திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியையும், அவருடைய ஆண் நண்பரையும் பெண்ணின் கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நந்தம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சண்முகத்தின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராமமுர்த்தி. திருமணமாக ராமமுர்த்தி அதே ஊரில் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் ராமமுர்த்திக்கும் சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]
Tag: kovilpatti
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவுதியில் இறந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி உதவி கலெக்டரிடம் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை அடுத்த சிவந்திபட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் அல்லி பப்பா. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். கணவனை இழந்து இவர் குழந்தைகளை பராமரித்து வளர்த்து இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டி கொடுத்ததோடு மூத்த மகனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இளைய மகன் வேல்முருகன் என்பவன் சவுதி […]
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கோவில்பட்டி தெற்கு பஜார், மார்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு, பூ மார்கெட், மெயின் ரோடு ஆகியப் பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் குழு செய்த இந்த ஆய்வில் […]
தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது திடீரென்று திமுக தொண்டர்கள் லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் […]
நான்கு வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியினரின், நான்கு வயது சிறுவன் ஹரிஸ், தேசியக் கொடிகளை பார்த்து அந்த கொடிகளுக்குரிய நாட்டின் பெயரைச் சொல்லி அசத்துகிறார். தனியார் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவனிடம் 40 நாடுகளின் கொடிகளை ஆசிரியர்கள் காண்பித்தனர், இரண்டு நிமிடத்தில் அந்த நாட்டின் பெயரை சொல்லி சிறுவன் அசத்தியுள்ளார். விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும், நாட்டின் […]
கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110 பவுன் தங்கநகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருத்துவர் சொக்கலிங்கம் குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினார். […]
சோ. தர்மன் எழுதியுள்ள ‘சூல்’ நாவலின் மையக் கருத்தான குடிமராமத்துப் பணிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தருமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. […]
எழுத்தாளர் திரு.சோ.தர்மனுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை […]
தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தடையின்றி யூரியா வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் பருவ மழையை எதிர்பார்த்து வேளாண்மை செய்யப்பட்ட பயிர்கள் 40 நாட்கள் கடந்த நிலையில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே யூரியா வழங்கும் சமயங்களிலும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விளாத்திகுளம் புதூர் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்புடன் யூரியா விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து கோவில்பட்டி […]
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வெளிநாடுகளில் நம் மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையெனப் பேசினார். கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டன. அப்போது கனிமொழி பேசுகையில், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பிற்கு எந்த நிறுவனம் வேலை தரும் என்பதைப் புரிந்துகொண்டு நேர்முகத் தேர்விற்குச் செல்லவேண்டும், பல நேரங்களில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று தெரியமால் தவற விட்டுவிடுகிறோம் என்று […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயதினர் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது நாளில் கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர். மேலும், அம்மனுக்கு சிறப்பு […]