சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தின் தோகைமலை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் தனியார் மெஸ் பின்புறமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த மதிவாணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Tag: Karur
நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அலுவலகத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இந்த மனுவில் நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் மாதம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இருந்ததாகவும், அதனால் அவா் வன்னியர்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை வருகின்ற 10-ஆம் […]
செடி,கொடிகளை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. இதில் பஞ்சமாதேவி அணைக்கட்டு வாய்க்கால் பிரிந்து சோமூர் வரை செல்வதால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் அங்கங்கே செடிகள் வளர்ந்து முட்புதர் போல் படர்ந்து கிடக்கிறது. இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் […]
அரசு பள்ளியில் வைத்து நடைபெற்ற திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் இருக்கும் அரசு உயர் நிலைப்பள்ளியில் வைத்து பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக திறனாய்வு போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்டத்தில் வசிக்கும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் வடமங்கலம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் இவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். […]
வீட்டில் மேல் பகுதியில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமாரின் ஓட்டு வீட்டின் மேல் புறத்தில் சாரைப்பாம்பு ஓன்று பதுங்கி இருந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் பாக்கியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனிமையில் வசித்து வந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் அலறிய சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பாக்கியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு […]
கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் தொழிலதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி பாளையம் பகுதியில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை விஷயமாக தனது காரில் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காருக்குள் […]
கரூரில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கு. மாணவி படித்த பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலையால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1 மாதத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தகவல் தெரிவிக்கப்படும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் […]
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பட்டி பகுதியில் பெத்தான் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மகன் முனியப்பனுடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை-மைலம்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி பெத்தான் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக […]
பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்தில் உள்ள காருடையாம்பாளையம்- காளி பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மோளப்பாளையம் பகுதியில் பழைய பஞ்சு அரைக்கும் ஆலை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது பஞ்சு ஆலைக்கு அருகே உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
சரக்கு ஆட்டோ மோதி மின்கம்பம் இரண்டாக உடைந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு திருவானைக்காவலிருந்து டயர்களை ஏற்றி கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இந்த ஆட்டோவை விஸ்வநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் அருகாமையில் வந்த போது எதிரில் வந்த வாகனத்தின் மீது ஆட்டோ மோதியுள்ளது. இதனால் செயல்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் விஸ்வநாதன் விபத்தில் […]
கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை, வெள்ளியணை, புளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் அடைமழை பெய்தது இதன் காரணமாக பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் நீர் […]
காணாமல் போன இளம் பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவிழி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற பூவிழி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் பூவிழியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
விஷ வண்டுகள் கடித்ததால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் இருக்கும் பூங்காவை சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 71 பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் இந்த பணியாளர்களை துரத்தி சென்று கடித்துள்ளன. இதனையடுத்து மாற்றுத்திறனாளியான கார்த்தி என்பவர் ஓட முடியாமல் இருந்ததால் விஷ வண்டுகள் அவரை சூழ்ந்து கடித்துள்ளது. […]
குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் சுப்பிரமணினுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சுப்பிரமணி பெரிய கல்லை எடுத்து […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார்பெண்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் பாலமுத்து என்ற கார்பெண்டர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் தோகைமலை-மணப்பாறை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பால முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த பாலமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றோருக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கபசுர குடிநீர், சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் மதரஸா பாபு என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையம், பசுபதிபாளையம், சிண்டிகேட் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் […]
கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற கிருபா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிருபா ஸ்ரீ-யின் பெற்றோர் அவரை தோழியின் வீடு மற்றும் உறவினர்கள் […]
பக்தர்கள் இன்றி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு மஞ்சள், இளநீர், பன்னீர், பால், சந்தனம், விபூதி, தயிர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின் சுவாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கோவிலில் சுவாமிக்கு பக்தர்கள் இல்லாமல் சிறப்பு […]
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பரமத்தி பகுதியில் ரங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தர்ஷனா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் கூட்டுறவு பால் சொசைட்டியில் பாலை ஊட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனியப்பன் கோயில் […]
மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் சுந்தராபுரம் பகுதியில் மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் குளித்தலையில் உள்ள […]
பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 9 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தென்னிலை பகுதியில் முல்லை நகரில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகம், சிவக்குமார், ஆனந்த், குமார், ராஜேந்திரன், சாந்தகுமார், சண்முகம், பிரகாஷ், ரமேஷ் ஆகிய ஒன்பது பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர். இதையடுத்து […]
டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் வாங்கல் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். […]
தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படிக்கும் மாணவி திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுருதி அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து ஸ்ருதி திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சுருதியின் பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் […]
ஆபத்தான வகையில் நிற்கும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற கோரி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் இருக்கும் உழவர் சந்தைக்கு பின்புறத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் மூலம் கே.சி.ஆர் தெரு, முல்லை நகர், கரூர் சாலை, வள்ளுவர் நகர் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது, தற்போது இந்த கம்பத்தில் உள்ள சிமெண்ட் அனைத்தும் உதிர்ந்து கம்பிகள் மட்டும் வெளியே தெரிகிறது. மேலும் மின்கம்பத்தில் செல்லும் […]
இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல் கரூர் பகுதியில் இருந்து திருச்சிக்கு கிரஷர் மண் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு லாரிகளும் நேற்று அதிகாலை 4 மணி அளவில் குளித்தலை பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இதில் இரண்டு லாரிகளும் சுக்குநூறாக நொறுங்கி உள்ளது. இந்த விபத்து […]
முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் கிராமத்தில் பேக்கரி கடைகள், மளிகை கடைகள், டீ கடைகள் போன்ற பல கடைகளில் நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தவர்களுக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் […]
தேங்காயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், சேமங்கி, கவுண்டன்புதூர், முத்தனூர், நொய்யல், பேச்சிப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்களை பயிரிட்டுள்ளனர். இதில் தேங்காய் விழுந்தவுடன் தேங்காய் பருப்புகளை காயவைத்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்தத் தேங்காய் பருப்புகள் வரத்து அதிகமாக இருப்பதால் தற்போது இதன் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூபாய் 122 க்கு […]
நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் சார்பாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் என மொத்தம் 1,000 பேருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், மருத்துவமனை அதிகாரிகள் ஆகியோர் […]
வீட்டிற்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைதரைப் பகுதியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஒரு நாகப்பாம்பு பதுங்கியிருந்ததை அவர் கண்டுள்ளார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதனை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் அந்த பாம்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் அவர்கள் அரவிந்த் வீட்டிற்கு விரைந்து வந்து […]
புன்னம்சத்திரம் மற்றும் காகிதபுரம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காகிதபுரம் பகுதியில் சுப்ரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருத்திகையை ஒட்டி முருகனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மலர்களால் முருகன், வள்ளி, தெய்வானை அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இதேபோல் புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு […]
திடீரென மின் கம்பம் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம்சத்திரம் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின் கம்பம் நடப்பட்டது. இந்த மின் கம்பத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அருகில் உள்ள கடைகள், திருமணமண்டபம், வீடுகள், அலுவலகங்கள் போன்ற பல பகுதிகளுக்கும் இங்கிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த கம்பத்தில் திடீரென […]
பட்டதாரி பெண் மாயமான வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் வினோதினி எம்.ஏ பட்டதாரி ஆவார். இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அவரை உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் வினோதினியின் பெற்றோர் காவல் நிலையத்தில் […]
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள கரியாம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நத்தம்மேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான […]
இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தோகைமலை பகுதியில் கொரோனாவை தடுக்கும் விதமாக கழுகூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் வழங்கியுள்ளனர். இந்த குடிநீரை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி பருகுகின்றனர். மேலும் இதனை சிலர் தங்களது குடும்பத்திற்கு வாங்கி சென்று […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உயிருடன் மீட்டுள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் பகுதியில் கர்மன்னன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு ஒன்று அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்டதும் கர்மன்னன் அக்கம்பக்கத்தினரை அழைத்துக்கொண்டு எருமை மாட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. அதனால் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த […]
பறந்து சென்ற இரண்டு மயில்கள் எதிர்பாராதவிதமாக காகிதக் கூழில் விழுந்து பறக்க முடியாமல் தத்தளித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலையில் செய்தித்தாள்கள் முதலான பல்வேறு வகையான காகிதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த காகிதங்களை தயாரிப்பதற்காக பல்வேறு வகைகள் மரத்தூள்கள் மற்றும் பழைய பேப்பர்களை கூழாக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரித்த பேப்பர் கூழை ஒரு பகுதியில் தற்காலிகமாக தேக்கி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காகிதக்கூழ் தேக்கிவைக்கப்பட்டிருந்த பகுதி வழியாக இரண்டு […]
இரட்டை வாய்க்காலை சுத்தப்படுத்தி தூர்வாரி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இரட்டை வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் ஒரு காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதன் பிறகு நாளடைவில் விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டதால் இந்த இரட்டை வாய்க்கால் கவனிப்பாரற்று போனது. மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வாய்க்காலில் விடப்படுகிறது. அதிலும் […]
காகித ஆலையில் எந்திரம் சரிந்து விழுந்ததில் டிரைவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் கிராமத்தில் கிரேஸ் பகுதியில் அஜித்குமார்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிறந்து 24 நாட்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அஜித்குமார் அப்பகுதியிலுள்ள காகித ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக அஜித்குமார் மீது ஒரு எந்திரம் […]
முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் கண்ணதாசன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சேகர் வீட்டில் இருந்தபோது கண்ணதாசன், அவருடைய மனைவி ஹேமலதா, தம்பி காரியக்காரன், உறவினர் சின்னம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்துகொண்டு சேகரையும் அவரது குடும்பத்தினரையும் திட்டி கொலை செய்துவிடுவதாக […]
ஊரடங்கின்போது தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன் பிறகும் வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் அவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் […]
குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மூலிமங்கலம் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். இந்த சாலை தற்போது ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன் வழியாக தினசரி சிமெண்ட் ஆலை காகித ஆலைக்கு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து ஜல்லிகள் மற்றும் கற்கள் ஏற்றி கொண்டு ஏராளமான லாரிகள் வருகின்றன. அதேபோல் […]
கார் லாரி மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை பகுதியில் இதயதுல்லா-சிராஜ் நிஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அப்பாஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சிராஜ் நிஷா மற்றும் அப்பாஸ் இருவரும் பூ வாங்குவதற்காக காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் தென்னிலை பகுதியில் […]
தடையை மீறி மது விற்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் தடையை மீறி மது விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் குளித்தலை சுற்றியுள்ள பரலி நால்ரோடு, சிவாயம், கருங்கலால் பள்ளி, அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்தபோது மது விற்கப்படுவது உறுதியானது. இதனையடுத்து அங்கு மது விற்று கொண்டிருந்த காரணத்திற்காக குமார், சிவானந்தம், கணேசன், வையாபுரி ஆகிய 4 பேரையும் […]
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து தனியார் கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் வங்காபாளையத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன்இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வனின் தாய் ஜானகி அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். ஆனால் தமிழ்ச்செல்வனோ தனக்கு திருமணம் வேண்டாம் எனவும், தனக்கு மிகவும் குறைவான சம்பளமே உள்ளதால் அதனை […]
சரக்கு வேன் மோதி சிறுமி உயரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 4 ஆயிரம் ரூபாய் அபதாரமும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வை.புதூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 3 வயதில் நிஷா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நிஷா மீது சரக்கு வேன் ஒன்று மோதியுள்ளது. இதில் நிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து குளித்தலை […]
பெட்டிக் கடையில் வைத்து மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதி பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெட்டி கடை ஒன்றில் ரகசியமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு ஒருபெட்டி கடையில் மது விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்தவர் அங்கிருந்து […]
வீட்டை சேதப்படுத்தியதோடு, சிறுவனுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டி பகுதியில் மணிமாறன்- நாகராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ராகுலை பாலமுருகன் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து பாலமுருகன் ராகுலின் வீட்டு ஜன்னல் மற்றும் கதவு போன்ற இடங்களில் […]
ஆற்று மணல் கடத்த முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ள பகுதிக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாக்குப்பையில் திருடிய ஆற்று மணலை மொபட்டிலில் வைத்து 2 வாலிபர்கள் கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.அதன் பின்பு கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் அந்த இரண்டு வாலிபரும் […]