மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் கட்டடத்தில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்துள்ளனர். இதில் 9 இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் மலமலவென கட்டடம் […]
Tag: killed
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மாலத்தீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 இந்தியர்களும் ஒரு வங்கதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் […]
தி.மு.க-வின் ஒன்றிய துணை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல் மனம்பேடு மீனாட்சி நகரில் கருணாகரன் என்ற தி.மு.க பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கனியமுதன் மற்றும் பருதி என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கோமதி தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாகரன் […]
கோவில் சுவரில் தலையை மோத செய்து தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் பகுதியில் சிவகங்கை என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற சிவகங்கை பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு […]
அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து (எண் 42), லக்காபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 பைக்குகள் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.. இதனையடுத்து சம்பவ […]
உ.பியில் இன்று காலை பயணிகள் வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, பீகாரிலிருந்து ஹரியானாவின் அம்பாலா நகருக்கு வாகனத்தில் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 5:30 மணியளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரச் மாவட்டம் பயாக்பூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு […]
குடித்துவிட்டு போதையில் தகராறு செய்த கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி, மகள் மற்றும் துணையாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் தனசேகரன். இவர் சின்னகள்ளிபட்டு பகுதியில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தன்னுடைய வீட்டில் தனசேகர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் அந்த […]
பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜூலை […]
மயிலாடுதுறை அருகே பைக்கில் சென்றவர்களை விஷவண்டு கடித்ததில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆனந்தகுமார் என்பவர் அதே பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தகுமார் இன்று காலை தன்னுடைய மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பாதையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அங்குள்ள பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்ற விஷ வண்டுகள் இருவரையும் […]
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது கார் மோதியதில், நான்கரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவரது மனைவி கவிதா.. செந்தில்குமார் தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.. இவரது மனைவி கவிதா வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்று இரவு சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஈசாக் என்பவர் சரியாக […]
சொந்த மகளை தெருவில் ஓட ஓட துரத்திச் சென்று பல பேர் முன்னிலையில் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த 30 வயது அஹ்லம் (Ahlam) என்ற பெண் தான் தந்தையின் கொடூர செயலால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.. அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொழுதில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]
விவாகரத்து செய்த மனைவியை அன்பாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொன்ற முன்னாள் கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவரது மகள் மஞ்சிதர் கவுர்.. 26 வயதுடைய மஞ்சிதரும், ககந்தீப் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.. திருமணத்துக்கு பின் மதுவுக்கு அடிமையான ககந்தீப் தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளான்.. இதையடுத்து ஓராண்டுக்கு முன்னர் மஞ்சிதர் […]
லாரியை முந்திசெல்ல முயன்றபோது இளைஞர், லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் செல்போன் மெக்கானிக் பிரகாஷ்.. 27 வயதுடைய இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு இவர் கொருக்குப்பேட்டையில் இருந்து மணலி சாலை வழியாக கொடுங்கையூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவ்வழியாக பருப்பு லோடு ஏற்றி கொண்டு சென்றுகொண்டிருந்த லாரியை பிரகாஷ் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக […]
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவருக்கு வயது 48 ஆகிறது.. இவரும், அதே ஊரைச் சேர்ந்த 50 வயதான முனியசாமி என்பவரும் விறகு வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தனர். விறகு வெட்டும் தொழிலில் முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று முன் தினம் முனியசாமி மதுபோதையில் […]
தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசியதால் 10 வயது மகளை இரக்கமின்றி அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை சேர்ந்தவர் ஹுசைன் அலெஃப் (Hussein Alef).. இவருக்கு 10 வயதில் ஹடித் (Hadith Orujlu), என்ற மகள் உள்ளார்.. இந்நிலையில் சம்பவத்தன்று தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசிய ஒரே காரணத்துக்காக்க பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் கொடூர தந்தை. அதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம், மகளை கொலை செய்தால் என்ன தண்டனை […]
வேறு ஜாதி பெண்ணை வீட்டை விட்டு அழைத்து சென்ற நிலையில், இளைஞர் மரத்தில் தூக்கில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு வயது 23.. இவர் கொத்தனாராக வேலை செய்து வருகின்றார். இதனிடையே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மிகவும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் கண்டிப்பாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் […]
ஜம்மு- காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை ஒழிக்க, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து கூட்டுப்படைகளாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. சமீபகாலமாக நடந்த தேடுதல் வேட்டையின் போது நிறைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில், புல்வாமா மாவட்டம் கூசு என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி […]
குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவரை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருப்பனூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி முருகன் என்பவரது மகன் வெங்கடேசன்.. 30 வயதுடைய இவரும் கூலி வேலை செய்து வருகின்றார்.. வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சுகந்தி (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. மேலும், வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கமும் […]
முதலையை கொன்றது மட்டுமில்லாமல், அதனை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்திலுள்ள கலாடப்பள்ளி என்ற கிராமத்தில் சபேரி என்ற ஆறு செல்கின்றது.. இந்த ஆற்றில் இருந்து 5 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று வெளியேறியது. இதனை கண்ட அந்த கிராம மக்கள், சிறிதும் பயமில்லாமல் முதலையென்றும் பாராமல், மீனின் செதிலை உரிப்பது போல உரித்து, அதன் கை மற்றும் கால்களை வெட்டினார்கள். அதைத் தொடர்ந்து முதலையின் தலை, […]
பிரேசில் நாட்டின் சில நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் தனது இரட்டை பெண் குழந்தைகளை தனியாக தவிக்க விட்டுவிட்டு பக்கத்து வீட்டாருடன் கதை பேசுவதற்காக சென்றுவிட்டார். அந்த சமயம் பார்த்து அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் பிஞ்சு குழந்தைகளை பதம் பார்த்து விட்டது. ஆம், குழந்தைகள் இரண்டும் நாய் கடித்த உடன் அலறியது.இந்த சத்தம் கேட்டு […]
திருவாடானை அருகே தம்பியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு பார்த்திபன் (தம்பி) மற்றும் வேலு (அண்ணன்) என 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், வேலுவின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். பார்த்திபன் வெளியூரில் வேலைசெய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்துவந்தார். அப்போது, சகோதரர்கள் இருவருக்குமிடையே […]
நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது 42 ஆகிறது.. இவர் தன்னுடைய 10 வயது மகள் சுவிட்சாவுடன் இன்று அம்பாசமுத்திரத்திலிருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததில், பைக் நாயின் மேல் […]
சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி டிரைவரை துரத்திப் பிடிக்க முயன்ற காவலர் அந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு.. இவருக்கு வயது 25 ஆகிறது.. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.. தற்போது இவர் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 29) காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு […]
கணவனை கொலைசெய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 50 வயதாகிறது. பிரபாகரனுக்கு சுகன்யா(30) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியர் இருவரும் ரூ 500 கோடி மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.. இதில், கணவர் பிரபாகரன் கடந்த 2012 ஆம் ஆண்டு, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடுத்த ஆண்டு சுகன்யாவையும் போலீசார் கைது […]
குடிபோதையில் தந்தையைக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன்.. 50 வயதுடைய இவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.. இந்தநிலையில் நேற்று இரவு 2 மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை தாய் சாந்தி ஏன் இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகன் சதீஸ் தாயை […]
பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு, சுந்தரி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு சண்முகப்பிரியா (வயது 23), கௌசல்யா(22), சந்தியா (21), கௌசிகா(19) என 4 பெண் குழந்தைகளும், ராஜ வசந்தசேனன்(19) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் சக்திவேலின் குடும்பத்துக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குபேந்திரன் வீட்டுக்கும், […]
குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொலைசெய்த கொடூர தந்தையை போலீசார் கைதுசெய்தனர். திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதியர் பாரதிமோகன் (27) மற்றும் வேம்பு (23).. இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.. இவர்களுக்கு பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி […]
குடும்ப பிரச்னையை தடுக்க வந்த இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் பாலமுருகன் என்பவரின் தங்கையை காதலித்து பெண் வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் பாலமுருகன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் நேற்று இரவு பாலமுருகன், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.. இந்த மோதலின்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வக்குமார் […]
சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகேயுள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ்.. 58 வயதுடைய இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகன் செந்தில்குமார்.. 31 வயதுடைய செந்தில்குமார் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊரிலுள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.. மேலும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை கடந்த […]
கோவையில் திருமணத்துக்கு நோ சொன்ன கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த, கோழிக்கடைக்காரர் காவல்துறையினருக்கு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார். கோவை காளப்பட்டி நேருநகர் 6ஆவது வீதியை சேர்ந்த 37 வயதுடைய பத்மநாபன் என்பவர் அந்தப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பத்மநாபனை விட்டுவிட்டு அவரது மனைவி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதேபோல அதேப்பகுதியை […]
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய திடீர் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியிருக்கும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வீர மரணமடைந்தார். மேலும், காயங்களுடன் உயிர் தப்பிய 3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் […]
ஆப்கானிஸ்தானில் 2 வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் மேற்கு கோர் மாகாணத்திலுள்ள சோதனைச்சாவடி வாயிலில் நுழைந்த தலிபான்கள் அங்குள்ள 10 போலீசாரை கொன்றதாக உள்ளூர் காவல் துறைத் தலைவர் ஃபக்ருதீன் தெரிவித்தார். இதற்கிடையே, கிழக்கு கோஸ்ட் மாகாணத்தின் அலி ஷெர் என்ற மாவட்டத்தில் தாலிபான்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக, மாகாண காவல் துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடெல் ஹைதர் கூறியுள்ளார்.. இந்தத் தாக்குதலில் […]
தனிமையில் இருந்ததைப் பார்த்த சிறுவனைப் பாட்டிலால் குத்திக்கொலை செய்த ஜோடியை போலீசார் கைதுசெய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் சுமதி தம்பதியர். இந்த தம்பதியருக்கு விக்னேஷ் (9) மற்றும் பவனேஷ்(8) என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இவர்கள் இருவரும் பனியன் தொழிலாளியாக வேலைபார்த்து வருகின்றனர்.. சம்பவத்தன்று இருவரும் ஜூன்11ஆம் தேதி காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளனர்.. அப்போது வீட்டில் இருந்த பவனேஷ்ஷை காணவில்லை என்பதால் பெற்றோர் […]
வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பைக் விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் […]
பூங்கா காவலாளி போலீசார் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக பலியானார். தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி என்பவரது மகன் புங்கலிங்கம். 34 வயதுடைய இவர் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தூத்துக்குடி – பாளை சாலையிலுள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது புங்கலிங்கத்திற்கும், அந்த பூங்காவின் காவலாளியாகப் பணியாற்றி வரும் மறவன் மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது […]
கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின சிறுவன் ஒருவனை ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் (வயது 17) என்ற பட்டியலின சிறுவனை ஆதிக்கசாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று சிறுவன் விகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாலா சௌகான், கரோம் சௌகான், ஜாஸ்வீர் மற்றும் பூஷன் ஆகிய 4 […]
ஜோகுலாம்பா அருகே மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமாக இருப்பதையறிந்த பெற்றோர் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டம் ஜோகுலாம்பா பகுதியை சேர்ந்த 20 வயதுடைய திவ்யா என்பவர் ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு காலேஜில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் விதிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு […]
அரசு இராசாசி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று அதிகாலை நோயாளி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையயும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கரும்பாலையில் வசித்துவரும் முருகன் என்பவர் நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற நவகாடல் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவன் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஜுனைத் அஷ்ரப் கான், மற்றொருவன் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என டிஜிபி தெரிவித்துள்ளார். ஜுனைத் அஷ்ரப் கான் என்பவன் ஹுரியத் அமைப்பின் தலைவர் முகமது அஷ்ரப் கானின் இளைய மகன் […]
ஆப்கானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுபோர் நடந்து வருகின்றது. இந்த சணடயில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு […]
துபாயில் இந்திய இளைஞன் ஒருவன் காதலியை கொன்று உடலை காரின் முன் இருக்கையில் அமரவைத்து நகரை சுற்றி வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. துபாயில் இந்திய இளைஞன் இந்திய பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் மால் ஒன்றின் வெளியே காருக்குள் வைத்து இளைஞன் தன்னுடைய காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து துடி துடிக்க கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காதலியின் சடலத்தை காரின் முன் […]
அமெரிக்காவில் கொள்ளை கும்பலில் ஒருவன் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக். இவரது இயற்பெயர் பஷர் பராகா ஜாக்சன். 20 வயதான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொள்ளை கும்பல் ஓன்று […]
மத்திய பிரதேச மாநிலம் ராம்கிரியா கிராமம் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தின் ராம்கிரியா கிராமத்தின் அருகே பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் பன்னாவிலிருந்து பஹடிகெடா கிராமத்துக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றதாக துணை காவல் ஆய்வாளர் சித்தார்த் ஷர்மா தெரிவித்தார். இந்த விபத்தில் ராம் […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வித்யா. வித்யாவின் முதல் கணவன் விபத்தில் இறந்ததை தொடர்ந்து இரண்டாவதாக நாங்குநேரி அருகிலுள்ள முதலை குலத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார்க்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வித்யா மற்றும் ஆறுமுகநயினார்க்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதையடுத்து தாயின் வீட்டில் இருந்து குழந்தையை பராமரித்து வந்துள்ளார் வித்யா. குழந்தையை பார்க்க அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் ஆறுமுகநயினார். […]
அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி முன்னாள் கவுன்சிலரின் மைத்துனரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் (35). தனது இல்ல திருமண நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்குப் அழைப்பிதழ் கொடுக்க கிருமாம்பாக்கம் அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி, பின் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், […]
திருச்சியில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை சீக்கிரமாக […]
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் இன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார். இதனிடையே முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் […]
பாதுகாப்பற்ற உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் பாலியல் தொழிலாளியை கொன்றதாக இரவு பணி காவலாளி கைதுசெய்யப்பட்டார். கர்நாடகாவில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கொலை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? இரவு காவாளியாக பணிபுரியும் முகுந்த் என்பவர் பாலியல் தொழில் செய்யும் மஞ்சுளா என்ற பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்து பேசி, அப்பெண்ணின் வீட்டிற்கு அவளுடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் அப்பெண்ணை பாதுகாப்பற்ற முறையில் உறவு வைக்க முயன்றார். இதற்கு மஞ்சுளா மறுப்பு தெரிவித்ததையடுத்து […]
தனது வீட்டின் முற்றத்தில் மண் தோண்டியதை தட்டிக்கேட்டதால் கோயில் நில உரிமையாளர் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் சில நாள்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை, வனத் துறையினர் பாலம் கட்டுவதற்காக ஒரு மைதானத்தில் மணல் கொட்டி வைத்துள்ளனர். பின்பு சில நாள்கள் கழித்து ஒரு கும்பல் அங்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் மண் எடுக்க வந்தவர்கள் என்று அங்குள்ளவர்கள் நினைத்துள்ளனர். பின்பு அந்தக் கும்பல் அனுமதி பெறாமல் அம்பலதிங்காலாவில் சங்கீத் வீட்டின் முற்றத்திலிருந்து மண்ணைத் தோண்டியுள்ளனர் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். […]