துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடற்கூறாய்வின்போது ஆறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தற்போது தெரியவந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்திகுத்து காயம் இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. […]
Tag: #kanniyakumari
தமிழ்நாடு- கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினரிடம் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியில் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் நேற்று இரவு காவல் பணியிலிருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐந்து தனிப்படைகள் […]
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய […]
கன்னியகுமாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பில்டிங் காண்ட்ராக்டரை பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை அடுத்த தெரிசனங்கோப்பு நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பில்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவரை அம்பலத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேவானந்தாவை பலமுறை கண்டித்தும் உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டது. […]
கன்னியகுமாரியில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர்விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதை கண்ட ஊர்மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்பதும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி […]
முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாகக் குளிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மிதவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று தொடங்கி, வரும் 2020 ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதையொட்டி, பக்தர்கள் […]
நாகர்கோவிலில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 850 ரூபாய் வாடகை தொகையை செலுத்தாமல் இருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி பாரபட்சமின்றி சீல்வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலைய அலுவலகங்கள் டீ கடைகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டு வருவது வழக்கம். அந்த கடைகளை ஏலம் எடுக்கும் கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் அங்குள்ள கடைகளில் ஆம்னி […]
பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோமென காங்கிரஸ் MP வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வில்லை என்றால் வருகின்ற 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் […]
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் […]
கன்னியாகுமாரியில் மின்சாரம் வரவழைக்க கம்பியை ஈரக்கம்பால் இளைஞர்கள் 3 பேர் தட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த குற்றியாபுரம் மலைக்கிராமத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டு விட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் அந்த ஊர் இளைஞர்கள் மூன்று பேர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் மின்சாரம் கடத்தும் இடத்திற்கு சென்று அங்கிருந்த கம்பியை ஈரக்கம்பால் தட்டி மின்சார […]
கன்னியாகுமரியில் டியூசன் ஆசிரியரை 16 வயது மாணவன் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிஎட் பட்டம் முடித்த 25 வயது இளம்பெண் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின் ஆசிரியர் சத்தமிட உன்னை சும்மா விட்டால் […]
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சி மல்லி போன்ற பூவின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஒரு பெரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைய மறுபுறம் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தை மற்றும் பூச்சிகளை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த குழந்தைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு இறக்குமதி செய்யப்படும் மலர்கள் கேரளா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு […]
கன்னியாகுமரியில் ‘தங்கப் புதையல் வழக்கில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை விசாரணைக்கு நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அப்பகுதியில் வசித்து வந்தவர் ஜெர்லின். இவர் அதே பகுதியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜெர்லினுக்கு திடீரென தங்க புதையல் கிடைத்ததாகவும், அதனால் வசதி வாய்ப்பு வந்ததாகவும் ஊரில் பலர் பேசிக் கொண்டனர். இதனை நம்பி ஜெகன் என்பவர் ஜெர்லினை 6 பேரின் […]
‘என்மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலங்குடி என்னும் இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். தேர்தல் அலுவலர் ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாங்குநேரி தொகுதி […]
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் […]
தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு […]
நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப்பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன், தன் தொடக்க கல்வியை பயின்றார்.இந்தப் பள்ளியில் அமைந்துள்ள சத்துணவுக்கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. உடனடியாக பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக நின்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதால் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புனல் நகர் சந்திப்பில் அரசு பேருந்து வந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் அந்த நபர் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்களில் சிலர் பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த பத்துக்கும் […]
கன்னியாகுமரியில் கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தகுமாரின் மாமன் மகளான ஜெர்சியை வெட்டிக்கொன்ற சாஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமார் என்பவரை கொல்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி விட்டுள்ளார். ஆனால் சாந்தகுமாரை கொலை செய்யாமல் […]
கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
கன்னியகுமாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடத்திட்டத்தின் படி ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கல் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார் மாணவரின் ஜோசப் இவரை அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் […]
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு சூறாவெளியுடன் கூடிய பலத்த கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மே 4 ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் ,தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. திண்டுக்கல், […]
கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் . தொடர்ந்து பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குளுகுளுவென கொட்டித்தீர்க்கும் அருவியில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள், குளியலிட்டு மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர் .
கன்னியாகுமரி மாவட்டம் , உதயகிரி கோட்டையில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும் உதயகிரி கோட்டையை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி பயணிகள் பலர் வந்துள்ளனர். இங்கு மான்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் உள்ளது .
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள்,வேறுவழியின்றி கடற்கரையில் நின்றபடியே திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். மீண்டும் கடல் சீற்றம் குறைந்த உடன் படகு சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
கன்னியாகுமரியில் , பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர் 16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான். அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் […]
இரணி அருகே 8_ஆம் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் இரணி காரங்காட்டில் உள்ள நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். அஜிஷா எனும் இவரின் மகள் நாகர்கோவிலில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு இறுதிதேர்வினை எழுத சென்றிருக்கிறார் . தேர்வு எழுதி முடித்தி விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய அஜிஷா சிறிது நேரம் விளையாடி வந்துள்ளார்.திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது […]
பெட்ரோலை குடித்து டென்னிஸ் என்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் மீன் வியாபாரம் செய்து வருபவர் டென்னிஸ். வழக்கம்போல் மீன்களை வியாபாரம் செய்து கொண்டு வரும் வேளையில் அதிக தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார் அந்த பாட்டிலில் காருக்கு பயன்படுத்தும் பெட்ரோலானது நிரப்பப்பட்டிருந்தது அதனை டென்னிஸ் தண்ணீர் என்று நினைத்து பாட்டிலில் […]