காதலித்து திருமணம் செய்து கொண்ட மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்பாளையத்தை சார்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் அப்பகுதியிலுள்ள டிராவல்ஸ் வைத்து நடத்துபவரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நாளடைவில் டிராவல்ஸ் உரிமையாளரின் மகளான பிரியதர்ஷினியிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதைப்பற்றி ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததும் தன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் […]
Tag: kidnapping
மாமனாரை பழிவாங்கும் நோக்கத்தோடு ஒருவர் தனது மனைவியின் தம்பியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாலாஜி கார்டன் 7 வது தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகன் உள்ளனர். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு புகுந்து வகுப்பறையில் இருந்த கணேஷை அடித்து உதைத்து ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுவிட்டனர். […]
தாய் மற்றும் மகனை காரில் கடத்தி சென்று துன்புறுத்திய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆத்திகுளம் பகுதியில் தங்க மாரியப்பன் என்ற டி.வி மெக்கானிக் வசித்து வருகிறார். இவரின் நண்பரான மொக்கையா என்பவரின் மூலம் பாண்டிச்சேரியில் வசித்து வரும் ஜெய்சங்கர் என்பவர் தங்க மாரியப்பனுக்கு அறிமுகமானார். இந்நிலையில் ஜெய்சங்கர் தான் இரிடியம் வியாபாரம் செய்வதால் அதற்கு எலக்ட்ரானிக் போர்டு வேண்டும் என்றும், அதற்குரிய ஒரு லட்சம் பணத்தையும் தங்க […]
சிறுமி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவரை அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும் கடத்திச்சென்ற தமிழ்செல்வனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குன்னம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு.. வயது 23 ஆகிறது.. பொறியியல் பட்டதாரியான இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். […]
தாழக்குடி அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழு மாணவர்களை, பள்ளி அருகே வைத்து அடையாளம் தெரியாத நபர் வேனில் கடத்திச் சென்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடியில் அமைந்துள்ள அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு வருகைதரும் நேரம் பார்த்து, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஏழு மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி […]
தந்தையிடம் தாம் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடி 10 லட்சம் ரூபாய் கேட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகனும் 22 வயதில் வித்யா என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகவும் , வித்தியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்கள். அண்ணனும், தங்கையும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில […]
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் . திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் அபிஷா .பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை . இதுபற்றி விசாரணை நடத்தியதில், ராஜா என்பவர் அபிஷாவை கடத்தியது தெரிய வந்துள்ளது . இதனால் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .