Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறையில் இருந்து வந்த துர்நாற்றம்…. விடுதியில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விடுதியில் அறை எடுத்து தங்கி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கடந்த 30-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளுடன் தீக்குளித்த தாய்…. நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையில் தாய் மகளுடன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அண்டுகோடு ஈந்திகாலை பகுதியில் கிஷோர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகி(38) என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு சாய் கிருஷ்ணா(10) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனி அறைக்கு தூங்கு சென்ற சகியும், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த ஓட்டுநர்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஓட்டுநரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அச்சன்குளத்தில் ஓட்டுநரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சுரேஷ் தூங்கியுள்ளார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் சுரேஷை எழுப்பி அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியதோடு ஆட்டோவின் முன்புற கண்ணாடியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரண்டு துண்டாக உடைந்த வாகனம்…. உடல் கருகி இறந்த இன்ஜினியர்…. நெல்லையில் கோர விபத்து….!!

பந்தயத்தில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் காவலர் குடியிருப்பு பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான உதயா என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயா மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் உதயா நாகர்கோவிலிலிருந்து பாளையங்கோட்டை சிவந்திபட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இங்கிருந்து ரஷ்யா 40 கி.மீ தூரம் தான்” பதுங்கு குழியில் தவிக்கும் மாணவர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்கு குழிகளில் தவிக்கிறோம் என உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் கீழ்விளையை சேர்ந்த ஜெயின்ஸ் என்ற மருத்துவ மாணவர் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கிறார். அவருடன் ஸ்டெனிபர் ஜான், பபின், அஜ்மல் அலி போன்ற மாணவர்களும் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஜெயின்ஸ் தனது அண்ணனுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது, நாங்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றிலும் போர் நடக்கிறது. இதனால் எப்போதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு…. கணவரின் வெறிச்செயல்….. போலீஸ் விசாரணை….!!

வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இறச்சகுளம் அருள் ஞான புரம் பகுதியில் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சாந்தி தனது ஸ்கூட்டரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் இறச்சகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் தொழிலாளியான ஆல்பர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்பர்ட் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆல்பர்ட் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சண்டை போட்டதால் வந்த காயமா….? நகர முடியாமல் சிரமப்படும் யானை…. வனத்துறையினரின் முயற்சி…!!

காயத்துடன் சிரமப்படும் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் டாப்சிலிப்-பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் அந்த யானை ஒரே இடத்தில் நின்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற சோதனை…. கிலோகணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்குள்  ஹசன் 25 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோணம் பகுதியில் இருந்து தேரூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தட்டான்விளை பகுதியில் வசிக்கும் பாபு, சுரேஷ் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவருக்கு மருந்து வாங்க சென்ற பெண்…. பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொலையாவட்டம் கோட்டவிளை பகுதியில் கூலி தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ராமனுக்கு மருந்து வாங்குவதற்காக ஏஞ்சல் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஏஞ்சல் பேருந்தில் சென்றுள்ளார். அதன்பின் தொலையாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய டெம்போ….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குமரியில் பரபரப்பு…!!

டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் கோழி இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது நண்பரான சுப்பிரமணியன் என்பவருடன் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக டெம்போவில் பணகுடி நோக்கி சென்றுள்ளார். இந்த டெம்போவை எப்சன் ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளமடம் கிறிஸ்து நகர் பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு கிருஷ்ணன் கோவில் பகுதியில் எலக்ட்ரீசியனான விபின் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விபினின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விபினை அவரது தாயார் சுகுமாரி கண்டித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சுகுமாரி சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விபின் வீட்டில் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்….. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் துறை மீனவ கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் பனிதாசன் உள்பட 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 28 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பனிதாசன் எதிர்பாராதவிதமாக தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் பிரபு, ஜெயசிங் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் 3 பேரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாந்தி நகர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முள்ளங்கினாவிளை பகுதியில் சேம் பென்னட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பென்சேக் தனது நண்பரான சிஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் சடையன்குழி பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே ஒரு ஆட்டோ சென்றுள்ளது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து அறுந்து கிடந்த மின்கம்பியை ஆகாஷ் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷின் சடலத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீனவரின் நிலை என்ன…..? பரிதவிக்கும் குடும்பத்தினர்…. தேடுதல் பணி தீவிரம்…!!

கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் இரண்டு நாட்களுக்கு பிறகும் கிடைக்காததால் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை கிராமத்தில் வசிக்கும் பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ஜெபமணி என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு வந்த வாலிபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியை சண்முகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லதாவின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிகரெட் இருக்கிறதா என கேட்டுள்ளனர். இதனால் சிகரெட்டை எடுப்பதற்காக லதா திரும்பியபோது ஒரு வாலிபர் லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டார். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்…. வாலிபர்கள் செய்த செயல்…. குமரியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டை தாக்கிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் காவல் நிலையத்தில் மகேஷ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை கிழக்கம்பாகம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மகேஷ் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்களும் மகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கொத்தனாருக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொத்தனாரான வசந்த குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். சில நாட்களில் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் வசந்தகுமார் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் வசந்தகுமார் ஆசாரிபள்ளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பாம்பன் விளை பாலம் அருகில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த கணவர்….. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் செல்வம் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தனுசியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனுசியா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுசுயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு…. போலீஸ் விசாரணை…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் வீட்டிற்குள் நுழைந்து கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் 12-வது வார்டு வாக்குச்சாவடியில் வெளியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் 18 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரை விரட்டி சென்ற அதிகாரிகள்…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் வலைவீச்சு…!!

காரில் கடத்தி சென்ற ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்ததாஸ் வருவாய் ஆய்வாளர் ராஜகுமார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவை நோக்கி வேகமாக சென்ற சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கார் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அச்சத்தில் கார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமநல்லூர் சாத்தான் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நிசாந்த் தனது தாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாயார் பணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. குமரியில் கோர விபத்து…!!

அதிவேகமாக சென்ற சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபத்தில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் ஒன்றை திங்கள்நகர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் பரப்பை என்ற இடத்தில் ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை கவனிக்காமல் அதிவேகமாக சென்ற சொகுசு கார் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் வின்சர் என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வின்சர் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வின்சர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வின்சர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி பகுதியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ அரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவ அரசு தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஞ்சினியரிங் கல்லூரி மாணவரான லிஜோஸ் என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் தேவ அரசுவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை…. மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்…. வரவேற்ற அதிகாரிகள்…!!

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் வந்து கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அம்பிகா சோனி என்பவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அம்பிகா சோனி கடந்த 12-ஆம் தேதி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் அம்பிகா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாயார்…. வீட்டில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷை அவரது தை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு சுரேஷ் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குமரியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறிச்சி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் ஆல்பர்ட் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தேங்காப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட்டின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆல்பர்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

சாலையின் நடுவே ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மழுவன்சேரியில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு வனத்துறையினர் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜான் இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மேரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ குடித்த கல்லூரி மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பகுதியில் ஜஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயின் என்ற மகன் மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயின் ஆசாரிபள்ளம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று இரவு நேரத்தில் டீ குடித்துள்ளார். அப்போது ஜெயின் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வண்டியை காணும்” தவறாக இருந்த பேரூராட்சியின் பெயர்…. குழப்பமடைந்த ஊழியர்கள்…!!

பேரூராட்சியின் பெயரை வாகனத்தில் தவறாக எழுதி இருந்ததால் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் குழப்பமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு வாகனங்களில் கோதநல்லூர் பேரூராட்சிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கோதநல்லூர் பேரூராட்சி வாகனம் இல்லாததால் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். அப்போதுதான் வாகனத்தில் கொத்தநல்லூர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் விசாக் என்பவர் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்து சினிமா துறையில் உதவி எடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விசாக் தனது அறையின் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கர சம்பவம்….!! கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சடலம்…. குமரியில் பெரும் பரபரப்பு…!!

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற மனைவி…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹோட்டல் ஊழியரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் உமா தேங்காப்பட்டணத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு நேரத்தில் உமா ஐயப்பனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 500 கிலோ எடை…. வலையில் சிக்கிய ராட்சத மீன்…. போட்டி போட்டு ஏலம் எடுத்த வியாபாரிகள்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீனை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விசைப்படகு மீனவர்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்க அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து பிறகு மீனவர்கள் 4 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிக்கும் 6 மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு தயாராகிய இளம்பெண்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கனகப்பபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான ஷர்மி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வங்கிப்பணிக்கான தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக ஒரு பயிற்சி வகுப்புக்கு ஷர்மி சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு ஷர்மி மாடியில் இருக்கும் அறைக்கு தூங்க சென்றுள்ளார். அதிகாலை நீண்ட நேரமாகியும் ஷர்மி அறையிலிருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் கதவை உடைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அங்க கள்ளத்துப்பாக்கி இருக்கு” தி.மு.க பிரமுகரின் வீட்டில் அதிரடி சோதனை…. போலீஸ் விசாரணை…!!

கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தி.மு.க பிரமுகரின் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் தி.மு. க பிரமுகரான பெர்னார்டு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளத்துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பெர்னார்டின் வீட்டிற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் கள்ளத் துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை SUSPEND பண்ணிட்டாங்க” ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தபால் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிய போக முடியல…. கடித்து குதறும் வெறிநாய்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வெறிநாய்கள் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராம பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த வாரம் சின்னதுறை பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் புகுந்து நாய் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் உட்பட 3 பேரை கடித்து குதறியது. மேலும் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமண நாள் அன்று….. திடீரென மாயமான மணப்பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருமண நாளன்று இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு மணப்பெண்ணின் குடும்பத்தினர் மதுரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு 1 மணி அளவில் குளியலறைக்கு சென்ற மணப்பெண் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுழற்றியடித்த சூறைக்காற்று…. 23 மீனவர்களுடன் கவிழ்ந்த படகு…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

சூறைக்காற்றால் 23 மீனவர்களுடன் விசைப்படகு நடுக்கடலில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கிறிஸ்துராஜா நகர் பகுதியில் விசைப்படகு உரிமையாளரான அர்த்தனாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விசைப்படகில் 23  மீனவர்களை ஏற்றிக்கொண்டு மீன் பிடிப்பதற்காக முட்டம் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் திடீரென சூறைக்காற்று அடித்துள்ளது. இந்நிலையில் அலைகள் 6-12 அடி வரை எழுந்ததால் விசைப்படகுக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் விசைப்படகில் கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் அதனைப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. டெய்லரை வற்புறுத்திய நபர்…. பின் நடந்த சோகம்…!!

பிரிந்து சென்ற மனைவியால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுவிலை பகுதியில் டெயிலாரான சுரேஷ் வசித்து வந்தார். சுரேஷின் மனைவி ஒரு வருடத்திற்கு முன் வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனே சென்று விட்டார். இந்நிலையில் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க சொல்லி அந்த நபர் சுரேஷை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சுரேஷ் தனது  வீட்டு சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தவறுதலாக ஏறிய பெண்…. ஓட்டுநரை தாக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை 2 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பரக்குடிவிளை தோட்டவாரம் பகுதியில் போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனை ஓட்டுனரான பரமேஸ்வரன் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டத்திலிருந்து மேல்மிடாலம் செல்லும் பேருந்தை இயக்கி கொண்டு வந்துள்ளார். அப்போது ஒரு பெண் பைங்குளம் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் பேருந்தில் ஏறிய பிறகுதான் அது அந்த ஊருக்கு செல்லாது என்பது தெரியவந்துள்ளது. உடனே அந்த பெண் பேருந்தை நிறுத்துமாறு கூறியும் பரமேஸ்வரன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 508 சிலைகள்…. பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜை…. பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ….!!

இந்து மகாசபா சார்பில் வழங்கப்பட்ட 508 பிள்ளையார் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு  இந்து மகாசபாவின்  சார்பில் 508 விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 10-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகள் மற்றும் பொது இடங்களில் பிள்ளையாரின் சிலையை வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்த பிறகு அதனை எடுத்துச் சென்று ஆறு, குளம் போன்றவற்றில் கரைத்து விடுவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைசி வரை போராடிய பெண்…. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் நிலவாணி விளை பகுதியில் ஓய்வு பெற்ற காவலரான பத்ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா பாய் என்ற மனைவி உள்ளார். இவர் விளவங்கோடு தாலுகா அலுவலத்தில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்ற ஸ்டெல்லா பாயிடமிருந்து அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 5 1/2 பவுன் நகையை பறிக்க முயற்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

ஆசிரியரை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராணி அப்பகுதியில் இருக்கும் கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ராணி குளித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். அதில் ஒரு வாலிபர் கால்வாய்க்குள் […]

Categories

Tech |