Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்… அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா…!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 168 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் முன்பு இல்லாத அளவில் அதிகரித்ததற்கு கோயம்பேடு தான் காரணம்: சுகாதாரத்துறை!

என்றும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன்று கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு சந்தை தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழக்தில் காரோணவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 377 பேர், பெண்கள் 150 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு தொடர்பு மூலம் நெற்குன்றத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா உறுதி…!

சென்னை நெற்குன்றத்தில் ராஜிவ் காந்தி நகர், கோதண்டராமன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு தொடர்பு மூலம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கிடையாது… பொதுமக்கள் செல்லத் தடை: சிஎம்டிஏ அறிவிப்பு..!

மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இயல்புநிலை திரும்பும் வரை கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகள் தொடரும் என கார்த்திகேயன் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் முடங்கும் சில்லறை வியாபாரம்… 850 பழக்கடைகளை மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகளை மே 1ம் தேதி முதல் மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது பழக்கடை வியாபாரிகளும் கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

JUST NOW : வெங்காயம் விலை மேலும் குறைந்தது ….!!

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் வெங்காயத்தின் விண்ணை தொடும் அளவு எட்டியது. ஒரு கிலோ ரூ 200 வரை விற்கப்பட்ட்து. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்காக வெங்காயம் விலை குறைந்து வருகின்றது. இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் விலை குறைந்துள்ளது. இன்று பெரிய வெங்காயம் கிலோ 32_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல சாம்பார் வெங்காயம் ரூ 60-க்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் நகங்களையும், பற்களையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்…தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்…!!

பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.   சென்னை ,கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்க வளாகத்தில் தமிழ்நாடு வாணிபர் பேரவை நடத்தவிருக்கும் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். பாலியல் ரீதியான தாக்குதலில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வெங்காய விலை ஒரே நாளில் ரூபாய் 20முதல் 40வரை குறைந்தது …!!

மழையின் காரணமாக அதிக விலையில் இருந்த வெங்காயம் தற்போது ,சென்னையில் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் நாடு முழுவதிலும் வெங்காய விலை அதிகரித்துள்ளது .இதனால் சென்னையிலும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180ரூபாய் விற்கப்பட்டு வந்தது .இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரே நாளில் 20ரூபாய் முதல் 40ரூபாய் வரை குறைந்துள்ளது .சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 170வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130முதல் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

கடும் வறட்சி… நாளுக்கு நாள் அதிகரிக்கும் காய்கறிகள் விலை… கோயம்பேட்டில் 25 முதல் 40% வரை அதிகரிப்பு..!!

வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காய்கறி விலை 50% உயர்வு “மக்கள் வேதனை..!!

காய்கறி விலை வழக்கத்தை மீறி 50% உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் . காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாகவும், கோடை காரணமாகவும் கோயம்பேடு சந்தையில் புடலங்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் தக்காளி உள்ளிட்ட நாட்டு வகை காய்கறிகளின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ கணக்கின்படி காய்கறிகளின் விலை தக்காளி ரூ60, பீன்ஸ் ரூ110, இஞ்சி ரூ140, பச்சை மிளகாய் ரூ55, மற்றும் பெரிய வெங்காயம்ரூ18 ஆக உயர்ந்துள்ளது காய்கறிகளின் விலை உயர்வால் […]

Categories

Tech |