கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் நோயின் தீவிரத்தை குறைக்க கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி நாளை இரவு 9 மணி முதல் தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய கடைகள் […]
Tag: # Karnadaka
73 வயதான ஆசிரியை ஒருவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் மைசூர் பகுதியில் 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தில் அவர் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அது என்னவென்றால் தன்னை விட மூன்று வயது அதிகமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் பிராமண சமூகத்திலும் மாப்பிள்ளை இருக்க வேண்டும். […]
வேறு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் மனைவிக்கு தெரிந்ததால் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வேம்கல் என்ற பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தன்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஓசூர் சென்றுள்ளனர். அங்கு வைத்து இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் பிரவீன்குமார் சாந்தாவை அடித்து அவரின் […]
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநில முதல்வர் எடியூரப்பா, பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தா, உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல தளர்வுகளுடன் அத்தியவாசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே நடமாட தொடங்கினாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக கவசம் அணிந்து வெளியே வருவது உள்ளிட்ட கட்டாயமான விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
கர்நாடகாவில் கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல முயன்ற சுகாதாரதுறை அதிகாரிகளை கிராம மக்கள் கற்களால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப் பட்ட நிலையில், பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களில் மட்டும் ஊரடங்கை தொடர்ந்து நீடிப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு […]
ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 41 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3422 பேர் குணமாகி உள்ளது நிலையில் 3,041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல கர்நாடகாவில் 116 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் […]
கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் தொழுகை நடத்தியவர்களை போலீசார் கடித்துள்ளனர். இதனால் தொழுகை நடத்த வந்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர். மோதலை கலைக்க போலீசார் தடியடி நடத்தியாக கூறப்படுகிறது. கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகைக்கு சென்றவர்களை சமாதானப்படுத்த சென்ற சமுதாய […]
கர்நாடகாவில் கொரோனா வைரஸை பரப்புவோம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தடையை மீறி வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் இந்த சூழ்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக-கர்நாடக எல்லை போக்குவரத்தை இருமாநில அரசுகளும் முற்றிலுமாக துண்டித்துள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனுடைய தாக்கம் வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளால் தான் அதிகம் பரவுகிறது என்பதை உணர்ந்த அரசு. மாநில எல்லைகளுக்குள் பல கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்தை தொடர்ச்சியாக துண்டித்து வருகிறது அதன்படி நேற்றைய தினம் தமிழக அரசு கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகளை […]
கர்நாடாவில் அடுத்த ஒருவாரத்திற்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிகக் கொடூர நோய் கொரோனா வைரஸ் இதன் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது. அதன்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சில விதிமுறைகளை விதித்துள்ளார். அதில், அதிக கூட்டம் சேரும் இடமான திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு […]
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சித்தராமையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வீடு திரும்பியதும் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மருத்துவமனை முன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு […]
கர்நாடகாவில் நிலையான ஆட்சிக்காக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹசரிபாக் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று வெளியான கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விட முடியாது என்பதை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா […]
கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான […]
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜிமானா செய்த நிலையில், காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி முடிவுக்குவந்தது. இதனிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜக ஆட்சியமைத்தது. இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் 68% வாக்குகள் […]
கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளிலில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளில் […]
கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிச. 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும், காங்கிரஸ், மஜத தலா இரண்டு தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். […]
கர்நாடகத்தைப் பொருத்தவரை, கன்னடம் முதன்மை மொழியாகும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. […]
கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதால் அந்த யானைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் அனைத்தும் இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக வந்து சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் சானமாவு வனப்பகுதியை சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று […]
குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் , முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக […]
என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 36) என்பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65) ஜாதகம் பார்த்து வருகிறார். அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28), மகன் ஆர்ய கிருஷ்ணா (4) ஆகியோர் குடும்பத்தினராவர். கடந்த சில மாதங்களாகவே ஓம்பிரகாஷ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்து இருந்துள்ளார்.. இந்நிலையில் ஓம் பிரகாஷ் […]
பக்தர்கள் கூட்டத்தால் எப்பொழுதும் திருவிழா கோலமாக காட்சி தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயில் குறித்த சிறிய செய்தி தொகுப்பு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளை இணைக்கும் இடத்தில் உள்ள இந்த கோவிலுக்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த குவிந்த வண்ணம் உள்ளனர். வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் உருவான விதம் பற்றி ஆள கதை ஒன்று உள்ளது. அதில், வனப்பகுதியில் […]
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார் சமீபத்தில் கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து தோல்வியடைந்ததையடுத்து பெரும்பான்மையுடன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மேகதாது அணை சம்பந்தம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் எடியூரப்பா […]
தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, […]
கர்நாடக மாநிலத்தில் 14 MLAக்களின் ராஜினாமாவை ரத்து செய்துள்ளதாக சட்ட சபை சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தனி விமானத்தின் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரபலமான நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பாரதீய ஜனதா கட்சி செய்ததாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள் குற்றம் […]
கர்நாடகா மாநிலத்தில் ராஜினாமா செய்த 11 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி அளிக்க ஆளும் கூட்டணி அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக 11 எம்.எல்.ஏ.க்கள் பேர் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரசுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது. இதையடுத்து மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய […]
கர்நாடகாவில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் அரசு மத்தியில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக அதிருப்தியடைந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் 12 எம்எல்ஏக்கள் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 5 […]
கர்நாடகாவில் 18 வயதுடைய கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் கர்நாடகாவில் தக்ஷின கன்னடா மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பயின்று வந்துள்ளார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அந்த மாணவியை கடந்த மார்ச் மாதம் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஒரு வனப்பகுதியில் வைத்து அந்த மாணவியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல் அதனை […]