பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய குற்றத்திற்காக ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ரவுடியானா ரமேஷ் என்பவர் ஜெயந்தியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஜெயந்தி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை […]
Tag: lady attacked
பெண்ணை தாக்கிய முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரைக்கோட்டை பகுதியில் மணிகண்டன்-ஜெயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயஸ்ரீ தனது வீட்டிற்கு அருகே நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அருகில் இருக்கும் வயல்வெளியில் இருந்து ஓடி வந்த 2 முகமூடி கொள்ளையர்கள் ஜெயஸ்ரீ அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் ஜெயஸ்ரீ தாலி சங்கிலியை பிடித்துக்கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த […]
மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூஞ்சோலை கிராமத்தில் செங்கோடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மல்லிகாவிற்கு சொந்தமான மாடு அப்பகுதியில் இருக்கும் அந்தோணி என்பவரது வயலில் இருந்து நெல் பயிரை மேய்ந்துள்ளது. இதனால் மல்லிகாவிற்கு அந்தோணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்தோணி மல்லிகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்அந்தோணியை கைது […]
சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாயகி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சின்ன துரைக்கும் கவுண்டன்புதூர் பகுதியில் வசிக்கும் துரைசாமி மற்றும் கதிர்வேல் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கதிர்வேலுவும், துரைசாமியும் இணைந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லோகநாயகியை சரமாரியாக தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். […]
மனைவியை கல்லால் தாக்கிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிஷா மீது அப்துல்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிஷா வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது அப்துல்லா தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை […]
தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பள்ளபாளையம் பகுதியில் வசந்த், முருகன் என்ற இரண்டு கஞ்சா வியாபாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் வசந்தனின் அண்ணனான பேச்சிமுத்து என்ற கூலித் தொழிலாளி தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றித்திரிந்துள்ளார். இதனை அடுத்து வசந்தனின் கொலை […]