கொரோனா வைரஸ் நமது மாநிலங்களில் பரவாமல் தடுக்க அண்டை மாநிலங்களுக்கு மக்கள் அடுத்த 15 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இது தமிழகத்திலும் பரவாமல் தடுப்பதற்காக எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து செய்தி குறிப்பு […]
Tag: koronovirus
கொரோனா வைரஸ் குறிப்பிட்ட பொருளின் மீது எத்தனை காலம் வரை உயிர் வாழும் என்பது குறித்த ஒரு குறுந்தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் குறித்து நாள்தோறும் ஆராய்ச்சியாளர்கள் புதிய புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அது எப்படி பரவுகிறது, அதனிடமிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்பது குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகளும் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி […]
மலேசியாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்பே நாட்டிற்குள் நடமாட அனுமதிக்கப்படுவர். அதன்படி, விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த பயணிகளிடம் நோய் தொற்று இருக்கிறதா? என்பது […]
இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மாநிலங்களைவையில் தெரிவித்துள்ளார். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா என படிப்படியாக பரவி இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் கொரோனா குறித்த ஆய்வை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மார்ச் 4 ஆம் தேதி வரை கணக்கிட்டதில் இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது […]
திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து தமிழகத்திலுள்ள திருச்சிக்கு வருகை தந்த 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர்களிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவத்துறை நிபுணர்கள், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் மூவரையும் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸை 20 நொடிகளில் கண்டறியும் விதமாக செயற்கை நுண்ணறிவு கருவியை அலிபாபா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அலிபாபா நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளது. இந்த கருவி மூலம் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை வெறும் 20 நொடிகளில் 96% கண்டுபிடித்துவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ அமைப்புகள் இந்த கருவியை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது உலக நாடுகளை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பின்வருமாறு காணலாம், தொடர்ந்து நமது கைகளை சோப் மற்றும் நீரைக்கொண்டு நன்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். […]
கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சீன நாட்டில் படித்து வந்த நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வருவதால் நடவடிக்கைக்கு சொந்த ஊருக்கு சீன அரசால் அனுப்பப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு வந்த இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ குழு ஒன்று பரிசோதனை செய்து வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக வெளியே அவர்களை அனுப்பாமல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பரிசோதனை […]