பீன்ஸை உப்பு சேர்த்து வேகவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த டபீள் பீன்ஸை பஜ்ஜி மாவு, போண்டா மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன் நன்றாக இருக்கும். பலாப்பழ விதையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி, காய்ந்த இறால், பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து வேகவைத்து கூட்டு தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து சேர்க்க சுவையாக இருக்கும். பூண்டுடன் கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் […]
Tag: kitchen tips
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் நீங்க அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும். பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டால் பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடி ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம். வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும். முருங்கை இலையை ஒரு ஈரத்துணிக்குள் கட்டி […]
சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள் ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் . அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும். அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் . ஜாங்கிரிக்கு , […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறி சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்தால் டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது. காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரத்தில் கெட்டியாகி விடும். பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைத்து மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டி […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பின் கேக் செய்யும்போது சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும். புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும். உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைத்தால் ஒட்டாமல் வரும். மசால்வடை மாவில் நீர் அதிகமாகி விட்டால் இரண்டு ரொட்டித் […]
சமையலறை டிப்ஸ்….
சமையலறை டிப்ஸ் தக்காளி நன்றாகப் பழுத்துவிட்டால், உப்பு சேர்த்து பிசிறி வைத்து விட்டால், 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் . சப்பாத்தி மற்றும் பூரிக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு கடலைமாவு கலந்து பிசைந்தால், பூரி சப்பாத்தியின் சுவை அதிகமாக இருக்கும். கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும். வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு […]
சமையலறை டிப்ஸ் 5
சமையலறை டிப்ஸ் பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்து பின் தோலை எடுத்து விட்டு துண்டுகளாக்கினால், கைகளில் கறை ஒட்டாமல் இருக்கும். அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால், டைல்ஸை வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பூசிவிட்டு, பின் சிறிதுநேரம் கழித்து துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று இருக்கும் . மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து துடைத்தால் […]