண்டிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்ததை கனிமொழி கிண்டல் செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அதிக முறை இணையதள சேவை முடப்பட்ட 8 நாடுகளை உலக குறியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இந்தியா 134 முறை இணையதள சேவை முடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இதனை டேக் செய்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். […]
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தனது சகோதரருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். திமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று 52ஆவது பிறந்தநாள். பிறந்தநாள் குறித்து அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், எனது பிறந்தநாளைக் கொண்டாட தேவையில்லை” என முன்கூட்டியே அறிவித்திருந்தார். அதன்படி, தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாமல் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் […]
குடியிருமை திருத்தச் சட்ட போராட்டம், உயிரிழப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிறந்தநாள் கொண்டாட விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தனது பிறந்தநாளை (ஜனவரி 5ஆம் தேதி) கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளர், எம்.பி கனிமொழி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியிருமை திருத்தச் சட்டம் […]
பெண்கள் சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி அவர்கள் கூறியுள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் சென்னையை பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக ஆக்குவோம் என்ற தலைப்பில் அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பெண்கள் எந்த சூழ்நிலையிலும் காரணமில்லை என்பதை புரிந்துக்கொண்டு தைரியமாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும் என்று […]
மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரைப் பாதுகாக்க முயற்சி நடக்கிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையில் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை ஐஐடியில் படித்த மாணவி ஃபாத்திமா லத்தீப், கடந்த எட்டாம் தேதி விடுதி அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முதலில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தான் மாணவி தற்கொலை செய்தார் என்று கூறப்பட்டிருந்தாலும், பின் அவரின் அலைபேசி குறிப்புகள் மூலம் பேராசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என்று தெரிய வந்தது. தற்போது, […]
கனிமொழிக்கு எதிராக தமிழிசை தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி […]
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வெளிநாடுகளில் நம் மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையெனப் பேசினார். கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டன. அப்போது கனிமொழி பேசுகையில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனம் வேலை தரும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்விற்குச் செல்லவேண்டும், பல நேரங்களில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று தெரியமால் தவற விட்டுவிடுகிறோம் என்று […]
தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடுத்த தேர்தல் வழக்கு மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. ஓன்று கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றொன்று சந்தனகுமார் என்ற வாக்காளர் தரப்பில் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு பதவியில் இருப்பதால் ( தெலுங்கானா ஆளுநர் ) கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை […]
பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார் நீலகிரியில் பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முற்றிலுமாக சேதாரம் அடைந்துள்ளது.நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அரசு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]
ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் , அவருக்கு விளம்பரம் அவசியமில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். நீலகிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட இரண்டு நாட்கள் பார்வையிட்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் எதோ ஓரிரு அமைச்சர்கள் பப்ளிசிட்டி_க்காக வந்துள்ளார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முக.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்றுள்ளதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.பின்னர் இதற்கு ஸ்டாலின் நேற்று இரவு பதிலளித்தார். இந்நிலையில் இன்று இதுகுறித்த […]
திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு 93 வயதில் நீதி மன்றத்தில் தலைவர் என்று பதிவிட்டுள்ளார். திமுக_வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அனுசரித்து வருகின்றனர் . சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் , தொண்டர்கள் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கருணாநிதியின் நினைவையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு #ThankYouகலைஞர் உள்ளிட்ட […]
மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன் இந்த மசோதாவை நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர். மேலும் முத்தலாக் தடை சட்ட விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக , பகுஜன் சமாஜ், ஐக்கிய […]
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது என திமுக MP கனிமொழி தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருந்த […]
தூத்துக்குடி மக்களவையில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக பாஜக தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெருமான்மை இடங்களில் வெற்றி பெற்றது.அதே போல் பாரதிய ஜனதா கட்சியானது தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் கனிமொழியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட்டனர். […]
அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார். தொடர்ந்து […]
ராஜினாமா செய்தார் அமித்ஷா ..!!
பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்து கொண்டார் . மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜகவின் தேசியத் தலைவரான அமித்ஷா தனது மாநிலங்களவை பதவியை இன்று ராஜினாமா செய்தார் .அவரது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது . மேலும் பாஜக சார்பில் புதிய மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதவியேற்றுக்கொண்டார். இதனை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான […]
தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய […]
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்புமனு செய்த பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் அறிவித்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 6 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து பார்க்கலாம் . கன்னியாகுமரி வசந்தகுமார் : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் […]
வருகின்ற 22_ஆம் தேதி முதல் திமுக கூட்டணிக்காக பிரசாரத்தை தொடங்குகிறேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற […]
நாடளுமன்றத்தில் திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி ஒலிப்பார் என்று மதிமுக செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி […]
புதிதாக வெளியில் இருந்து கொண்டு வந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று வாரிசு அரசியல் குறித்து தூத்துக்குடி மக்களவை வேட்பாளர் கனிமொழி பதிலளித்துள்ளார். திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று மாலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி சார்பில் திமுக_வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் கனிமொழி அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து […]