சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக நாடு முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்றும் கூறப்பட்டு உள்ளது. தற்போது […]
Tag: korono
கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையற்ற வதந்திகளை தவிர்க்கவும் சென்னையில் கடை உரிமையாளர் ஒருவர் ரூ1 க்கு சிக்கன் பிரியாணியை விற்பனை செய்தார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலமாக வருவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதனைக் கேட்ட மக்கள் பிராய்லர் கோழி வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து வரும் சூழ்நிலையில், அதன் விலை சரமாரியாக குறைந்தது. இது பிராய்லர் கோழி விற்பனையாளர்களிடம் மட்டும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் அந்தக் […]
கர்நாடாவில் அடுத்த ஒருவாரத்திற்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிகக் கொடூர நோய் கொரோனா வைரஸ் இதன் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது. அதன்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சில விதிமுறைகளை விதித்துள்ளார். அதில், அதிக கூட்டம் சேரும் இடமான திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு […]
சென்னையில் 60% IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய கோரி அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள சமயத்தில், கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்பதற்காக கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையிலும் இதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க ஐடி நிறுவனங்களும் பிரபல தொழிற்சாலைகளும் தங்கள் நிறுவன […]
சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்கள் செய்யும் தியாகம் உலக மக்களை வியக்க செய்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ்க்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசின் மருத்துவர்களையும் குறிப்பாக செவிலியர்கள் அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய தியாகத்தை […]
மலேசியாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்பே நாட்டிற்குள் நடமாட அனுமதிக்கப்படுவர். அதன்படி, விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த பயணிகளிடம் நோய் தொற்று இருக்கிறதா? என்பது […]
இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா என படிப்படியாக உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இத்தாலியில் எதிர்பாராதவிதமாக இதனுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் அந்நாட்டு அரசு அவர்களது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு […]
இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மாநிலங்களைவையில் தெரிவித்துள்ளார். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா என படிப்படியாக பரவி இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் கொரோனா குறித்த ஆய்வை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மார்ச் 4 ஆம் தேதி வரை கணக்கிட்டதில் இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது […]
திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து தமிழகத்திலுள்ள திருச்சிக்கு வருகை தந்த 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர்களிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவத்துறை நிபுணர்கள், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் மூவரையும் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸை 20 நொடிகளில் கண்டறியும் விதமாக செயற்கை நுண்ணறிவு கருவியை அலிபாபா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அலிபாபா நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளது. இந்த கருவி மூலம் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை வெறும் 20 நொடிகளில் 96% கண்டுபிடித்துவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ அமைப்புகள் இந்த கருவியை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது உலக நாடுகளை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பின்வருமாறு காணலாம், தொடர்ந்து நமது கைகளை சோப் மற்றும் நீரைக்கொண்டு நன்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். […]
கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் இது குறித்த விரிவான தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியம். அந்தவகையில் நோயின் அறிகுறிகள் பின்வருமாறு, பொதுவாக இது ஒரு வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த நோய் என்பதால் சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் […]
கொரோனா வைரஸ் எதிலிருந்து பரவியது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கோவிட் – 19 என்கின்ற கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் எந்த விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்ட சமயத்தில் வௌவாலின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக கூறி வௌவாலில் இருந்து தான் பரவியது என்பதை ஒரு கணிப்பாக தெரிவித்தனர். ஆனால் இது வௌவாலிடமிருந்து தான் மனிதனுக்கு […]
கோவிட் -19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ்க்கும் சாதாரண வைரஸ்க்கும் உள்ள வித்தியாசம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கோவிட் -19 என்று அழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸானது. ஏற்கனவே உள்ள கொரோனோ வைரஸ் குடும்பங்களில் புதியதாக தோன்றிய வைரஸ் என்று உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸும், சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸும் ஒன்றல்ல. ஆகவே சாதாரண கொரோனா வைரஸிற்கும், […]
ஆஸ்திரேலியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் என உலகம் முழுவதும் படிப்படியாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நோய் தற்போது ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், 75 வயது முதியவர் ஒருவர் இந்த வைரஸ் நோயால் இறந்துவிட்டார். இவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த பலனுமின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் கொரோனோ வைரஸால் உயிரிழந்த […]
தாடி மீசை அதிகம் வைத்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் விரைவில் பரவும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சீனா, கொரியா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியும், எந்தெந்த நாடுகளில் கால் வைக்கப் போகிறது என்று உலக நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் நோய் என்றால் அது கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் யாரும் எதிர்பாராத விதமாக அதிவிரைவில் பரவி வருகிறது. இதுவரை 2835 பேர் இந்த நோயால் இறந்து உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் […]
கொரோனா வைரசுக்கு இன்னும் ஒரு வருடத்தில் தடுப்பூசி தயாராகிவிடும் என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது சீனா தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனோ வைரஸில் இருந்து பாதுகாக்க உலக விஞ்ஞானிகள் மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்கா சுகாதாரத்துறை இதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது அது செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனோவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான சோதனை […]