Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. எழுத்தாளருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி எழுத்தாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பலபட்டு இடத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் அரசு வாணிபக் கழக கிடங்கில் எழுத்தாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதன் காரணத்தினால் பாலகிருஷ்ணன் திருத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை டீ குடிப்பதற்காக வீட்டின் அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது திருத்துவபுரம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாமியை தரிசிக்க சென்ற நிர்வாகி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகாமையில் பாலூர் அய்யன்விளையில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் 12 சன்னதிகள் இருக்கின்றது. இந்நிலையில் சன்னதிகளில் தினமும் மாலை நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இதனை அடுத்து காலை நேரத்தில் நிர்வாகி ஒருவர் சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் உள்பட மூன்று சன்னதிகளின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளகாதலியின் செல்போன் நம்பர்…. நண்பருக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

கள்ளக்காதல் பிரச்சனையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூர் பகுதியில் அஜய் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷாலினி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த ஜான்சன் 4 வருடங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கே தொழிலாளியாக வேலை பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கிறிஸ்டோபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வார்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்குறிச்சி ஐக்கரவிளை பகுதியில் கிறிஸ்டோபர்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிற்படுத்தப்பட்ட மாணவருக்கான அரசு விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோபர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது மது அருந்தி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்த கிறிஸ்டோபர் தனது மனைவியான மரியாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை  கேட்டதும் அதிர்ச்சி அடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

‘தக்காளின்னு ஒரு ஊரா?’ – பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகம்

மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் – தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தக்கலை என்ற பெயரை, ஆங்கிலத்தில் THUCKALAY என எழுதுவதால் குழப்பம் ஏற்படுகிறது. அதை வெளியூரைச் சேர்ந்தவர்கள் துக்கலை, துக்காலே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

EPF ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 பிடித்தம் செய்க’ – தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் தற்போது, ஆயிரத்து 500-க்கும் மட்டுமே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வில்சன் கொலையில் ஐ.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு? மேலும் மூன்று பேர் கைது!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் குழுவாகப் பேசிக் கொண்டிருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம் ..!

காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது  செய்யப்பட்ட குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இரண்டு பேரிடமும்  கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வில்சனை கொன்றதற்கான காரணத்தை இருவரும் கூறி உள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலயன் பெருமாள் கோயில் தேரோட்டம் வருகின்ற 09 ஆம் தேதி நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர். இதையொட்டி வருகின்ற 09 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories

Tech |