Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் வாந்தி மயக்கம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்புச்சந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 98 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். மேலும்  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உணவில் பல்லி விழுந்து இந்நிகழ்வு நடந்து இருக்கலாம் என கூறினார்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கத்தரிக்காய் விளைச்சல்  அதிகரித்ததால் விலைசரிவு…விவசாயிகள் கவலை !

கத்தரிக்காய் விளைச்சல்  அதிகரித்ததால் மகிழ்ச்சி  அடைந்த விவசாயிகள், விலை  சரிந்ததால்  கவலை அடைந்துள்ளனர் . கிருஷ்ணகிரி அணையின் மேற்புறம் உள்ள விவசாயிகள் கத்தரிக்காய்,முள்ளங்கி ,  தக்காளி வெண்டைக்காய், ஆகிய  காய்கறிகளை  பயிரிட்டு  வருகின்றனர் . இங்கு  விளைவிக்கப்படும்  கத்தரிக்காய்  ஓசூர் சந்தை  மூலமாக  கேரளா  மட்டுமின்றி  தமிழ்நாட்டின் பல  பகுதிகளுக்கும் கொண்டு  செல்லப்பட்டு  விற்பனை  செய்யபடுகின்றன . விவசாயிகள்  கத்தரிக்காய் கிலோவுக்கு  20 ரூபாய் கிடைக்கும்  என்று  எதிர்பார்த்தனர் .ஆனால் விளைச்சல்  அதிகமாக  இருப்பதால்  கிலோ 15 ரூபாக்கு   மட்டுமே விற்பனை  செய்யப்படுகிறது […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை நிறுத்தம் ….. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு  நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . 1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை  எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த  போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை  108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை  விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில்  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் […]

Categories

Tech |