சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீரின் சோபியான் பகுதியிலுள்ள சாய்னாபோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் சென்று அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. […]
Tag: Kashmir
பாஜகவின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் தொடர்பான வாக்குறுதிகளுக்கு அம்மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 11 தேதி தொடக்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை […]
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜவுரி மாவட்டத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் தீடிரென தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை நோக்கி பீரங்கி குண்டுகள் மூலமாக தாக்குதல் […]
காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். […]