தங்க சங்கிலியை பறிப்பதற்காக ஒரு பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் புனத்து விளை பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜெயா அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மேரி முளகு மூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]
Tag: #kanyakumari
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் போலீசாருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, அங்கிருந்த ஒரு வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அங்கு உள்ள அறைகளில் சோதனை […]
முன்னாள் ராணுவ வீரர் பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபத்தை சார்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி மேரி ஜெயா அமுதா. இவர் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் நடந்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த மெர்லின்ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் நகையை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது மேரி ஜெயா கூச்சலிட்டதால் அவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் […]
தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட் செல்லும் சாலையில் பெரும்பாலான பகுதிளில் அலங்கார தரைக் கற்கள் பதிக்கப்பட்டு, ரயில்வே சாலை மட்டும் சீரமைக்க படாமல் இருந்துள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சி பொது நிதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சிமெண்ட் தளம் போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் கிடந்த கழிவு மண்ணை அகற்றாமலும், தரமற்ற […]
பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு கண்டக்டர்கள் இல்லாமல் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நெல்லைக்கு நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் செல்வதற்கு 1.45 மணி நேரம் ஆகும் காரணத்தால் நெல்லைக்கு என்ட் டு என்ட் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து போக்குவரத்து கழகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று என்ட் டு என்ட் பேருந்துகளை […]
மலையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டு அந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கால்வாயில் திடீரென ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்ததால் குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார் குளத்தில் நாஞ்சில் புத்தனார் கால்வாய் இருக்கின்றது. இந்த கால்வாயில் குளிக்க சென்ற நபர்கள் வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வருவதைக் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய […]
தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற காரணத்தால், இந்த மாணவியும், அவரது அக்காவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டிற்கு […]
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. […]
கழிவறையில் கேமரா பொருத்தி பெண்களை ஆபாச படம் பிடித்த குற்றத்திற்காக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை செட்டிகுளம் சற்குண வீதியில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் கழிவறைக்கு சென்ற பெண் சுவரில் ஏதோ வித்தியாசமான ஒரு கருவி […]
ரேஷன் கடை விற்பனையாளர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் வடக்கூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் 250 ரேஷன் கார்டுகளுக்கு வழங்கவில்லை. அப்போது கடை விற்பனையாளரிடம் பொதுமக்கள் சென்று கேட்டபோது, மறுநாள் விற்பனை செய்யப்படும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்படி மறுநாள் […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் தெருவில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மன்சூரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகமது ஆதம்பா என்ற மகனும், பாத்திமா மற்றும் ஷகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவரது மகன் முகமது என்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் ஏட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், தாரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மணிமுத்தாறு […]
குடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள-குமரி எல்லை பகுதியான பனச்சமூடு பகுதியை புலியூர் சாலையை சார்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் பெட்ரோல் வாசம் வீசப்படுவதால் சந்தேகமடைந்த கோபி கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து ஒரு வாளியில் ஊற்றி தீவைத்து சோதித்து […]
டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை மின்வாரிய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து விட்டது. இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. […]
கிணற்றில் உள்ள தண்ணீரில் பெட்ரோல் கலந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி கேரள எல்லைப்பகுதியான பனச்சமூடு, புளியூர்சாலை என்ற பகுதியில் கோபி என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு இருக்கின்றது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கோபியின் குடும்பத்தினர் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரில் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோபி தண்ணீரை வாளியில் எடுத்து தீ வைத்தபோது, தண்ணீரானது […]
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லூர்து மாதா தெருவில் மேரி ஸ்டானிஸ்டா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே மேரி ஸ்டானிஸ்டா சோகமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடியாக கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து […]
வருகின்ற 25ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் நாட்டும் விழா நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆலயம் 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆன நிலையில் இந்து சமய அறநிலையத் துறையும், பக்தர்கள் சங்கமும் இணைந்து இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2007ஆம் […]
மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டில்பாடு என்ற பகுதியில் சிலுவை இருதயம் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் மனமுடைந்த சிலுவை இருதயம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இவருக்கு 2 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகளுக்கு […]
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மைக்கேல் சுந்தர்ராஜ், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் போன்றோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐரேனிபுரம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவ்வழியில் வேகமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினார். ஆனால் டெம்போ டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். எனவே அதிகாரிகள் […]
வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக ரூபாய் 1 கோடியே 15 லட்சம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மயிலாடியில் வசித்து வந்த சாய் ராம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தார். அப்போது முத்தையா என்பவர் சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் பணியாற்றியபோது அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் […]
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் அரிசியையும், கடத்த பயன்படுத்திய லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக வந்த தகவலின்படி அதனை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட வழங்கல் அதிகாரி சுவராஜ் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், வருவாய் துறை பறக்கும்படை தனி தாசில்தார் பாபு ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு ரோந்து […]
கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் அச்சுகிராமம் பகுதியில் மயிலாடியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று காலை ஆலயத்தை திறப்பதற்காக வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அவர்கள் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணம் திருடப்பட்டு இருந்ததை கண்டார். மேலும் செபரூதின் […]
மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் ஷைபின் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபினா என்பவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து ஷைபினுக்கு குடிப்பழக்கம் இருப்பது அபினாவிற்க்கு தெரியவர, கணவன் […]
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்லேன் என்ற தெருவில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இவருக்கு அன்பரசு இம்மானுவேல் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டின் அருகே அன்பரசு […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை பகுதியில் லெனின் என்பவர் தனது மனைவி ரம்யாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த பெர்தின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் லெனின் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் அவரது மனைவி ரம்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த பெர்த்தின் அங்கிருந்த டிவி, கதவுகள் மற்றும் ஜன்னல்களை […]
கன்னியாகுமரியில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனையடுத்து கடல் பகுதியில் காற்றின் வேகமும், கடல் அலைகளும் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்ட போதிலும், விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல […]
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஹோட்டல்களிலும் டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டப்படும். இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அந்த […]
கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு செல்ல முடியாத ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பத்துக்கானி சாஸ்தா கோவிலில் இருமுடி கட்டி சென்று வழிபாடு வழிபட்டு வருகின்றனர். சபரிமலை மண்டல பூஜை , மகரவிளக்கு விழாவிற்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐய்யப்ப பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் காளி மலை உச்சியில் உள்ள வன சாஸ்தா கோவிலுக்கு இருமுடி கட்டி செல்ல […]
நினைத்ததை நிறைவேற்றும் முப்பந்தல் இசக்கியம்மன், குழந்தை வரம் கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அளித்து அருள்புரிவாள். முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ள இடம்: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது. இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்… கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். முப்பந்தல் […]
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரியில் ஆள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. காதலர் தினம் என்றாலே காதலர்கள் கடற்கரையிலோ பூங்காவிலும் சிறப்புமிக்க இடங்களிலோ தனது காதலை கொண்டாடுவார்கள். அவ்வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்து தங்கள் காதலர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். விடுதிகள் அனைத்தும் அவர்களின் பதிவாகியிருக்கும். இம்முறையும் அதே எதிர்பார்ப்பில் இருந்த கன்னியாகுமரி ஏமாற்றத்தை அடைந்துள்ளது. இதுவரை ஒரு வெளிநாட்டு […]
கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் திருவனந்தபுரத்தில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கேரளாவில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். அதில், […]
நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து வர்த்தகக் கட்டடம் கட்டுவதைத் தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தற்போது அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபடவில்லை என விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையில், தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நீர்நிலைப் […]
களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற அடையாளம் தெரியாத கும்பல் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 8-ஆம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். கொலை குற்றவாளிகள் ஜனவரி 14ஆம் தேதி கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், கர்நாடக காவல் துறை குற்றவாளிகள் இருவரையும் விசாரணை அலுவலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நேற்று […]
நாகர்கோயில் அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மீனவ மக்கள் படகு போட்டி, நீச்சல் போட்டிகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினத்தை சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை காலங்களில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்தியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில், நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புத்தன்துறை கிராமத்தைச் சார்ந்த கிறித்துவ மக்கள் பொங்கல் கொடியேற்றி உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் […]
SI வில்சன் கொலை வழக்கில் தமிழக – கேரள நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நான்கு பேரை நுண்ணறிவுப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் அறிவித்துள்ளனர். தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பத்து தனிப்படை […]
கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை பாலக்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சையத் இப்ராகிம், அப்பாஸ் ஆகிய இருவரை […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய […]
சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும், காட்சிகளில் பதிவான இரண்டு பேரின் உருவங்களை […]
கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது […]
பிச்சை எடுத்து வாழ்ந்துவந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் இறந்த நிலையில், அவரது உடலை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்த தலைமைக் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் ஆதரவற்ற முதியவர் (சுமார் 70 வயது) ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். இவர் நேற்று திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலர், அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் லிங்கேஸ், தனது […]
கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு செக்போஸ்டில் காவலுக்கு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே வில்சன் உயிரிழந்தார். வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
சாமிதோப்பு அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி விஜயகுமார் (53). இவருக்கு ஜெயபதி (48) என்ற மனைவியும் ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை, அவரது மனைவி ஜெயபதி அடிக்கடி கண்டிக்க, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் விஜயகுமார் குடித்துவிட்டு […]
மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பழைய பாலம் ரோட்டில் , கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அச்சமயம் குழித்துறை மேல்புறம் வழியாக செல்லும் ஒரு தனியார் மினி பேருந்து , கல்லூரி சாலையில் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீதும் ரோட்டில் ஓரமாக […]
குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்று இரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதனை பார்த்து இது எந்த நாட்டு கப்பல் என்று தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார் சர்வதேச நீர் வழித் தடத்தில் இருப்பதாக குளச்சல் கடல் பகுதிக்கு இயந்திரக் […]
புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400 பேரில் 250 பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். கடந்த சில நாட்களாக மழை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம், லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்துள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகுகளும் புயல் காற்றை எதிர்கொள்ள […]
திருமண ஆசை காட்டி 17 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் புதுகிராமம் காலனியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினரான சடையன்குளத்தை சேர்ந்த அசோக் என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். உறவினர் […]
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் […]