பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பள்ளி மாணவன் பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அண்ணா நகர் தெற்கு காந்தி கிராமப் பகுதியில் வசித்துவருபவர் நாராயணன். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மகன் பிரணவ் சாய், மகள் உள்ளனர். இவரது மகன் பிரணவ் சாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி விடுமுறையான நேற்று பிரணவ் சாய் நண்பரின் இருசக்கர […]
Tag: Karur
கரூரில் ஆபாச வீடியோக்களைசமூகவலைத்தளத்தில் பகிர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் உள்ள சலூன் கடையில் வட மாநிலத்தை சேர்ந்த வியாசர் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வியாசர் ஜானியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற […]
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து இந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையம் முன்பு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்தில் கிறிஸ்தவ புகைப்படங்கள் வைத்திருப்பது, இந்து அல்லாத பிற மதத்தினரை […]
கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செல்லிபாளையத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவரின் மகள் காந்திமதி வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை சாதிமறுப்புத் திருமணம் செய்திருக்கிறார். அதனால் அந்த பகுதியில் உள்ள தனியார் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அம்மையப்பனுக்கு பால் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அது குறித்து மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உற்பத்தி சங்கத்தில் விசாரணைக்கு சென்றார். அப்போது […]
கரூரில் அதிக புகையைக் கக்கியபடி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அதனை சரிசெய்து ஓட்ட அறிவுறுத்தினார். கரூரை அடுத்த வெண்ணை மலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சென்று கொண்டிருந்தபோது எதிரே அளவுக்கதிகமாக புகையைக் கக்கியபடி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை கவனித்த அவர் காரில் இருந்து இறங்கி அதை தடுத்து நிறுத்தினார். அதிக புகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்றும், ஆட்டோவை முறைப்படி […]
31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை 31 வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது .இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்கள், சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில் சேலத்தில் தலைக்கவசம் […]
கரூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி நடந்த இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் எஸ்பி பாண்டியராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதியை கரூர் அருகே சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி சனிக்கிழமையன்று மாலை ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளார். வரும் வழியில் கரூர் அருகே மணவாசி என்ற இடத்திலுள்ள சுங்கச்சாவடி வசூல்மையத் தில் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பாலபாரதி, தான் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்று கூறி, அடையாள அட்டையை காட்டியுள்ளார். அவர் கூறியதை […]
கரூர் மாவட்டம், தோகை மலையை அடுத்த இராச்சா ண்டார் திருமலை என்கின்ற ஆர்.டி.மலையில் 58 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 850 காளைகள் பதிவு செய்து கலந்துகொண் டன. அவற்றிற்கு கால்நடை துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். காளைகளை அடக்க 420 மாடு பிடி வீரர்கள், 75 பேர் கொண்ட குழுவாக களம் இறங்கினர். ஒரு சில மாடு கள் பிடிபட்ட நிலையில் மற்ற மாடுகள் பிடிபடாமல் வீரர் களை மிரட்டிச் சென்றன. […]
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்புக்காக மாணவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்து அதற்கான தக்க விளக்கங்களை அளித்து வந்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் […]
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக நிர்வாகிகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழக்கத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் இருந்தாலும் அக்கட்சிக்குள் இருக்கும் உள்கட்சி பூசல்களையும் இந்த முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது கட்சியின் தலைமையில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதில் முதன்மையான இடத்தில் உள்ளது கரூர் மாவட்ட முடிவுதான். அங்குள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் 9 இடத்தை அதிமுக பிடித்துள்ளதால் திமுகவுக்கு வெறும் 3 இடம் மட்டும் தான் கிடைத்துள்ளது.அதே சறுக்கலை தான் ஒன்றிய கவுன்சிலில் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடக்கவுள்ள சேவல் சண்டையில் பங்கேற்க, சேவலுக்குத் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் போல் சேவல் சண்டைக்கு, கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சியிலுள்ள பூலாம் வலசு கிராம் பெயர் பெற்றது. பூலாம் வலசில் சில ஆண்டுகளாக சேவல் சண்டை நடைபெறாத நிலையில், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடைபெற்றது. இச்சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இம்மாவட்டத்தில் நடக்கவுள்ள சேவல் சண்டையில் கலந்து கொள்வதற்காக, […]
சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காரணத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம் சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணிடம், அப்பகுதியைச் சேர்ந்த முதியவரான கிட்டான் (62) , கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
கரூர் மாவட்ட தான்தோன்றி மலை அருகே புறா பிடிக்க சென்றவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கரூர் மாவட்டம் தந்தோந்ன்றி மலைப் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேல்முருகனும் அவரது நண்பர் ராஜாவும் காட்டுப்பகுதிக்குள் புறா பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த மொட்டை கிணறு ஒன்றில் புறா ஒன்று இருந்துள்ளது. அதனை பிடிப்பதற்காக கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கியுள்ளார் […]
கரூரில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். கருர் வடக்கு பசுபதி பாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் கோமதி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே […]
கரூர் மாவட்டத்தில் தாய் இல்லாத உலகத்தில் நானும் வாழ மாட்டேன் என தாயுடன் மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி. இவரது மகன் ரங்கராஜன் இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். அமுதவல்லி தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் ரங்கராஜன் அதே பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக […]
தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]
மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]
கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து […]
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால் ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால், […]
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் […]
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார். இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது […]
கரூர் மாவட்டம் அருகே தாயின் கள்ளக்காதலன் மனநலம் பாத்திக்கப்பட்ட 13 வயது சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், அஞ்சூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் வயது (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே, தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது சங்கர் கணேஷ்கும், முதல் கணவரை விட்டு பிரிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வாழை இலை வியாபாரி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் அருகே உள்ள குளித்தலை என்னும் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி என்பவர் .இவர் புதுப்பாளையத்தில் வாழை இலை மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் புதுப் பாளையத்தில் இருந்து குளித்தலைக்கு இலைகளை விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் புதுப்பாளையத்திற்கு […]
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ,செங்கோட்டையன் தங்கமணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளராக வீதி செந்தில்நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரப் பயணத்தின் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்துக்காக கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இன்று மாலை வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடையடுத்து தமிழகத்தில் வருகின்ற 18_ ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கரூருக்கு […]
கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை “மையிற புடிங்கவா ஓட்டு போடணும்” என்று கூறி பொதுமக்கள் விரட்டியடித்தனர். ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் என 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. […]