கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் இருக்கும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் ராஜ்குமார், பகவதி பெருமாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதே போல் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். மொத்தமாக 250 கிலோ பிளாஸ்டிக் […]
Tag: #kanniyakumari
தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூலித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரை கணியான்விளை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். நேற்று மதியம் விக்னேஷ் வீட்டில் இருந்தபோது இரண்டு வாலிபர்கள் வீட்டுக்கு சென்று நாங்கள் சிங்காரபாளையத்தில் இருக்கும் உடல் ஊனமுற்றோர் சமூக நலவாழ்வு தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊனமுற்றோரின் நலனுக்காக நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். அவர்களது பேச்சில் சந்தேகமடைந்த […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி வண்ணான்விளை பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராஜேஸ்வரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரியை தேடி வந்தனர். இந்நிலையில் குழிக்காட்டுவிளை […]
குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்று வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது தனது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கஷாயமும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் சராசரியாக பத்தாயிரம் பேர் வரை மட்டுமே படகு சவாரிக்கும் அழைத்து செல்லப்படுவதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழக அரசு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. தற்போது படகு தளத்தில் போதிய கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தொற்று பாதிப்பாலும் […]
கன்னியாகுமரி கேரளா எல்லைப் பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வருகிறார். இவர் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் ராஜ் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது நண்பர் வெளியே நின்று கொண்டிருந்த போது ராஜ் மட்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென காதலியின் வீட்டில் இருந்து வெளியே […]
குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை முன்னிட்டு வருகிற 1- ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக வருகிற 12-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பணியில் தேவையான பணியாளர்கள் ஈடுபடலாம் என […]
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் கால்வின் ஜோசப் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கால்வின் ஜோசப் வங்கி கணக்கில் உள்ள முதிர்ச்சி அடைந்த பணத்தை வேறு ஒரு கணக்குக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளார். இதனால் வங்கியானது முதிர்வடைந்த தொகையை மட்டும் செலுத்தி அதற்கான வட்டி தொகையை கொடுக்கவில்லை. இதனால் வட்டி படத்தை தருமாறு கால்வின் ஜோசப் வங்கியை அணுகியும் அவர்கள் […]
ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 17-ஆம் தேதி முதல் திருப்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி அன்று அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து, கோதை […]
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அக்கிவிளை பகுதியில் மார்க்கோஸ்(55) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும், இருக்கின்றனர். வெளிநாட்டில் தொழிலாளியாக பணிபுரிந்த மார்க்கோஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் மார்க்கோஸ் குழித்துறை தாமிரபரணி ஆற்றல் குளிப்பதற்காக சென்றுள்ளார். தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென மார்க்கோஸ் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து ஆற்றில் குளித்தவர்கள் மார்க்கோசியின் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பனங்காலவிளை பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரின்(31) என்றால் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெரின் தனது நண்பரான ஜெபிசன்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் வில்லுக்குறி பகுதியில் சென்றபோது ஜெபிசன் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டார் தொகுதியில் இருக்கும் டைல்ஸ் கடையில் 31 ஆயிரத்து 752 ரூபாய் கொடுத்து டைல்ஸ் வாங்கியுள்ளார். அந்த டைல்ஸ் வாங்கிய 4 மாதங்கள் இல்லையே ஓட்டைகள் விழுந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராகேஷ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு டைல்ஸ் கற்களை மாற்றி தருமாறு கேட்டதற்கு கடை உரிமையாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கறிஞர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை கழுவன்திட்டை காலணியில் ரதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஶ்ரீசுமா மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கணவர் பிரிந்து சென்றதால் ஸ்ரீசுமா தனது இரண்டு மகள்களுடன் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகிறார். இதில் இரண்டாவது மகள் அக்ஷயா(16) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு செண்டை மேளம் இசைக்க சென்றுள்ளார். இந்நிலையில் செண்டை மேளம் இசைக்க வந்த சஜின் என்பவருடன் அக்ஷயாவுக்கு விளக்கம் மேற்பட்ட அது காதலாக மாறியது. இதுகுறித்து […]
இரண்டு குமரி மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் சகாய செல்சோ(37) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி(33) என்பவரும் பக்ரைன் நாட்டில் தராப் மாஜித் என்பவரால் அவரது படகில் மீன் பிடிப்பதற்கு பணியில் அமர்த்தபட்டனர். கடந்த 17-ஆம் தேதி இருவரும் மீன்பிடிப்பதற்காக மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 19-ஆம் தேதி அவர்கள் கரை திரும்பி இருக்க […]
கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாணவர்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு பேரை சுற்றி வளைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இறச்சகுளம் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் கணேஷ்(20), பாலிடெக்னிக் மாணவர் தமிழரசன்(19), சக்தி(19) மற்றும் […]
கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னக்குழிவிளை பகுதியில் ஹைஜின் ஜோஸ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜா(38) என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் படுக்கை அறையில் சுஜா தூங்கிக் கொண்டிருந்தபோது மாடி கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனை அடுத்து அந்த மர்ம […]
கழிவு பொருட்கள் ஏற்றி வந்த டெம்போவுக்கு அதிகாரிகள் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சுகாதாரத்தை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்கம்புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டெம்போவை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு […]
பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சஜீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஹென்சா ரோஸ் (9) என்ற மகள் உள்ளார் இந்த சிறுமி ஒயிட் மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி வேனில் வகுப்புக்கு சென்று விட்டு மாலையில் சிறுமி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த வாகனத்தை குணசேகரன் […]
பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பேச்சிபாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 2,198 கன அடி, பெருஞ்சாணி அணிக்கு வினாடிக்கு 140 கனஅடி சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 79 கன அடி, சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 115 கன அடி, […]
நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பரைக்கோடு பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கதால் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து […]
25 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தம்மத்து கோணம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்நிலையில் 3.16 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை தாசில்தார் சஜித் தலைமையில் ஒப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பணியாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நில அளவையாளர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள […]
கல்லூரி மாணவியை நடத்திய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை முள்ளுவிளை பகுதியில் இன்ஜினியரான ஆல்வின்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்வினின் நடவடிக்கை சரியில்லாததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனாலும் ஆல்வின் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால் கோபமடைந்த ஆல்வின் காதலித்தபோது எடுத்த ஆபாச […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிற்றாறு, பெருஞ்சாணி, பேச்சுப்பாறை போன்ற அணை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை குலசேகரம், திருநந்திக்கரை, திற்பரப்பு, சுருளக்கோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் மழையின் காரணமாக […]
நில மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் வாழவிளை பகுதியில் மரிய ரத்தினபாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மரிய ரத்தினபாய்க்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் லாரன்ஸ், மேரி ஆகியோர் கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக முத்திரையை போலியாக தயார் செய்து, கையெழுத்து போட்டு அனுபவ சான்றிதழ் தயாரித்தனர். இதனை அடுத்து அந்த சான்றிதழை பயன்படுத்தி சார்- பதிவாளர் அலுவலகத்தில் […]
நகை வாங்குவது போல நடித்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூசாஸ்தான்விளை பகுதியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நகைகளை திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் அருகே அமைந்துள்ளது. அந்த கடையில் கருணாநிதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாநிதி கடையில் இருந்த போது நகை வாங்க சென்ற 2 வாலிபர்கள் ராசிக்கல் கேட்டுள்ளனர். இதனால் ராசி கல்லை எடுப்பதற்காக […]
13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரேனிபுரம் பகுதியில் ஜான் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2009- ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மரியா அந்தோணி என்பவர் ஜான் சதீஷ்குமாரை 2 பேருடன் இணைந்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதித்த போலீசார் மரிய அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மரிய அந்தோணி […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் வெட்டுக்காட்டுவிளை பகுதியில் நகை செய்யும் தொழிலாளியான சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுனில்குமாருக்கும், சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சுனில்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனில் குமாரின் […]
திறந்தவெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில் புரோட்டா கல்லை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திறந்தவெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு செய்த போது ஹோட்டல்களின் வெளியே […]
தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடகூர் மேல தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 15 வயதுடைய ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதால் தங்கம் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்காமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ரம்யாவை அவரது […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று இரவு திருவட்டார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் திடீரென மழை பெய்தது. இந்நிலையில் ஆற்றூர், மாத்தார், மாத்தூர், சித்திரன்கோடு, இட்டகவேலி, புலியிறங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்கள் கழித்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பாலவிளை பகுதியில் தொழிலதிபரான எட்வின்சன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவரது தொழில் நிறுவனம் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 28 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எட்வின்சன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட எட்வின்சன் “உன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்” இதனை […]
பேருந்து சக்கரத்தில் சிக்கி நர்சின் தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் பகுதியில் ஜோசப்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோசப்பின் மகள் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோசப் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் முத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]
வெடி விபத்தில் வியாபாரி உள்பட 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி திருவிழா தொடங்கியதால் கோவில் வளாகத்தில் தற்காலிகமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த போது வாணவேடிக்கை பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நிலையில் பட்டாசுகள் மேல்நோக்கி செல்லாமல் திடீரென சரிந்ததால் ஆலய வளாகத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் […]
நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கன்னியாக்குளம் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 76 ஆயிரத்து 500 ரூபாய் கடன் வாங்கி தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த புது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றதாக மதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை […]
கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மறவன்குடியிருப்பு பகுதியில் சோனியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சோனியா ஜெயராஜ்(38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அபினாஷ், அபி நிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]
நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்தரபுரம் பகுதியில் கூலித்தொழிலாளியான தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபிதா கிரேஸ்(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திடல் பகுதியில் இருக்கும் தனியா நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவர் கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2 மாணவிகள் கிறிஸ்துதாஸ் வகுப்பறையில் ஆபாசமாக பாடம் நடத்துவதாக புகார் அளித்தனர். அந்த புகாரின் படி குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிந்து கிறிஸ்துதாசை கைது […]
அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் மெயின் ரோடு கீழத்தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் இறந்து விட்டதால் அவரது மனைவி செண்பக வடிவு(84) உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று செண்பக வடிவு அருகில் இருக்கும் சுடலைமாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் கணபதி(76) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலியக்காவிளை பகுதியில் மீன் வியாபாரியான யகோவா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி(26) என்றால் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யகோவா தனது மனைவி மற்றும் மகளுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]
நூதன முறையில் செல்போனை திருடி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி(21) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கரி நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகள் ரயிலில் செல்வது வழக்கம். நேற்று ரயிலில் சிவசங்கரி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் அருகில் ஒரு வாலிபர் […]
கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லடிவிளை சிவந்தமண் என்ற பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவர்களுடைய தாத்தா சந்திரன் பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து பிரபா […]
ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்புவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ராஜூ(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜூ ஆட்டோவுடன் அழகியமண்டபத்தில் நின்று கொண்டிருந்தார். நேற்று காலை மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜூவின் ஆட்டோவிற்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது மர்மமான முறையில் ராஜூ இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் உடனடியாக […]
அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று தேங்காப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உதச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆட்களை இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜின் என்பவர் திடீரென பேருந்து முன்பு வந்து நின்று தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்து மீது வீசியதால் முன் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை பொட்டல்குழி பகுதியில் சகாய வால்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டஸ்கின் ஜோந்த்(6) மற்றும் 1 வயது மகன் இருந்துள்ளார். டஸ்கின் ஜோந்த் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளான். இதனை அடுத்து வீட்டிற்கு […]
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் ஆலங்காடு புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான வேல்சாமி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேல்சாமி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபதி கோபத்தில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் குடிபோதையில் […]
மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத சுறா மீன்கள் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியதால் குறைந்த அளவிலான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனை அடுத்து சூறாவளி காற்று பலமாக வீசியதால் விரைவாக மீனவர்கள் கரை திரும்பினர். இந்நிலையில் ஒரு படகில் இருந்த மீனவர்களின் வலையில் 200 மற்றும் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன்கள் சிக்கியது. […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த தம்பதி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். உடனடியாக அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட பொதுமக்களும், […]
தண்ணீரில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரைபந்திவிளை பகுதியில் செல்லப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லதங்கம்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்லதங்கம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் சில வாலிபர்கள் உடனடியாக செல்ல தங்கத்தை மீட்டு ஆட்டோ மூலம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டி பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் […]
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 29-ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குலசேகரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், அழகிய மண்டபம் ஆகிய […]