தான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக ஜாக்கிஜான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜாக்கிஜான் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவலை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கிஜான் அவர்கள் “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னை பற்றி கவலைபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். என்னை யாரும் எங்கும் அடைத்து வைக்கவில்லை. நான் நலமாக தான் உள்ளேன். தயவு செய்து கவலைப்பட வேண்டாம். பல இடங்களிலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அனுப்பி அனைவருக்கும் எனது நன்றிகள். அதில் இருந்த அனைத்துமாஸ்க்கையும் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க […]
Tag: korona
2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவுவது காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்புகள் வரலாம் என தகவல் அளித்துள்ளனர். வருகிற மே மாதத்திற்குள் கொரோன வைரசை கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை […]
கேரளாவில் கொரோன வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நலம் சீராக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “கொரோன வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. ஆனால் அந்த மாணவியிடம் தீவிர அறிகுறிகள் தென்படவில்லை. மாணவியின் உடல் நலம் சீராக தான் இருக்கிறது” ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க பட்டுள்ளதா என்னும் கேள்விக்கு ” கொரோன வைரஸ் பாதிப்பை குணப்படுத்த மருந்துகள் எதுவும் கிடையாது. மற்ற வைரஸ் பாதிப்புகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை போலவே […]
சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மருத்துவ மாணவி ஒருவர் மட்டுமே பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது சென்னையை சேர்ந்த மாணவி சீனாவில் மருத்துவம் பயின்று வருகின்றார். தியான்ஜின் நகரத்திலிருந்து விமானம் மூலமாக வியாழக்கிழமை தாயகம் திரும்பியுள்ளார். பல்வேறு விமான நிறுவனங்களும் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தி உள்ள நிலையில் அங்கிருந்து வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. தியான ஜின்னிலிருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்திருக்கிறார். விமானத்தில் […]
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் எட்டு படுக்கைகளை கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது கொரோன வைரஸ் சீனாவில் வேகமாக பரவி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளதால் உலகநாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவினை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கி வைத்தார். இங்கு கொரோன வைரஸ் அறிகுறிகளைக் கண்டறியும் கருவிகளுடன் இரு நுரையீரல் […]
சீனாவில் இருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோன பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு பாதிப்பு இல்லை என தெரிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னை சேர்ந்த இருவர் என எட்டு பேர் சீனாவில் இருந்து பெங்களூர் வந்து அங்கிருந்து சென்னை வந்தனர். அவர்களை தீவிரமாக பரிசோதித்து பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு […]
இந்தியாவில் இதுவரை ஒருவருக்குக்கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4 ஆயிரத்து 359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். ஹூக்கான் நகரில் வசித்து வந்த இந்தியர்கள் யாருக்கும் வைரஸ் பரவ வில்லை என்று […]