கிருஷ்ணகிரியில் பெண் மருத்துவர் உட்பட 11 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா இருந்த நிலையில் அவரது மனைவி உட்பட 11 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று நடைபெற்றது. அதில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 922 பேர் தற்போது […]
Tag: # krishnakiri District News
கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானது. கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டவரின் ரத்த மாதிரி சென்னை கிங்ஸ் இண்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. […]
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மாதுவின் மனைவி கீதா. இவர் பல நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாத நிலையில் மனவருத்தத்தில் இருந்துள்ளார் கீதா. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கீதா பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் கீதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]