சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய […]
Tag: Kerala
சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும், காட்சிகளில் பதிவான இரண்டு பேரின் உருவங்களை […]
தமிழ்நாடு- கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினரிடம் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியில் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் நேற்று இரவு காவல் பணியிலிருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐந்து தனிப்படைகள் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்துள்ளதில் தனக்கு உடன்பாடில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேரள எழுத்தாளர் ஜார்ஜ் ஓனக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், எதிர்கட்சிகள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை பாஜக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக […]
கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிகளை மீறி கட்டப்பட்ட மாரடி அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்கான இறுதிகட்ட நடைமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மாரடி பகுதியில் கடலோர மண்டல விதிகளை விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வரும் 11ம் தேதி […]
கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம் கேரளாவிலும், கர்நாடகாவிலும் வெளியாகவுள்ளது. பவெல் நவகீதன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக சென்ற மாதம் வெளியானது ‘வி1 மர்டர் கேஸ்’ திரைப்படம். ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், காயத்ரி, மைம் கோபி நடித்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இரண்டாவது வாரம் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்தத் திரைப்படம் பல திரையங்குகளில் கூடுதலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் இப்படம் […]
குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை அனைத்து மாநில அரசும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார். கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு […]
கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மறுபிரேதப் பரிசோதனைச் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வித்யா என்ற கேரள பெண்ணின் சடலத்திற்கு உரிமைக்கோரி எவரும் வராத காரணத்தால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த வித்யாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் அவருடன் நெருக்கமாக பழகி வந்த பள்ளித்தோழி சுனிதா பேபியை கேரள மாநில போலீசார் கைது […]
சபரிமலையின் கோவில் வருமானம் 100கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை வீட இந்த ஆண்டுகள் இந்த ஆண்டுகளின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது . கடந்த ஆண்டு 60கோடியாக இருந்த ஆண்டு வருவாயை இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கோவில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர் […]
சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பெண்ணியவாதிகள் பிந்து மற்றும் ரெஹனா பாத்திமா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாக்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் […]
சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு ஐயப்பனை தரிசிக்க தயாராக இருந்தார்கள். பல்வேறு காரணங்கள் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டிலிருந்தே நடைபெற்று வருவதால் பெண்கள் போக முடியாத சூழ்நிலை இருக்கிறது. கடந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியும் என்று சொன்ன கேரள காவல்துறை இந்த வருடம் பாதுகாப்பு வழங்க முடியாது என்று […]
நடுத்தர வயதுள்ள ஒருவர் தனது பள்ளி காதலியைகரம் பிடிக்க மனைவியை கொன்று நாடகமாடிய சப்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது சடலத்தை கைப்பற்றிய வள்ளியூர் போலீசார் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர். எனினும் போலீசாருக்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை . இதற்கிடையே […]
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு உப்பு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோபாலபுரம், நடுப்புனி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் பாதையில் கேரள மாநிலத்துக்கு செல்ல முடியும். இங்குள்ள சோதனை சாவடிகள் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடக்கும் என்பதால் அந்த சோதனை சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரும் , பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினரும் சேர்ந்து சோதனையில் ஈடுபடுவது வழக்கம். […]
குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய் தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக […]
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாதிரியார் பிராங்கோ முலக்கல்லுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காவலர்கள் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு, வன்கொடுமை மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் நீதிமன்றத்தில் […]
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கடத்தலின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடிகர் திலிப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் […]
சபரிமலை கோவிலுக்கு செல்ல திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார் . கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு செயல்படுத்த முயன்ற போது கேரளாவில் பாஜக , இந்து அமைப்புகள் , பக்தர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு பெண்களும் சபரிமலையில் வழிபட்டனர். இதையடுத்து கேரளாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அயப்பன் […]
கேரளாவின் வயநாட்டில் 10 வயது மாணவி பாம்பு கடித்து உயரிழந்த சம்பவத்தில், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் அரசுப்பள்ளியில் ஷஹாலா (10) என்னும் மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த புதன்கிழமையன்று 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாணவியின் கால் அங்கிருந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது, பதறிப்போன அவர் காலை எடுக்க முயற்சிக்கும் போது, அதிலிருந்த […]
எர்ணாகுளம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 12 அடி ‘கிங் கோப்ரா’ பாம்பை யாருடைய உதவியுமின்றி பிடித்து அசத்திய நபர் குறித்து தெரிந்து கொள்வோம். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ். இவரின் வீடு அருகில் உள்ள ஓடையில் பாம்பு செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ஸ்நேக் கேட்சர் மார்டின் பாம்பைப் பிடிக்க வருகைத் தந்தார். ஆனால், பாம்பு இருக்கும் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்தார். பின்னர், […]
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கென்று தனி சட்டம் உருவாக்குங்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது நம் அனைவருக்கும் தெரியும், அதற்கு பிறகு ஏற்பட்ட பல்வேறு சட்ட ரீதியிலான பிரச்சனைகளும் நமக்கு தெரியும்.அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டது. இந்த சட்டத்தினால் சட்ட ரீதியிலான பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அப்போது , உச்சநீதிமன்றம் கோவில் நிர்வாகம் மற்றும் […]
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், வருமானம் இரட்டிப்பாகியுள்ளதாக கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே கோயிலை நிர்வகிக்கும் கேரள தேவசம் போர்டின் தலைவர் என். வாசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பக்தர்கள் கூட்டமும் வருமானமும் கோயிலில் அதிகரித்துள்ளது. 2 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்தி 533 ரூபாய் வருவாய் […]
கேரளாவின் நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி எடுக்கும் பிரத்யேக வீடியோ வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்கள் மீது கேரள தண்டர்போல்ட் (Thunderbolt) படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு, மாவோயிஸ்ட்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்த் தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரள வனப்பகுதியிலுள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி பெரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதை காவல் துறையினரும் உறுதி செய்தனர். மேலும், பழங்குடியினரும் கருலாய் வரயன் வனப்பகுதியில் ஆயுதமேந்திய […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை மண்டல பூஜை_க்கு வழிபட 36 பெண்கள் அனுமதி கோரியுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு_க்கு நேற்று உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்த நிலையில் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை மண்டல பூஜை_க்கு வழிபட 36 பெண்கள் அனுமதி கோரியுள்ளனர். கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு_க்கு நேற்று உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்த நிலையில் சபரிமலை […]
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை முறையாக அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்றைய தினம் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் பெண்கள் நுழைவதற்கு எதிரான எந்த உத்தரவையும் பிறப்பிக்கமாக் இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை என எதையுமே உச்சநீதிமன்றம் தெரிவிக்க வில்லை. இதனால் சற்று குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலி நரிமன் தெளிவு படுத்தியுள்ளார்.கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து […]
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி தரலாமா என்பது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டுடன் கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பிறகு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்று உத்தரவின் பேரில் பல பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக வந்தபோது அந்த பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து , கோவிலுக்கு வந்த பெண்களை பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன […]
கேரளாவில் உள்ள பள்ளிகளில் தண்ணீரை குடிக்க பெல் அடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவனின் வாக்கு. அதன்படி பார்த்தால் உலகு மட்டுமின்றி உடலும்தான். நம் உடலின் இயக்கங்களுக்கு தண்ணீர் அத்தியாவசியமானது. தண்ணீரின் தேவை மனித உடலுக்கு அவசியம் என்பதை உணர்ந்த கேரள அரசு அதற்காக ஒரு திட்டத்தையே வகுத்துள்ளது.அத்திட்டத்தின்படி, கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளை தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள் ஆசிரியர்கள். பள்ளிக்கு […]
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு என்பது அந்நாட்டின் புனித நூலாகக் கருதப்படுகிறது என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். கேரள மாநிலம் கோழிக்கூடில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், அயோத்தி தீர்ப்பை, சபரிமலை தீர்ப்போடு இணைத்துப் பார்க்கும்பொழுது பக்தர்களின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருப்பதாகத் தெரிகிறது. நீதிமன்றம் அரசியலமைப்பு மீதான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் […]
சபரிமலையில் ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வார்கள், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்வார்கள். கார்த்திகை […]
சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]
சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி அரசுக்கு […]
சபரிமலை உச்சநீதிமன்ற உத்தரவின் சீராய்வு மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. கடந்த ஆண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் , 50 வயதிற்குள்பட்ட பெண்களும் என அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் பல பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. அங்கு ஆளும் இடதுசாரி […]
கேரளாவைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாத்திமா லத்திப் (18) என்ற கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி, சென்னை ஐஐடி கல்லூரியில் முதுகலை (எம்.ஏ.) மனிதநேயம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் ஐஐடி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவந்தார்.இவர் தினமும் கேரளாவில் உள்ள தனது பெற்றோரிடம் செல்ஃபோன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தனது பெற்றோரிடம் பேசாமல் இருந்ததாகக் […]
கேரள அரசின் தலைமைச் செயலாளர் மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்குக் கூட தகுதியற்றவர்கள் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கனம் ராஜேந்திரன், அவரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு என்றும், ஆளும் அரசு அறியாமல் இந்த கருத்தை […]
சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து […]
திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய […]
கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்வதற்குத் திரும்பும் வளைவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன. இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை […]
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதிற்குள்பட்ட பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வருடத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது.இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, […]
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்காகப் பள்ளிக் குழந்தைகள் நடத்திய பாசப்போரட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் பணியிட மாற்றத்தில் வேறு பள்ளிக்குச் செல்லவிருந்த ஆங்கில ஆசிரியர் பகவானை விட்டுப் பிரிய மனமில்லாமல் திருவள்ளூர் அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய பாசப்போரட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். இப்போது, அதே போன்ற ஒரு சம்பவம் கேரளாவிலும் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் இடுக்கி மாவட்டம் கரிம்குன்னம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமிர்தா. இவர் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுப்பதாக […]
கேரள இடுக்கி பள்ளி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த மாணவர்கள் கதறி அழுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பள்ளியில் மாணவர்களை அடித்ததாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை பள்ளியை விட்டு வெளியேறியபோது மாணவ மாணவிகள் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுப்புழா_வில் செயல்பட்டு வரும் பள்ளியில் அமிர்தா என்பவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் […]
காருக்கு காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் அரசு பணத்தில் மாற்றியது குறித்து எழுந்த விமர்சனத்திற்கு கேரள அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். கேரள மின் துறை அமைச்சரான மணி தனது இன்னோவா காருக்கு 30 மாதங்களில் 34 டயர்கள் மாற்றி உள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்தது. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டயருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக […]
கேரளாவில் காவல்துறையினர்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ,மாணவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் யூத் பெஸ்டிவல் என்ற பண்டிகை நடைபெற்று உள்ளது. அந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பள்ளி வளாகம் என்றும் பாராமல் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சதீஷ் என்பவர் […]
மிசோரின் ஆளுநராக கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் பி.எஸ்.பி.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்று வெளியானது. அதில் கேரள மாநிலத்தின் பாஜக தலைவரான பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் லடாக்கின் துணை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் என்பவரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக கிரிஷ் சந்திர என்பவரும், கோவாவின் ஆளுநராக ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யகோபால் என்பவரும் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழக பாஜக […]
திரிச்சூரில் மூங்கில் மூலம் ஒருவர் புத்தர் சிலை வடிவமைத்துள்ளதை அடுத்து மூங்கிலிலிருந்து வீணாகும் பொருள்களை வைத்தும் அவர் சிலைகள் வடிவமைத்து அசத்திவருகிறார். கேரள மாநிலம் திரிச்சூர் கலாசார, பண்பாடு மிகுந்த கைவினைப் பொருள்கள் அதிகம் தயாரிக்கப்படும் இடம். பல்வேறு கைவினைப் பொருள்கள், சிலைகள் உள்ளிட்டவை இப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதனிடையே, திரிச்சூரில் உள்ள வடக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மோகனன் தச்சராக உள்ளார். இவர் சிலைகள் செய்து அசத்திவருகிறார். சிலைகள் அனைத்தும் மூங்கில் மூலமும் […]
மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தையும் பாலியல் வல்லுறவையும் இணைத்து கேரள எம்.பி.யின் மனைவி இட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக முக்கிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைபி ஈடனின் மனைவி அண்ணா லிண்டா ஈடனின் ஃபேஸ்புக் பதிவுதான் இப்போது ஹாட்-டாபிக்காகியுள்ளது.அண்ணா லிண்டா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது மகளின் உடைமைகளை ஒரு வெள்ளத்திலிருந்து மீட்கும் காணொலியையும் தனது கணவர் ஐஸ்கிரீம் சாப்பிடும் […]
கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தை வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் நிகழ்ந்த தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு வயது குழந்தை அவரது தாயுடன் வாக்குசாவடி மையத்திற்கு வந்துள்ளது. தனது தாய் வாக்கு செலுத்த மை வைத்ததைக் கண்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று குழந்தை அடம்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் குழந்தைக்கும் விரலில் மை வைத்து விட்டனர். இந்நிலையில் வாக்கு செலுத்தியதுபோல் மை […]
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் […]
கேரளாவில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்குள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]
ஐஎஸ்எல் ஆறாவது சீசனின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ கொல்கத்தாவை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் ஸ்டைலில், இந்தியாவில் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இந்தத் தொடரின் ஆறாவது சீசன் இன்று கொச்சியில் கோலகலமாகத் தொடங்கியது. இந்த சீசனின் முதலில் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, அத்லெடிக்கோ கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் கேரளா அணி இரண்டு […]