காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது அரசு கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு தவறான கருத்தைக் கூறிவருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் […]
Tag: Legislative Assembly
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களே கடிதம் அளித்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஊர்வலமாகச் சென்று துணைநிலை ஆளுநரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினார். இச்சூழலில் […]
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. […]
தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிராவில் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அங்கு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை மொத்தம் ரூ. 142 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 975 சட்டவிரோதமான ஆயுதங்களையும் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே வாக்குக்கு […]
DNT தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையை நடைமுறைபடுத்த கோரி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாடானை சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான சே. கருணாஸ் அவர்கள் இன்று தமிழக முதல்வருக்கு DNT தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளார்.அதில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது முக்குலத்தோர் மற்றும் 68 சமுதாய மக்கள் சார்பாக பழைய DNT கோரிக்கை பற்றி வலியுறுத்தினேன். மேலும் அந்த மனுவில் , 68 சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் DNT சம்மந்தப்பட்ட […]