தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அவர்கள் குளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் குளித்தலை பகுதியில் கடை வைத்து நடத்தி கொண்டிருக்கும் பரமசிவன் என்னும் முதியவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் பரமசிவனை கைது செய்து அவரிடம் […]
Tag: Karur
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சப்பட்டியில் உள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் நேற்று அகில இந்திய போராட்டக்குழு சார்பில் சாலை மறியல் நடைபெற்றுள்ளது. இந்த மறியலில் பஞ்சம்பட்டி வாழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் பெண்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இவர்கள் “டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள […]
சாலையை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதிக்கு மனு கொடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்செல்வன் மற்றும் குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் பலர் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதியில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் கூறியிருந்ததாவது “கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை நகரத்தில் மூடப்பட்டிருந்த அண்ணா நகர் புறவழிச் சாலையை திறக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை. இந்த சாலை திறப்பது தொடர்பாக […]
மூதாட்டியை கட்டையால் தாக்கி விட்டு தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயராஜ். இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவருடைய மனைவி விஜயலட்சுமி என்பவர் நேற்று காலை காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வரும்போது வழியில் ஒரு மர்ம நபர் சேலையை அணிந்து தலையில் துணியை போர்த்தியபடி உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி அந்த மர்மநபரை கடந்து […]
108 ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சண்முகம் மற்றும் வாகன ஓட்டுனர் லோகேஷ் ஆகியோரை பெண்ணின் உறவினர்கள் பாராட்டியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் பகுதியில் சின்னத்துரை-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கவிதாவிற்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இரண்டாவது பிரசவத்திற்காக காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக அவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் […]
டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலகொண்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் முத்து. இவருடைய மகன் ஜெயபால் என்பவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். புதூர் கிராமத்தில் வயலில் உழுது விட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை வயலில் இருந்து மேலே ஏற்றி உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் டிராக்டர் அடியில் சிக்கிய ஜெயபால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து […]
கட்டிடத்திலிருந்து பெயிண்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியை சார்ந்த ரங்கநாதன் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய ரங்கநாதன் அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை […]
சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டியை சார்ந்த செந்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். செந்தில் கடந்த 30ஆம் தேதி தோகைமலை சென்று விட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் கிருஷ்ணம்பட்டி அருகில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் செந்திலின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செந்தில் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
மனைவியுடன் பழகிய கல்லூரி மாணவனை கணவன் நபர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டி பாளையத்தை சார்ந்தவர் தீபன். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராயனூர் முகாமைச் சார்ந்தவர் குணா. இவரும் தீபனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதனால் குணாவின் வீட்டிற்கு தீபன் அடிக்கடி செல்வது வழக்கமான ஒன்றானது. அப்போது குணாவின் மனைவியுடன் தீபனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் அறிந்த குணா […]
தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது சரக்கு ரயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமச்சிபுரத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு முன்று வயதில் ருத்ரன் என்ற மகன் இருந்தான். செந்தில்குமாரின் வீட்டின் பின்புறத்தில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. கடந்த 27ஆம் தேதி ருத்ரன் அந்த ரயில்வே தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு ரயில் ருத்ரன் மீது மோதியதில் ருத்ரன் […]
கரூர் மாவட்டம் கொசூரில் அரசின் மினி கிளினிக்கில் புதிதாக கட்டப்பட்ட கைப்பிடிச்சுவர் இடிந்து 2 குழந்தைகள் காயம் அடைந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அமமுக பொது செலாளர் திரு டி டி வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கரூர் மாவட்டம் கொசூரில் பழைய கட்டிதத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழாவின் போதே அங்கு புதிதாக கட்டப்பட்ட […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஈரோடு சாலையில் முனியப்பன் கோயில் அருகில் சந்தேகம் அளிக்கும் வகையில் ஒரு கார் நின்றுள்ளது. அந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வேலுச்சாமிபுரத்தை சார்ந்த மணி […]
டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று முன்தினம் அவருடைய டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தளிஞ்சிக்கு சென்றுள்ளார். அப்போது தளிஞ்சி சாலையில் உள்ள வளைவில் திரும்பும் போது டிராக்டர் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் […]
பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் பகுதியில் பரமத்திவேலூர் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்து கொண்ட பெண் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் […]
கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியில் சுப்புராயன் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் பரமத்திவேலூருக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சேலம் கரூர் நெடுஞ்சாலையில் காவிரி ஆற்று பாலத்தின் மேல் கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்புராயன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சுப்புராயனை […]
சரக்கு ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர். கரூர் மாவட்டத்திலுள்ள தரகம்பட்டி பகுதியில் காளியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று காளியப்பன் தனது மனைவி மாலதியுடன் இருசக்கர வாகனத்தில் தரகம்பட்டி சென்று கொண்டிருந்தார். பசுபதிபாளையம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ திடிரென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காளியப்பனுக்கு தலையில் பலத்த […]
சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலையை சார்ந்த ஒருவர் தனது 15 வயது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் ஒன்று […]
பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்களாக பிரச்சாரம் நடந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் அவர் கரூருக்கு விரைந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது “பிரதமர் நமது விவசாயிகள் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறார். மூன்று வேளாண்சட்டங்களை […]
பயன்பாடற்றுக்கிடக்கும் அங்கன்வாடி மையத்தை சீர் அமைப்பதற்காக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சணப்பிரட்டி பகுதியில் குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மைய கட்டிடம் ஒன்று 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த அங்கன்வாடி மையத்தில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு குழந்தைகள் பயன் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த அங்கன்வாடி மையம் மூடப்பட்டிருப்பதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மூடப்பட்ட அங்கன்வாடி மையம் […]
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் டவுன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூர் மாரியம்மன் கோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராமச்சந்திரன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பசுபதிபாளையம் […]
முகக் கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்ட கடை வியாபாரிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் வார சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் சின்னரெட்டிபட்டி, அத்திப்பட்டி, நாகனூர், கழுகூர், கீழ்வெளியூர், தோகைமலை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக சந்தைக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து சந்தையில் தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரங்கசாமி, ஆய்வாளர் சௌந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சந்தையில் உள்ள 200க்கும் […]
டெக்ஸ்டைல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-கலைவாணி தம்பதியினர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சதீஷ் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார். இதனால் சதீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து […]
வேலைக்கு சென்று வருவதாக கூறிய பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள மண்மங்கலம் பகுதியைச் சார்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் சுவாதி. இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சுவாதி இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதியின் பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால் […]
தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து வெள்ளியணை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணையில் ஜல்லிப்பட்டிகுடி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகள் மகேஸ்வரி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி ரெங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகேஸ்வரி தனது தந்தை பொன்னுசாமியின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து […]
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நொய்யல் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் இருக்கும் பலமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-சங்கீதா தம்பதியினர். சங்கீதாவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அடியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கபாலி என்கிற லட்சுமணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சித்தலவாய் என்ற பகுதியில் ஐயப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாயனூர் போலீஸார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் ராமசாமி என்பவர் தனது சொந்த வேலை காரணமாக மணப்பாறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் ராமசாமியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவ்வழியாக […]
காதல் விவகாரத்தில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு தெருவைச் சார்ந்தவர் ஜெயராம். இவரது மகன் ஹரிஹரன் மாரியம்மன் கோயில் தெருவில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கோவிலின் முன்பு அந்தப் பெண்ணுடன் பேச முயன்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஹரிஹரனை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ஹரிஹரனை […]
பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் சேலம் பைபாஸ் ரோடு பகுதியில் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பாத்தி திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, திடீரென 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கரூர் […]
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்திலுள்ள சேலம் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர். இவர் நேற்று திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பாப்பாத்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்தில் பாப்பாத்தி அம்மாள் […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றதிற்காக போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், தாந்தோனிமலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். […]
குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் கிழக்கு சாலையில் அனைத்து குப்பைகளும் கொட்டப்படுகின்றன. அதோடு அங்குள்ள திருமண மண்டபத்திலிருந்து வாழை மரங்கள், சாப்பிட்ட இலைகள் என பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் அதே இடத்தில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில் அள்ளப்படாத குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதோடு இப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் தனிப்பட்ட நபர் ஒருவர் சில சமயங்களில் தீவைத்து எரித்து விடுவதால் […]
கரூர் அருகே போலி இ பாஸ் மூலம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஓட்டுநர், உரிமையாளர் மற்றும் பயணிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாக தொடர் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், சென்னைக்கு செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் மொபைல் எண்ணை […]
கரூர் அருகே அட்டகாசம் செய்து வரும் வெறி நாய்களை விரட்டுவதற்கான பணிகளை ஊராட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சில நாட்களாகவே கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வெறிநாய்கள் திடீரென நேற்று காலை முதல் மாலைக்குள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் என பெண்கள் உட்பட 14 பேரையும், வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஆறு ஆடுகள், நான்கு பசு மாடுகள் […]
குடும்ப பிரச்சனை காரணமாக பொறியல் பட்டதாரி வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மகிளிபட்டியிலுள்ள இரட்டை வாய்க்கல் கரை பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த வாலிபர் […]
திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு ரயில்வே கேட் அருகே சின்ன குளத்துப்பாளை யம் பகுதியில் வசித்து வருபவர்கள் சிவமணி – வித்யா தம்பதியர்.. இவர்களது வீட்டின் அருகில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய முகமது ரியாஸ் கான் என்பவர் வசித்து வந்தார். இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது உறவினர் வீட்டிற்கு (கரூர்) வந்துள்ளார். இந்தநிலையில், […]
டிக் டாக் செயலியில் ஏற்பட்ட காதலால் வீட்டைவிட்டு வெளியேறிய 17 வயது மகளை மீட்டுத்தரக்கோரி, அவரது பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் தெருவில் வசித்து வருபவர் தான் ஜோதிமணி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதியருக்கு 17 வயதில் கீதா என்ற மகள் உள்ளார்.. கீதா தாந்தோணி மலையில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றார். கடந்த 2 நாள்களுக்கு […]
கரூரில் ஒன்றரை வயது குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை அடுத்த காந்திநகர் ஏரியாவில் வசித்துவரும் பழனி கமலா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை ஹரிஷுக்கு கடந்த ஒரு வாரமாக விடாது காய்ச்சல் அடித்துள்ளது. அதேபோல் உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதிக்க, பரிசோதனையில் மண்ணீரலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், அந்த […]
காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சனை கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கரூர் மாவட்டம் புலியூர் அருகே ஓடமுடியாம் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதாம்பாள்.. இவருக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்பழகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பெமினா பேகம் என்ற இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான்.. கணவன் […]
கரூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் தாந்தோணிமலை காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது திருமாநிலையூர் பகுதியில், ஒரு கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 25 வயதுடைய ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் விற்பதற்க்காக வைத்திருந்த 1 ¼ கிலோ கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கரூரில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியாமல் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மன்னிப்பு கேட்டு வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் யாருக்கு கொரோனா பரவியிருக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மன்னித்து விடும் படி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் […]
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் நாமக்கல் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என 48 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். […]
கரூர் அருகே பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கேஸ் அடுப்பை பழுது பார்க்கும் பணி செய்து வருகிறார். இவரது மகன் பிரசாத் கணபதி பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் சிறிது […]
கரூர் அருகே 12 மாணவர்கள் இடைநிற்றலுக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் ஜெகதாபி அருகே உள்ள பழனியாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வகுப்பில் 28 மாணவர்கள் படித்து வந்தனர். கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு சிலர் பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை என்று கூறி 12 […]
வெகு நாட்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் லட்சுமணன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் […]
மனைவியும் இரண்டு வயது குழந்தையும் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே மணல் மேட்டை சேர்ந்த முருகேசனின் மனைவி சர்மிளா தனது 2 வயது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவியும் குழந்தையும் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் மனைவி குழந்தையை தேடியுள்ளார் முருகேசன். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் குழந்தை மற்றும் மனைவியை காணவில்லை என தந்தொனிமலை காவல்துறையினரிடம் புகார் […]
திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீர் ஊற்றியும், […]
லாலாபேட்டை அருகே மது அருந்தும் போட்டி நடத்த முயற்சிசெய்த இளைஞர்களைத் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் புணவாசிபட்டியைச் சேர்ந்த அசுரன் பாய்ஸ் என்ற இளைஞர் குழு மது அருந்தும் போட்டி இன்று நடத்த திட்டமிட்டிருந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகள் பரப்பப்பட்டுவந்தன. மேலும் இந்த மது அருந்தும் போட்டிக்கு வரும் இளைஞர்கள் நுழைவுக் கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூ.15001, […]