தாய் இறந்த துக்கத்தில் மகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான வேலம்மாள்(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பகவதி அம்மாள்(57) என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக வேலம்மாள் உயிரிழந்து விட்டார். நேற்று மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தாயின் உடல் அருகே அமர்ந்து அழுது […]
Tag: #kanyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு மாணவி தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தத்தையார்குளம் பகுதியில் ஜோஸ் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பெயிண்டரான அமலனுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லை. இதனால் அனிதா சுய உதவிக் குழுவின் மூலம் தனியார் வங்கியில் குடும்பத்தை நடத்துவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதற்கிடையே கடனை அடைக்கும்படி வங்கியில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் குகநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் புரட்டாசி மாத நட்சத்திரம் தண்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனை அடுத்து 1008 சங்குகள் சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை செய்ய ப்பட்டு பின்னர் குகநாதீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு […]
மருந்து கடைகளில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களும், வாலிபர்களும் போதை, கஞ்சா, புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின் படி போலீசார் காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய முக்கிய பகுதிகளில் இருக்கும் மருந்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் ஏதேனும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்குன்று பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டிற்கு சென்ற ஒரு பெண் தாலி தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்துள்ளார். அப்போது அந்த பெண் கூறியதை கேட்டு தங்கம் 30 பவுன் நகையை பூஜையில் வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தங்க நகைகளை துணியில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் சிகர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை அடுத்து பரிவேட்டை மண்டபத்தை அடைந்த அம்மன் பாணாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் […]
ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வடக்கூர் அம்மன் கோவில் தெருவில் முருகன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதமே ஆன மாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலை தொடர்பாக குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற முருகன் மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்த ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட கோவில் ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் அதிகாலை 4-30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இதனையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு […]
கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர்-கேரளா எல்லையான வழிகடவில் கேரளாவை சேர்ந்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்கள் குறிப்பாக கூடலூரில் இருந்து வரும் வாகனங்களை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சமயத்தில் கூடலூரில் இருந்து ஒரு ஜீப்பில் வந்த தம்பதியை நிறுத்தி உள்ளனர். அந்த ஜீப்பிற்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு […]
துறைமுகத்தை திறந்து விசைப்படகுகளில் உள்ள மீன்களை மீனவர்கள் விற்பனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தின் முக துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதை ஆகிவிட்டது. இங்கு இதுவரை 29 மீனவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் ரூபாய் […]
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, சத்சங்கம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலையில் சுமங்கலி பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது. 13-ஆம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு […]
கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து வழக்கம்போல் இல்லாமல் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கமான ஒன்றாகும். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் […]
வங்கிக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் சாம் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிஸ்டிலரி சாலையில் இருக்கும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்னையா சம்பந்தப்பட்ட வங்கியிலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால் […]
வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த உடும்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டு மாடியில் உடும்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்த சேகர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காப்பாளர் சிவராமன், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் உடும்பை பத்திரமாக பிடித்தனர். இதனை எடுத்து பிடிபட்ட உடும்பு காட்டில் விடப்பட்டது.
தோட்டத்திற்குள் புகுந்த அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெள்ளாந்தி பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடையார்கோணம் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து 1200 வாழைகளை பயிரிட்டுள்ளார். கடந்த மாதம் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் 700 வாழைகளை நாசம் செய்தது. நேற்று முன்தினம் மீண்டும் பால்ராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் 50 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்தது. இதுகுறித்து அறிந்த […]
பாதயாத்திரையை பார்க்க சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புலியூர்குறிச்சியில் புனித தேவசகாயம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:30 மணி அளவில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை துவங்கியுள்ளார். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது குளச்சலை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த மூதாட்டி மயங்கி சாலையில் விழுந்தார். […]
ஹோட்டலில் இருந்த 500 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டதி பள்ளி பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் கெட்டுப் போன மீன்களை சமைத்து உணவு செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாநகர நல அதிகாரி ராம்குமார் தலைமையிலான சுகாதாரதுறை அதிகாரிகள் நேற்று காலை சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது ஹோட்டலில் பதப்படுத்த எந்த வசதியும் இல்லாமல், ஐஸ் கட்டிகள் மட்டும் […]
ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் வெள்ள அபாயத்தை தடுக்கும் பொருட்டு கடந்த 6-ஆம் தேதி முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் […]
படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல குறும்பனை பகுதியில் மீனவரான ஜஸ்டின்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜஸ்டின் அதே பகுதியில் வசிக்கும் சில மீனவர்களுடன் பைபர் படகில் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென ஜஸ்டின் படகில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பி ஜஸ்டினை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு புதுச்சேரிவிளை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் சுஜின்(22) என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுஜின் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜின் தனது நண்பரான ஜினு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் […]
பூச்சி மருந்து அடித்தபோது மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் சாஸ்தான் கோவில் தெருவில் நேசையன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான நேசையன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வாழை தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்த முதியவரை அவரது மனைவியும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது பூச்சி மருந்து அடித்தபோது அதனை சுவாசித்ததால் […]
விநாயகர் சிலையுடன் சென்ற டெம்போ பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஒன்றிய பகுதியில் நேற்று மாலை விநாயகர் சிலையை கரைப்பதற்காக பள்ளிகொண்டான் அணைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். மேலும் பூதப்பாண்டி உச்சமாகாளி அம்மன் கோவில் பகுதியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையையும் டெம்போவில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அந்த வாகனம் கண்டன்குழி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிலைக்கும், டெம்போவில் […]
பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டி.வி.டி காலனி செந்தூரன் நகரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு இருக்கிறது. இந்த கிணறு தற்போது குப்பைகள் நிறைந்து பாழடைந்து காணப்படுவதால் கழிவு நீரும் தேங்கி கிடைக்கிறது. நேற்று கிணற்றில் மனித எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களை […]
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்களிடம் 15 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த ராம்குமார்(23) மற்றும் அரவிந்த்(23) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது […]
கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகுறும்பனை பகுதியில் தேவதாசன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேவதாசன் கடலில் வீசிய வலையை இழுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் உணவு சாப்பிட்டு விட்டு கடல் நீரில் கையை கழுவிய போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தால் தேவதாசன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த குளச்சல் […]
மதுபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முழங்குழி தூணுமூட்டுகுளம் பகுதியில் மெக்கானிக்கான சுனில்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜி(24) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது போதையில் சுனில் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி அருகில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தில் சுனில் தலை குப்புற விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]
ஹோட்டலில் திருடிய துப்புரவு பணியாளர் உள்பட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் தெற்கு பஜாரில் இருக்கும் பிரபல ஹோட்டலின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 40 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் மைக்கேல்ராஜ் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் நாகராஜன் […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷ்ணவி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் மங்கலக்குன்று பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற வைஷ்ணவி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வைஷ்ணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ஜெயக்குமார் கருங்கல் காவல் நிலையத்தில் […]
கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அச்சன்குளம் ஓடை தெருவில் விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் ராஜா(24), சுரேஷ் ராஜா(22) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சுரேஷ் ராஜா மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிலருடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் சுரேஷ் ராஜா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். […]
டெம்போ சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு மீனச்சொல் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தீபக் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒற்றாமரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் தீபக் […]
கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சந்தை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாபான் அதீஸ்(23) என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
பேருந்து மீது மோட்டார் சேர்க்கும் போது விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வினுக்கானந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பாலூர் சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மோசஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோசஸ்(25) மற்றும் அவருடன் வந்த ஜஸ்டின்(19) ஆகிய […]
விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் சர்ச் தெருவில் ஜஸ்டின்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 9-ஆம் தேதி 25 மீனவர்களுடன் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஜஸ்டின் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ஜஸ்டினை சக மீனவர்கள் மீட்டு படகை கரைக்கு திருப்பினர். ஆனால் […]
டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோட்டவாரம் பாலத்தோப்பு விளை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷெர்லின்(29) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷெர்லின் தனது நண்பரான விஜின்(25) என்பவருடன் அழகிய மண்டபம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் வீயன்னூர் தோட்டத்து விளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் புது கிராமம் பகுதியில் கொத்தனாரான பிரவீன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 16 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கூறிய தகவலை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சடைந்தனர். அதாவது மாணவியின் தாயார் கடைக்கு […]
13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சசி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சசிக்கும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த சசி […]
பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 20 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்நிலையில் பேருந்து நிலையத்தை சுற்றி இருக்கும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று குளச்சல் போக்குவரத்து போலீசார் பேருந்து […]
பத்மநாபபுரம் கோட்டை சுவரில் வளர்ந்து நிற்கும் செடி மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றிலும் கம்பீரமான கல்கோட்டை சுவர் அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாக பத்மநாபபுரம் ஆர்.சி தெரு பக்கமுள்ள சுவரின் ஒரு பாகம் இடிந்து விழுந்தது. மேலும் கோட்டை சுவரின் மீது வளர்ந்து நின்ற மரம் சுவரை பெயர்த்து கொண்டு வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர். நேற்று […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முழுக்கோடு அழகனாமூலை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அல்போன்சா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அல்போன்சா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டில் […]
விவசாயியை தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் விவசாயியான சேகர்(45) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ராமஜெயம்(70), அவரது மகன் பிரபு(35) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சேகருக்கும், ராமஜெயத்தின் குடும்பத்தினருக்கும் இடையே ஊர் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராமஜெயம் தனது மகனுடன் இணைந்து சேகரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]
பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் தொழிலாளியான செல்வகுமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணனான நேசமணி(38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வட்டக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுசீந்திரம் பழைய பாலம் வளைவு பகுதிக்கு வந்த போது முன்னால் சென்ற அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலைதடுமாறி கீழே […]
டெம்போவில் கடத்தி சென்ற ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய் மொழியில் இருந்து டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் துவரங்காடு பகுதியில் சென்ற ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் டெம்போ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெம்போவில் 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மனைவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது […]
மருத்துவமனை ஊழியரை கள்ளக்காதலி கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பெண் அவசர உதவி தொலைபேசி எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு போலீசாரை உடனடியாக அனுப்பி வையுங்கள். மருத்துவமனையில் பெரிய பிரச்சனை என கூறியுள்ளார். அந்த தகவலின் படி போலீஸ் ஏட்டு ஒருவர் அங்கு சென்று பார்த்தபோது ரத்தக்கரை படிந்த சேலையை கட்டிய ஒரு பெண் அங்கு […]
நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் 8-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த தனேஷ்(20) என்பவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின்னர் […]
அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று சாரல் மழையுடன், குளுமையான காற்று வீசியது. இந்த சீசனை அனுபவிக்க நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்தனர். இந்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் திரண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரோடு ரோலர் எந்திர ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பெருவிளை பகுதியில் ஹரி(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரோடு ரோலர் எந்திரத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமிதா(40) என்ற மனைவியும், சுஜன்(15) என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஹரி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சுங்கான்கடை குதிரைபாய்ந்தான் குளம் அருகே […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி விளாங்காட்டு காலனியில் தொழிலாளியான இசக்கியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இசக்கியப்பன் அடிக்கடி பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது குடித்து செலவழித்துள்ளார். சம்பவத்தன்று இசக்கியப்பன் மது குடிப்பதற்காக பணம் கேட்டு சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் கொடுப்பதற்கு […]