மலப்புரம் மாவட்டத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண் யானை நேற்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அர்தலாகுன்னூ பகுதி அருகே ஒரு தோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காயங்களுடன் ஆண் யானை ஒன்று விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர், யானையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையில் அதற்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் […]
Tag: Kerala
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1174 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 73 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். யுஏஇ -42, குவைத் -15, ஓமான் -5, ரஷ்யா -4, நைஜீரியா -3, நைஜீரியா -3, […]
டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையானது 964ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359லிருந்து 415ஆக அதிகரித்துள்ளது […]
கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள், 25 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 896 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது. இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு […]
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 261ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 13,218 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் […]
கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தாவது, ” இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளனர். மேலும் 8 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு திரும்பியவர்கள் ஆவர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 642 ஆக பதிவாகியுள்ளது. இதில் தற்போது 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் பினராயி விஜயன்” தெரிவித்துள்ளார். மத்திய அரசு […]
கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்றைய நிலவரப்படி, கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் 7 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவருக்கு மட்டும் தொடர்புகள் மூலம் பரவியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]
கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு விமானங்கள் மற்றும் ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து கேரளாவிற்கு எண்ணற்றோர் வந்துள்ளனர். […]
கேரளாவில் சிறுவன் ஒருவன் தனது அக்கா உட்பட 5 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளான். கோழிக்கோடு பெரிய பாலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உமர் தன்னை தனது சகோதரி மற்றும் அவரது தோழிகள் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளாத காரணத்தினால் கோபத்தில் இருந்துள்ளான். அப்பொழுது அந்த வழியாக சென்ற காவலரை பார்த்தவுடன் உடனடியாக புகார் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி காவலரிடம் கொடுத்துள்ளார். அதில் நான் அபெக்ஸ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன் எனது பக்கத்து […]
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை 17 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. இதை நிலையில், நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரசின் 2 சிறப்பு விமானங்கள் மூலம், 363 இந்தியர்களுடன் புறப்பட்டு நேற்று இரவு கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோடு சர்வதேச […]
கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை மாநில அரசுகளை படிப்படியாக குறைந்து தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எணிக்கை ஒற்றை இலக்கத்தை […]
கேரளா மாநிலத்தில் 2 வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, 473 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 30 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 5 கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், 4 மாத குழந்தை […]
கேரளா மாநிலத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வயநாடு வந்த லாரி ஓட்டுநர் மூலமாக 3 பேருக்கு […]
கேரளாவில் 96 வயது மூதாட்டி முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு தனது இரண்டு மாத ஓய்வூதியத்தை அளித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை அடுத்த ஹாரி பாட்டை என்னும் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டியான கார்த்தியாயினி என்பவர் ஏழ்மையின் காரணமாக தனது இளம் வயதில் படிக்க முடியாமல் அவதிப்பட்டார். இந்நிலையில் முதியோர் கல்வி பயின்று வந்த இவரை பலர் இந்த வயதில் இதெல்லாம் தேவையா எனக் கிண்டல் செய்தனர். ஆனால் இவர் சமீபத்தில் 96 வயதில் 98சதவிகிதம் […]
கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இன்று காலை பரிதமாக உயிரிழந்தது. மலபுரத்தை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாக சிகிக்சை பெற்று வந்ததாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]
கொரோனாவை கட்டுப்படுத்த நிதி தேவைப்படுவதால் அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது கேரள முதல்வர் பினராய் விஜயன் […]
கேரள எல்லைக்குள் தமிழக ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்படாததால் வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் தாகா. 56 வயதான இவர், திருவிழா நடைபெறும் இடங்களில் வியாபாரம் செய்து வருகிறார். அந்தவகையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவில் திருவிழாவில் வியாபாரம் செய்ய நினைத்து அங்கு வந்து கடை அமைத்துள்ளார். ஆனால் திடீரென ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கியிருந்து உணவு சமைத்து […]
கேரள மாநிலத்தில் பூனைகள் அதிகளவில் உயிரிழந்து வருவது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே கேரள மாநிலத்தில் அதிகப்படியான பூனைகள் தொடர்ந்து மரணமடைந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கேரளாவின் மனந்தவடி, மேப்படி பகுதிகளில் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்களில் சிலர் விலங்குகள் நல துறையினரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், அவர்கள் இறந்து போன பூனைகளின் ரத்த மாதிரியை சோதனைக்கு […]
கேரளாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி கொடுத்த அவர், கண்ணுரில் 10, பாலக்காட்டில் 4, காசர்கோடு பகுதியில் 3, மலப்புரத்தில் 1, கொல்லம் பகுதியில் 1 என மொத்தம் 19 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், 12 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை […]
ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும், நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் பாதிப்பு குறைந்த மண்டலங்களில் பணிமனைகள், முடி திருத்தும் கடைகள், புத்தகக் கடைகள், நகர எல்லைக்குள் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கட்டுப்படுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. அதே போல் உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்தவும், தனியார் வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. இது ஊரடங்கு நீர்த்துப் போகச் செய்யும் செயல் […]
கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து அதிவிரைவாக மீண்டு வரும் மாநிலம் என்றால் […]
கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் 65 வயது தந்தையை அவரது மகன், 1.கி.மீ தூரத்திற்கு தோளில் தூக்கியபடி நடந்த சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து, புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் வீட்டுக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்து […]
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் கேரளாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது.. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை (21 நாட்கள்) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் பல்வேறு மாநில அரசின் […]
கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஓரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி கேரளா வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது நிறைமாதக் கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து இருவரும் கண்ணூரில் இருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த […]
கேரளாவில் சாராயம் காய்ச்சிய 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 280 லிட்டர் சாராயம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா அச்ச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கலால்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் ஆலப்புழா […]
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உழைக்க வந்த உழைப்பாளிகளே, விருந்தினர்களை உங்களுக்காக கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்துள்ள வசதிகளை அறிந்து கொள்க, நீங்கள் குடியிருக்கும் வீட்டின் அல்லது கட்டிடத்தின் உரிமையாளர் உங்களை வெளியேற்ற முயற்சி செய்தால் உள்ளூர் பஞ்சாயத்தில் முனிசிபாலிட்டி புகார் தெரிவிக்கலாம். அவர்களால் இப்போதைய சூழ்நிலையில் வெளியேற்ற முடியாது. உணவு பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்கள் உள்ளூர் பஞ்சாயத்தில் மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. இதற்கு உங்கள் லோக்கல் […]
கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் கண்காணிப்பாளரின் வீடியோ வைரலானதைப் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாள்) அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் எச்சரித்தும், தண்டனை கொடுத்தும் வருகின்றனர். அந்த வகையில், […]
ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் கேரளா சாலையில் மலபார் புனுகுப் பூனை ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள் […]
கேரளாவில் சிறைக்கைதி ஒருவர் மது என நினைத்து கைகழுவும் சுத்திகரிப்பானை அருந்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறை ஒன்றில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம், கை கழுவுவதற்கு பயன்படும் சனிடைசர் உள்ளிட்டவற்றை கைதிகளை வைத்து சிறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கைகழுவும் சுத்திகரிப்பான்-இல் ஆல்கஹால் வாசனை வருவதை உணர்ந்து விட்டு மது என நினைத்து ராமன் குட்டி என்ற கைதி கைகழுவும் சுத்திகரிப்பான் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]
ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த 2,535 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார். ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் […]
கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நோய் தடுப்பு முகாமில் தஞ்சமடைய கொட்டும் மழையில் தமிழர்கள் பதிவிற்காக காத்திருக்கின்றன. கேரள மாநிலத்தில் கொரோனோ தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு அச்சமடைந்த தமிழர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடிவு செய்து தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள நோய் தடுப்பு முகாமில் தங்களை பரிசோதிப்பதற்காக கூட்டம் கூட்டமாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழ்நிலையில் மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பதிவிற்காக வரிசையில் […]
கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் வெள்ளத்தால் 2 முறை தள்ளிப்போன இளஞ்ஜோடிகளின் திருமணம் தற்போது 3ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர் 26 வயதான பிரேம் சந்திரன். அதேபகுதியை சேர்ந்தவர் 23 வயதான சந்திரா சந்தோஷ். இவர்கள் இருவருமே குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டாரும் […]
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
கேரளாவில் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகத்தை நடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் […]
கேரளாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஸ்பெஷல் உணவு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கேரள மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மிகவும் விசேஷ உணவுகளும் வழங்கப்படுகின்றது. அதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலையில் உணவாக தோசை, சாம்பார், 2 […]
கர்நாடாவில் அடுத்த ஒருவாரத்திற்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிகக் கொடூர நோய் கொரோனா வைரஸ் இதன் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது. அதன்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சில விதிமுறைகளை விதித்துள்ளார். அதில், அதிக கூட்டம் சேரும் இடமான திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு […]
டெல்லியில் அதிகளவில் ரசிகர்கள் கூடினால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் 2 பேருக்கு […]
கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லிவந்த நிலையில் தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் 25க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளில் விமானங்கள் கடந்த 4ஆம் தேதியில் இருந்தே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. […]
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கறி மற்றும் முட்டை விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சலின் எதிரொலியால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் ஒரு புறம் இருக்க கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த புதிய பறவை காய்ச்சல் தற்போது அச்சுறுத்தி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம், கொடியாத்தூர், பகுதிகளிலுள்ள பிராய்லர் கோழி மூலம் வந்ததாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் இதுவரை 20 […]
கேரளாவின் கொரோனா 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் உள்ள 3 பேருக்கு கண்டறியப்பட்டது. பிறகு அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு வீடு திரும்பினர். இதையடுத்து தான் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை […]
உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், மாணவர் அமைப்பினர் அரசியல் கட்சிகளின் பின்புலத்தைக் கொண்டு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. ஆகவே போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, கல்லூரிகள் படிப்பதற்கு மட்டும் தானே தவிர போராட்டம் நடத்துவதற்கு கிடையாது எனத் […]
கேரளாவில் கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கி காப்பாற்றியதால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் இருக்கும் பகவதியம்மன் கோவிலில் நேற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவை காண உள்ளுர் மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு நேரம் நடந்த திருவிழாவை காண்பதற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள மதில்சுவர் இல்லாத கிணற்றில் திடீரென தவறி விழுந்து […]
திருப்பூர்-அவினாசி சாலை பேருந்து விபத்தில் உயிரிழந்த ஜோஃபி பால்லின் கண்கலங்கவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 20ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சி நோக்கிச் சென்ற கேரள அரசு சொகுசு பேருந்து திருப்பூர் மாவட்டத்தின் அவினாசி அருகே சரக்கு லாரியுடன் மோதி விபத்தானது.இதில் 19 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 19பேரில் ஒருவரான கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோஃபி பாலு பெங்களூருவில் உள்ள ஜோய் […]
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு புகாரில் சிக்கிய பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது மற்றொரு பாலியல் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியடையவைத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கொச்சி ஜலந்தரின் முன்னாள் பேராயர் ஃபிராங்கோவால் 2014- 16 ஆகிய காலங்களில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்று கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது கடும் அவப்பெயர் ஏற்பட்டது. இந்த புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில் […]
மத்தின் பெயரை குறிப்பிடாததால் கேரளாவில் 1ஆம் வகுப்புக்கு சிறுவனை சேர்க்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம் , தன்யா தம்பதியின் மகனை அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்க முடிவெடுத்து அதற்கான விண்ணப்பத்தை வாங்கி அதில் மதம் என்ற இடத்தில் எந்த மதமும் இல்லை என நசீம் குறிப்பிட்டு இருந்தார். அப்போது விண்ணப்பத்தை ஆய்வு செய்த பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தில் மதத்தை குறிப்பிட வேண்டுமென்றும் , […]
பெங்களூரிலிருந்து கணவனை கத்தாருக்கு வழியனுப்பி வைக்க வந்த மனைவி விபத்தில் பலியானதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். இவர் பெங்களூரில் பணியாற்றி வரும் தமது மனைவி அனுவின் வருகையை எதிர்பார்த்து சம்பவதினத்தன்று பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் தனது மனைவி அனுவிடம் இருந்து எந்தவொரு தகவலுமே வரவில்லை என்பதால், அவரது மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மனைவி அனு பேசாமல், அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த கேரள மாணவி குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் நாட்டையே அதிர வைத்த கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2009ஆக உயர்ந்துள்ளது. 75,000த்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க சீன அரசு உஹான் நகரில் 3வது மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையை கட்டியுள்ளது. 4,500 படுக்கைகளுடன் வசதிகொண்ட இந்த மருத்துவமனையை 50,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் […]