Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் சரியா நடக்கணும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. சூப்பிரண்டு உத்தரவு….!!

உள்ளாட்சி தேர்தல்களில் எந்த விதமான பிரச்சனையும் வராத வண்ணம் காவல்துறையினர் 140 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு  தீபா சத்யன் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு 140 ரவுடிகளை காவல்துறையினரின் மூலமாக கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர்களில் 50 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் மற்ற 90 நபர்கள் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர்கள் முன் காவல்துறையினரால் ஆஜர்படுத்தி எச்சரிக்கை செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |