கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் 9 மதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. கென்யா நாட்டில் நைரோபி நகரில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆபிரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. கொரானா வைரஸ் சீனாவில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வைரஸ் நாடுகளில் பரவ தொடங்கியது. அதிலும் கென்யாவில் மார்ச் மாதத்திற்குப் பின்னரே பரவியது. இதனிடையே […]
Tag: Kenya
கென்யாவில் கொரோனா தாக்குதலால் உயிரிழந்த நபரின் உடலை பெரிய பையில் அடைத்து புதைக்கப்பட்ட நிலையில், அதை பார்த்து இறந்தவரின் குடும்பத்தார் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்குகிறது. கென்யா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 59 வயதான ஜேம்ஸ் ஒன்யாங்கோ (james onyango). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் மருத்துவர்கள் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டின் அருகே கொண்டு வந்தனர். ஆனால் […]
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் அல் ஷபாப் அமைப்பின் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான். அல் ஷபாப் (Al-Shabaab) என்ற தீவிரவாத இயக்கம் சோமாலியாவைத் தலைமயிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு மிகவும் பயங்கரமான தாக்குதலை நடத்தும். ஆம், கொடூரத் தாக்குதல் மற்றும் கோரமான கொலைகளுக்கும் பெயர்போனது தான் இந்த அமைப்பு. இது அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பின் கிளை அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றது. சோமாலிய ராணுவத்துக்கும், அல் ஷபாப் அமைப்புக்கும் இடையே […]
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா நகரில் தொடக்கப் பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 குழந்தைகள் […]
கென்யாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக […]