கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் எம்.எஸ்சி பட்டதாரியான ஜெயலட்சுமி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பழைய சித்துவார்பட்டி சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹரிஹரன்(24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]
Tag: Karur
கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே வாழைமண்டி அமைந்துள்ளது. இங்கு லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கற்பூரவள்ளி, ரஸ்தாலி, பூவன் உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கற்பூரவள்ளி வாழைத்தார் ஏலத்திற்கு வந்தது பொதுவாக வாழைத்தாரில் 10 சீப்புகள் வரை இருக்கும். ஆனால் 6 அடி உயரமுள்ள இந்த வாழைத்தாரில் 16 சீப்புகள் இருந்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது […]
கரூர் மாவட்டத்தில் உள்ள கோம்புபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு இளநீர், சந்தனம், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவத்தியம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கீழவதியம் பகுதியில் வசித்த ஓட்டுனரான ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. […]
காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சௌந்தர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சௌந்தர்யாவின் தாய் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
கரூர் மாவட்டத்திலுள்ள புகலூரில் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் திருக்காட்டு துறையில் இருக்கும் மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் இருக்கும் கால […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது உறவினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இளம்பெண் கூறியதாவது, எனது கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் எங்களது வீட்டிற்கு வந்தார். அப்போது என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாக […]
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் […]
கரூர் மாவட்டத்திலுள்ள பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி இரண்டாவது நாளை முன்னிட்டு சுவாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள கருங்கலாப்பள்ளி பகுதியில் மணிமாறன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஒரு செல்போனை கொடுத்து தன்னிடம் பேசுமாறு மணிமாறன் கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மணிமாறன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள வீரணம்பட்டியில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பயங்கர சித்தத்துடன் மின்னல் தாக்கியதால் விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த 2 சாமி சிலைகள் சேதமடைந்தது. மேலும் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிபாரதி, ஐயப்பன், பிரசாத் ஆகிய 3 பேருக்கும் கை, கால்கள், முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதோடு, அருகில் […]
தாய் மகளை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள செம்படாபாளையம் பகுதியில் தண்டபாணி- பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் பாப்பாத்தி தனது மகளுடன் நடந்து சென்ற போது செல்வம், அவரது மனைவி தவமணி ஆகியோர் தாய் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆலமரத்து மேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 21 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த அருணாதேவி தனது அக்கா மகன் ராஜசேகர் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு சர்க்கரை வியாதி மற்றும் வயிற்று […]
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் ஊராளிபள்ளம் பகுதியில் மணிகண்டன்- பொண்ணு தம்பதியின்னா வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே பைப்லைன் சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து பொண்ணு அளித்த புகாரின் […]
வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மினி பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கரூர் பேருந்து நிலையத்தில் 8 கடைகள், மினி பேருந்து நிலையம் அருகே 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை என மொத்தம் 11 கடைக்காரர்கள் தலா 7 […]
கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் புனித வேளாங்கண்ணி மாத ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் தேர் பவனி நடைபெறும். கடந்த 30-ஆம் தேதி இந்த ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தேர் பவனி விழா தொடங்கியது. இந்நிலையில் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த தேர் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து […]
பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக அன்பராஜ்(36) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 2 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு பெண்ணின் பின்புற வாசல் வழியாக அன்புராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த பெண்ணை அன்புராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது திடுக்கிட்டு எழுந்த […]
4 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள புது குறுக்குபாளையம் இரண்டாவது தெருவில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சாமிநாதனின் மனைவி அமுதாவிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அமுதா 4 லட்ச ரூபாய் பணத்தை இளங்கோவிடம் கொடுத்துள்ளார். ஆனால் இளங்கோ வந்த பணத்தை […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் உதயகுமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு(35) என்பவரும் கரூரில் இருக்கும் கல்குவாரியில் லாரி ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று உதயகுமார் தனது நண்பரான சேட்டுவுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் கரூர்-கோவை மெயின் ரோட்டில் மின் உற்பத்தி கழக அலுவலகம் அருகே சென்று […]
தலைமறைவாக இருக்கும் தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லிபாளையம் பகுதியில் சினிமா தயாரிப்பாளரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பார்த்திபன் பொள்ளாச்சிக்கு வரவழைத்தார். இதனை அடுத்து நடிகைக்கான தேர்வு நடக்கும் போது […]
அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டம் சுங்க கேட் பகுதியில் நல்லாத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 47 ஆகிறது. இவர் வெகு நாட்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது நல்லாத்தாள் […]
அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் சமுதாய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிலையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் முயற்சி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. இதில் 164 நாடுகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்கு பெற்றன. இந்தியாவில் இருந்து 31 படைப்புகளும், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 12 படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் புதுக்கோட்டை […]
மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் கொத்தனாரான பிரேம்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பிரேம்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம்- அரவக்குறிச்சி சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே […]
குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. 48 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. நேற்று காலை மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் வெங்கடாபுரத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.டெக் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சத்யபிரியா மேற்படிப்பு படிக்க விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யப்ரியா நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த […]
விவசாயியை கல்லால் தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே கணபதி ராஜு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணபதி ராஜுவின் மனைவி தனலட்சுமி என்பவர் வெள்ளைச்சாமியின் தோட்டத்திலிருந்து செடியில் உள்ள கொள்ளுவை எடுத்ததாக தெரிகிறது. இதனை பார்த்து வெள்ளைச்சாமி தனலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் கணபதிராஜு, தனலட்சுமி உள்ளிட்ட 6 பேர் […]
கோவில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பேராளம்மன் அம்மன் கோவில் தெருவில் கருப்பண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேராளகுந்தாளம்மன் கோவில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருப்பண்ணன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த கருப்பண்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் தள்ளாடியபடி வந்த 3 மாணவிகளை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களுக்கு மயக்கம் தெளிய ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து அந்த மாணவிகள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் ஒரு அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. இந்த மாணவிகள் தேர்வில் தோல்வி […]
தண்டவாளத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் 45 மதிக்கத்தக்க ஒருவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் வெங்கமேடு பகுதியை […]
60 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோடந்தூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது, இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சலீம்(24) சுதீப்மினிஸ்(21) ஆகிய இருவரும் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு வாலிபர்களும் டிராக்டரில் கல்குவாரிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 60 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொளுத்தினிபட்டியில் சேகர்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரீத்தி(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் பிரீத்தி தோல்வி அடைந்தார். இந்நிலையில் வேங்காம்பட்டியில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி பிரீத்தி நீட் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த மாதம் பிரீத்தி நீட் […]
10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கீழ்குப்பிரெட்டிபட்டியில் முத்துக்குமார்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமி(15) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த திருப்புதல் தேர்வை லட்சுமி சரிவர எழுதவில்லை. இதனால் வீட்டிற்கு வந்த லட்சுமி தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதாதது குறித்து கூறி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை […]
கார் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசி இந்திரா நகரில் பாப்பா நாயக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கோராகுத்தி பிரிவு சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது கேசவன் என்பவர் ஒட்டி வந்த கார் முதியவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் […]
காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(16) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி நடுவலூர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற சரண்யா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சரண்யாவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி […]
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மேலமையிலாடி பகுதியில் ஓட்டுநரான மனோகர்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனோகரை அவரது மனைவி செந்தமிழ் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தமிழ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோகர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பூலாங்குடி பகுதியில் பாண்டியன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மாயனூர் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது. இந்த […]
லாரி மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 7 மாணவிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் விவேகானந்தா பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தமிழ்பரத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் பிருந்தா என்பவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்துள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் பிருந்தா தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பிருந்தா தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து பிருந்தாவை சாப்பிடுவதற்கு அழைக்க […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை அசோக் நகரில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விக்னேஷ் […]
கதண்டுகள் கடித்ததால் சிறுமி உள்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னரெட்டிப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பறந்து வந்த கதண்டுகள் சின்னம்மாள்(65), மலர்(47), கவிநிதா(3), தனலட்சுமி(44), சர்வேஸ்வரன்(4), தேவிகா(35) உள்பட 11 பேரை கடித்தது. இதனால் காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]
தொழிலாளி தனது மனைவியை அடித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகிணத்துப்பட்டி தெற்கு காலனியில் ராஜு(52) என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சின்னபொண்ணு(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜு மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி இரவு ராஜு மதுபோதையில் சின்னப்பொண்ணுவை அடித்து துன்புறுத்தியதால் சம்பவ இடத்திலேயே […]
தீ விபத்து ஏற்பட்டதால் கல்லூரி மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பூவம்பாடி பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தமிழ்ச்செல்வனுக்கு டீ போடுவதற்காக அபிநயா வீட்டிலிருந்த பிறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபிநயா மீது மண்ணெண்ணெய் […]
மருத்துவமனையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் பிரியாணி சமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு அனைவரும் உணவு உண்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த சிலர் எதற்காக விருந்து வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விருந்து வைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]
தலையில் செங்கல் விழுந்ததால் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான சாந்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குந்தபுரம் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தியின் தலையில் செங்கல் விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக சாந்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]
அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாராயபுரத்தில் இருந்து கரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விறகு லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்யாணி, கவிதா, வசந்த், வள்ளிமயில் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகவுண்டன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கார்த்திக்(19) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் தடுப்பு சுவரின் கீழ் அமர்ந்து கார்த்திக் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இதனையடுத்து மதுபோதையில் கார்த்திக் தடுப்பு சுவரின் மேல் உட்கார்ந்திருந்த போது நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து […]
சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவகிரி டவுன் தெருவில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான நாசீர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாசீருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நாசீர் அதே பகுதியில் வசிக்கும் சாதிக்பாட்சா என்பவருடன் சரக்கு ஆட்டோவில் கொத்தமல்லிக்கீரை ஏற்றிக்கொண்டு சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையம் பிரிவு சாலை […]
ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், தவிட்டுபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் டி.என்.பி.எல் காகித ஆலை செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் நடுரோட்டில் விழுந்தது. மேலும் மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த […]