Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலை…இரவு…. தண்ணீர் இப்படி குடிச்சு பாருங்க….. அப்புறம் அசத்தலான மாற்றம்… ஆரோக்கிய வாழ்வு தான்….!!

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடுபடுத்திய தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது தான் உடலுக்கு மிக ஆரோக்கியமானது என வீட்டில் பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். அந்தவகையில் வெந்நீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்,  வெந்நீர்  குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.  தினமும் காலையிலும், இரவு நேரத்திலும் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் பழக்கம் உடலிலிருந்து நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது.  முகத்தின் வயதான தோற்றத்தைப் போக்கி சருமத்தின் பிரகாசத்தை அதிகரிக்கிறது. 

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அற்புதம் : 8 விதமான பிரச்சனைகள்…… ஒரே வாட்டரில் தீர்வு…..!!

ரோஸ் வாட்டரின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தோல் எரிச்சலை தணிக்கும்,  தோல் சுருக்கத்தை சரி செய்யும்,  இதன் வாசம் மன அழுத்தம் மற்றும் தலைவலியை போக்கும்,  வடுக்களை குறைக்கும்,  உச்சந்தலையில் லேசாக மசாஜ் செய்தால் பொடுகை நீக்கும்,  உலர்ந்த கூந்தலுக்கு புத்துயிர் அளிக்கும்,  அதன் வாசம் இருந்தால் நல்ல தூக்கம் பெற உதவும்,  கரு வளையங்களை குறைக்க உதவும்,  மேலும் முகம் பளபளப்பாக ஜொலிக்க, முகத்தில் இருக்கக்கூடிய தோலின் மென்மையைப் பராமரிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…! இஞ்சி பூண்டு பேஸ்ட்…. இந்த தப்ப பண்ணாதீங்க…. புற்றுநோய் கட்டி வருமாம்…!!

கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை உணவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்  பற்றிய தொகுப்பு  நாம் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சமையலில் பயன்படுத்துவது வழக்கம். முன்பெல்லாம் வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தி வந்த நாம் தற்போது கடைகளில் இருந்து வாங்கிக் கொள்கிறோம். இது நமக்கு என்ன பாதிப்பை கொடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை. ஒருவர் மருத்துவமனைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் புற்றுநோய் கட்டி போன்று உருவாகியுள்ளது என கூறியதோடு […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…! பிரஷர் குக்கரில் சமையல்…. உணவா….? விஷமா….?

பிரஷர் குக்கரில் சமைக்கும் உணவை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு  தற்போதைய அவசர காலகட்டத்தில் இயந்திரம் போல் இயங்கிவரும் பலர் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்க எண்ணுகின்றனர். சாப்பிடும் உணவையும் விரைவாக சமைத்து முடிக்கவேண்டும் என்பதற்காக பலரும் பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. பொதுவாக உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் படவேண்டும் என பழங்காலத்தில் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

டெய்லி டிப்ஸ் : உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளும்….. அதற்கான தீர்வுகளும்….!!

உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கூடிய இயற்கை மருத்துவ குறிப்புகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கண் நோய்கள் :  பசுவின் பாலை,  நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு, இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால் கண் நோய்கள் அகலும்.  ஏப்பம் :  அடிக்கடி ஏப்பம் வருகிறதா ? வேப்பம்பூவை தூள் செய்து 4 […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா….? பாதிப்பை ஏற்படுத்தும் 4 சாதராண காரணங்கள்….!!

ஆண், பெண் என இருபாலரும் தற்போது அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனையாக இந்த முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளது. இயல்பாகவே முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நமது முந்தைய சந்ததியினரின் மரபியல் அடிப்படையில் அதிகம்  நிகழ்ந்தாலும், நிகழ்கால வாழ்க்கையில் சில காரணங்களின் அடிப்படையில், இந்த முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. அவற்றை இங்கு பட்டியலிடுவோம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படலாம்.  மன அழுத்தம், சோர்வு மற்றும் சில […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சந்தையிலிருந்து வந்ததும்…… ஒரு சில நிமிடங்களுக்கு….. முதலில் செய்ய வேண்டியது இது தான்….!!

இன்றைய காலகட்டத்தில் வயல்வெளிகளில் விளையக்கூடிய பயிர்கள் மீதும், காய்கறிகள் மீதும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்கள் மீது தெளிக்கிறார்கள். பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் தான் பெரும்பாலும் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இவற்றை வாங்கும் மக்கள் அவற்றை சரியாக கழுவி சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால், பிற்காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே பூச்சி கொல்லி மருந்துகளை முற்றிலுமாக காய்கறி, பழங்களிலிருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுப்பிடிப்பா…? இதை செய்யுங்க….. நொடியில் நிவாரணம் பெறலாம்…!!

சிறுவயதில் விளையாட்டு மைதானத்தில் அதிகப்படியாக ஓடியாடி விளையாடும்போது  நம்மில் பலர் மூச்சுப்பிடிப்பால் சிரமப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய தலைமுறையினர் அதிகப்படியாக ஓடி, ஆடி விளையாடுவது கூட இல்லை. சிறிது தூரம் வேகமாக நடந்து சென்றாலே, பலருக்கு மூச்சுபிடிப்பு என்பது ஏற்பட்டு விடுகிறது. மேலும் பெரும்பாலானோருக்கு முட்டை உள்ளிட்ட ஒரு சில உணவுகளால் வாயு பிரச்சனை மூலமாகவும், மூச்சுப்பிடிப்பு ஏற்படும். மூச்சு பிடிப்பினால் சிரமப்படுபவர்கள் வீட்டிலுள்ள சூடம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். […]

Categories
லைப் ஸ்டைல்

அதிகரிக்கும் தற்கொலை….. இதிலிருந்து தப்பிப்பது எப்படி….? சிறந்த வழிகள் இதோ….!!

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு ஒரு வித போதை ஆகவே மாறிவிட்டன. சமூக ஊடங்களில் அளவுக்கு அதிகமான நேரத்தையும், கவனத்தையும் செலவிடும் போது மனநலத்தை மட்டுமல்லாமல்  உடல் நலத்தையும் அதிகம் பாதிக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதிலிருந்து தடுக்கும் எளிய வழிகளை உங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.  பயன்பாட்டை குறையுங்கள் : சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் குறைந்தபட்சம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எண்ணெய் பசை பிரச்சனையா….? வாரத்தில் 6 நாள்…. இந்த 6 STEP பாலோ பண்ணுங்க….!!

முகத்தில் எண்ணெய் பசையை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சருமம் எண்ணை பசைக்கான காரணங்கள் :  மரபியல் பாரம்பரியம், அழகுசாதன பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஹார்மோன் மாற்றங்கள்,  உணவு பழக்கம்,  மன அழுத்தம்,  நீர்சத்து குறைதல்  மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? சருமத்தில் எண்ணெய்ப் பசையாக இருக்கிறதா ? இதற்காக நீங்கள் கவலைப்பட்டு, மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வுகள் உள்ளது. இதோ […]

Categories
லைப் ஸ்டைல்

சொந்த வீடு வாங்க ஆசையா….? இந்த 8 விஷயத்தை இப்ப இருந்தே பாலோ பண்ணுங்க….!!

மிகவும் வசதியான, சௌகரியமான நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக உள்ளது. அந்த கனவை நினைவாக்க பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பட்ஜெட் :  உங்கள் குடும்பத்தின் மாத செலவு போக வருமானத்தில் எவ்வளவு தொகை மீதம் இருக்கும் என்பதை கணிக்க, முறையாக பட்ஜெட் போடுவது அவசியம். உங்கள் வீடு  கடைசியாக இருக்கப்போவதில்லை. ஆகவே முதல் வீட்டிற்கான தேவைகளை ஒதுக்கிய பின் அடுத்த சொத்துக்காக திட்டமிடுங்கள்.  அமைந்திருக்கும் இடம் :  வீடு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சோர்வா….? பலவீனமா இருக்கீங்களா….? இதை அதிகம் சாப்பிடுங்க…!!

நாடு முழுவதும் ஊரடங்கில்  பல்வேறு தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்து பணிகளும் இயல்பாக நடைபெற தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக பணிக்கு செல்வதால் பலர் உடல் சோர்வாக இருப்பதை போன்ற உணர்ச்சியை பெறுகிறார்கள். நீங்கள் இப்படியான சோர்வை உணர்கிறீர்களா ? அப்படி என்றால், இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு தான். நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கெட்ட கொழுப்பை நீக்க…. இதய பிரச்சனையிலிருந்து பாதுகாக்க…. இதை தினமும் சாப்பிடுங்க…!!

பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இயற்கையாகவே தமிழர்களின் உணவு முறையில் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு காய்கறிகளிலும்  ஏதேனும் ஒரு மருத்துவ நன்மை ஒளிந்திருக்கிறது. அந்த வகையில், உடலுக்கு தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட பச்சை பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி  மலச்சிக்கலை போக்குகிறது. மேலும் ரத்த […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பளிச்…. பளிச் பற்களுக்கு…. 5 நாளுக்கு BRUSH தூக்கி போடுங்க…. இந்த தோலை வச்சு தேய்ங்க….!!

இயல்பாகவே நமக்கு நற்குணங்கள் ஏராளம் இருந்தாலும், அதனை மற்றவர்களிடம் காண்பிப்பது நமது வெளிப்புறத் தோற்றம் தான். வெளிப்புற தோற்றத்தின்  அடிப்படையில் தான் முதலில்  மக்கள் நம்மை கணிக்கிறார்கள். அதை தாண்டி பழகும் போது மட்டுமே நம்முடைய குணம் அவர்கள் கண்ணுக்கு தெரியும். பொதுவாக வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சிரிப்பு தான். நமது சிரிப்பு அழகாக இருக்கும் பட்சத்தில், எளிதாக மற்றவர்களை கவர்ந்து அவர்களிடம் நல்ல நட்புறவுடன் பழகிக் கொள்ள முடியும். […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த 6 குணம் இருந்தால்…. உங்க கணவருக்கு நீங்க தான் பெஸ்ட் WIFE….!!

நல்ல மனைவியாக இருப்பதற்கான பொதுவான குணங்கள் இவை என்று முற்றிலுமாக வரையறுத்து விட முடியாது. ஆனால் மணவாழ்வில் கணவருக்கு பொருத்தமான இணையாக இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில், மனைவியிடம் பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கும் ஒருசில குணநலன்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  சுயமாக முடிவு எடுப்பவர் :  சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரத்தை போல் சுயமாக முடிவெடுக்கும் பெண்களை எப்போதும் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகமா முடி கொட்டுதா…? ரொம்ப கம்மியான செலவில்….. இந்த மசாஜ் பண்ணுங்க….!!

பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சிலருக்கு பசியே ஏற்படாது. வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் உணவில் தினசரி பூண்டு சேர்த்து வர நன்றாக பசி எடுக்கும். ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருப்பவர்கள் ஒரு பூண்டை எடுத்து அதை சுடுநீரில் போட்டு குடித்தால் உடனடி  நிவாரணம் கிடைக்கும். தலை முடி உதிர்வதை தடுக்க பூண்டை அரைத்து, அதோடு எலுமிச்சை சாறு சிறிதாக கலந்து தலையில் மசாஜ் செய்தால் முடி உதிர்வு பிரச்சினை சரியாகும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரூ10 – ரூ80 க்குள்ள தான்…. வாங்கி போட்டு பாருங்க…. எலும்பு பிரச்சனை இல்லாம வாழுங்க…..!!

உலகின் பிற இனங்களை ஒப்பிடுகையில், தமிழின மக்கள் உணவு, உடை உள்ளிட்டவற்றில்  பாரம்பரியத்துடன் சிறந்து விளங்கியதோடு, அணிகலன் அணியும் அற்புதமான பாரம்பரியத்தையும் கொண்டிருந்தனர். தமிழர்கள் அணிகலன்களை வெறும் அழகுக்காக மட்டும் அணியாமல், ஒவ்வொரு இடத்திலும் நாம் அணியக்கூடிய அணிகலன்களும் தர கூடிய  ஒரு மருத்துவ குணத்தை சொல்லிக் கொடுத்தும்  சென்றிருக்கிறார்கள். அதில், ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழர்களின் பாரம்பரியங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது செம்பு. இப்போதும் கூட பலர் செம்பு காப்பு, மோதிரங்களை பயன்படுத்துகிறார்கள். செம்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்களில் பிரச்சனை : தடுக்க…. தீர்க்க…. டாப்-3 டிப்ஸ் இதோ….!!

கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நாள்தோறும் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்களை கொண்டு எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு பார்வைத்திறனை பாதுகாக்கலாம். தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது வறட்டு தன்மையிலிருந்து கண்களை பாதுகாக்கும். கண்களை சிமிட்டுவது கண்களுக்கு வெளியே நாம் கொடுக்கும் சிறு பயிற்சி. அதேபோல் கண்களுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளை அசைத்து எட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

“எண்ணம் தான் எல்லாம்” இதை மட்டும் செய்யுங்க…. 60 வருட கனவு கூட 20 வருடத்துல முடியும்….!!

நம் ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒருநாள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு சிறந்த சிந்தனை கண்டிப்பாக தோன்றும், அது வாழ்க்கைக்கு சரிவராத அதீத கற்பனையாக இருந்தாலும், விடா முயற்சியை செலுத்தினால் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லலாம். ஆனால் அதை ஒரு சிலர் மட்டுமே கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். அதற்கு காரணம், ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்து விட்டு, அதை சிறிது நேரம் கழித்து செய்யலாம் அல்லது சில நாட்களுக்கு பிறகு செய்யலாம் என்ற அலட்சிய மனோபாவம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு கார சட்னி… செய்வது மிக சுலபம்… சுவை அதிகம்…!!

 மிளகு காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள் : தக்காளி                                             – 5 (பெரியது) காய்ந்த மிளகாய்                           – 5 மிளகு                […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சாஃப்ட் ஆன சருமம் வேண்டுமா….? இது இருக்கும் போது….. காஸ்ட்லி பொருள்கள் எதற்கு….?

முக அழகை பராமரிப்பதற்கான ஒரு சிறிய டிப்ஸ் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய காலகட்டத்தில் தங்களது அழகை பராமரித்து கொள்வதற்காக பலர் அதிகமாக செலவு செய்து வருகிறார்கள். அழகை பராமரிப்பதற்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. ஆனால் இயற்கை முறையிலேயே நமது அழகை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது தான் இந்த செய்தி தொகுப்பு. அதன்படி, தக்காளியை  துண்டாக நறுக்கி முகத்தில் தேய்த்து, 5 […]

Categories
உணவு வகைகள் உலக செய்திகள் லைப் ஸ்டைல்

ரொம்ப…. ரொம்ப ஆபத்து….. சாதாரணமா நினைக்காதீங்க….. இனி அதிகம் குடிக்காதீங்க….!!

குளிர்பானங்களில் உயிரைப் பறிக்கும் நோய்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.  கட்டாயம் உணவு முறையில் மாற்றம் தேவை என்பதை இந்த கொரோனா நமக்கு நன்கு தெரியப்படுத்திவிட்டது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவை அதிகம் உண்ணவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பாரம்பரிய உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டு வந்தனர். இது ஒருபுறம் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், துரித உணவை விட குளிர்பானங்கள் என்று […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காரம் தான்….. ஆனால் இது தெரிஞ்சா இனி ஒதுக்க மாட்டீங்க….. பச்சை மிளகாயின் மருத்துவ குணம்….!!

பச்சை மிளகாயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  பச்சை மிளகாய் பொதுவாக தமிழக உணவு பொருட்களில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று. இது சுவைக்கும், காரத்துக்கும் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பச்சை மிளகாயில், பல சத்துக்கள் நிறைந்துள்ளது பலருக்கும் தெரியாது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்கவும், ரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உமிழ்நீர் அதிகம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இது வரை செஞ்சிருப்பீங்க….. இனி இந்த 7 தப்ப செய்யாதீங்க ப்ளீஸ்….. மூளை மலுங்கிடும்….!!

உங்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையமாக இருப்பது மூளைதான். மூளையை ஆரோக்கியமாகவும், செயல்திறன் மிக்கதாகவும் பராமரித்தால், உடல்நலம், மனநலம் இரண்டையும் காக்கலாம். இதற்கு தடையாக இருக்கும் மோசமான 7 பழக்கங்களை பட்டியலிடுகிறோம்  இவற்றை தவிர்த்து மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.  காலை உணவை தவிர்த்தல் : காலை உணவை தவிர்க்காதீர்கள். காலை உணவை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவை குறைத்து மூளையை சோர்வடையச் செய்யும். சரியான நேரத்தில் தவறாமல் உணவு அருந்துவது மூளையை  ஆற்றலுடன் வைக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

டீ பிரியரா நீங்கள்…..? அப்ப இத மட்டும் சேர்த்துக்கோங்க…. ஆரோக்கியம் அமோகமா இருக்கும்….!!

தேநீரில் மேற்கொண்டு  மருத்துவ குணம் அதிகரிப்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இந்தியாவின் தேசிய பானம் என்று அழைக்கப்படும் தேனீர் பெரும்பாலான இந்தியர்களால் விரும்பப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த தேநீர் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீரில், பல வகைகளும் உண்டு. தமிழகத்தில் மருத்துவ குணம் நிறைந்த ஸ்பெஷல் டீ  என்றால் அது இஞ்சி டீ  உள்ளிட்டவை தான். இதனுடன் மற்றொரு ஒரு பொருளையும் டீயுடன் சேர்த்துக்கொண்டால் என்ன நன்மை என்பது குறித்து இனி காண்போம், […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான சருமத்திற்கு….. இது இருக்கும் போது மத்த பொருள் எதுக்கு….?

ஆரஞ்சு பழத்தின் தோலில் வைட்டமின் சி நிறைந்து உள்ளதால், சருமத்திற்கு நன்மை தரும். தோலின் ஈரப்பதம் போக காய வைத்து, மைய அரைத்து பொடியாக்கி குளிக்கும் போது சோப்பு போட்டு குளிக்கலாம் அல்லது ஆரஞ்சு தோல் பொடியுடன், சிட்டிகை மஞ்சள், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேக் போடலாம். இது முகப்பரு, திட்டுகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தை பாதுகாக்கும். 

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த டயட் பாலோ பண்றீங்களா…? தவறான செயல்….. கண்டிப்பா ஆபத்து…. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!

இளைஞர்களிடம் டயட் கலாச்சாரம் என்பது தற்போது பெருமளவு அதிகரித்து விட்டது. இந்த டயட் கலாச்சாரத்தில் கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கும் கீட்டோ டயட் மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், கார்போஹைட்ரேட் இல்லாத உணவு முற்றிலும்  தவறான உணவு பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால்  சோர்வு, மலச்சிக்கல், உடல் பலவீனம், சீரற்ற மனநிலை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“தெய்வம் தந்த அற்புத உணவு” தினமும் சாப்பிட்டால் எந்த நோயும் வராது….. கம்மங் கூழின் டாப்-10 நன்மைகள்…!!

கம்மங்கூல்-இன் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உடல் சூடு குறையும் : உடல் சூடு காரணமாக சிறுநீரக கோளாறுகள், உடல் கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தினமும் இரண்டு டம்ளர் கம்மங் கூழ் குடிப்பதன் மூலம் உடல் சூடு சமநிலை அடைகிறது.  எலும்புகள் வலுவடையும் : சுண்ணாம்பு சத்து கம்மங்கூழ் அதிகம் உள்ளதால், எலும்புகள் வலுவாக இது உதவி செய்கிறது. ஆர்த்தரைடீஸ் போன்ற வலி உள்ளவர்கள் கம்மங்கூழ் தினமும் பருகி வருவதால் நீண்டகால […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

15 நிமிடத்தில் அழகான முகம்….. காபி தூளை வைத்து இப்படியும் பண்ணலாம்….!!

காபி தூளின் ஒரு சில பயன்பாடுகள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  காபி தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். காபி தூளில் தேன் அல்லது சர்க்கரை கலந்து முகத்தில் தேய்க்க முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இறந்த செல்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, முக பிரச்சனைகளில் இருந்து தீர்வு தரும்.  ஆலிவ் எண்ணெயுடன் காபி தூள் கலந்து முகத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஹச் ஹச்சுனு தும்ப தேவையில்லை…. தொடர் தும்மல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு….!!

தொடர் தும்மல்  பிரச்சனையை போக்குவதற்கான மருத்துவ குறிப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா காலகட்டத்தில் சாதாரண இருமல், தும்மல் என்றாலும், நம்மை நெருங்கியவர்கள் கூட நம்மை விட்டு பயத்துடன் சற்று விலகி நிற்கிறார்கள். அது சாதாரண தும்மல் தான் என்பது நமக்கு தெரிந்தாலும், இது சகஜம் என்று நாம் உணர்ந்தாலும் பிறருக்கு அது பயத்தை, அசௌகரியமான நிலையை கொடுக்கிறது. அதேபோல், கொரோனா காலகட்டம் மட்டுமல்லாமல், பிற காலகட்டங்களிலும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வெயிலில் வேலை செய்பவர்களா நீங்கள்…? அப்ப இது உங்களுக்கு தான்….!!

நம்மைப் பார்த்ததும் பிறருக்கு பிடிக்க வேண்டும் என்றால் தலை முதல் கால் கால் வரை மிகவும் அட்ராக்டிவ் தோற்றத்துடன், நாம் பிறருக்கு  காட்சி அளிக்க வேண்டும். பெரும்பாலும் பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக, முகத்தில் தான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பலருக்கு முகத்தை தாண்டி உடலின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கவனம் செல்லும் என்பதை மறந்துவிடுகிறார்கள். வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கை  மிகக்  கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க […]

Categories
லைப் ஸ்டைல்

ரூ5 போதும்…. குளிர்சாதன பெட்டியே தேவையில்லை…. ஒரு வாரம் வரை கெடாது…!!

நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்தலாம். அது நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்திருக்கும். உதாரணமாக, முன்பெல்லாம் பாத்திரம் கழுவுவதற்கு எலுமிச்சை பழத்தின் தோல் அல்லது தேங்காய் நார் உள்ளிட்டவற்றை தான் நம் மூதாதையர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதுபோலவே, வீட்டில் இருக்கக் கூடிய ஒரு சில பொருட்களின் பயன்பாடு  குறித்து இனிக் காண்போம். புளித்த மோரில், வெள்ளிப் பாத்திரங்களையோ அல்லது வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறவைத்து பின் துலக்கினால் அவை புதியவை போல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெண்டைக்காய் சூப் : சுவையுடன் கூடிய மருத்துவ குணம்….. சளி தொல்லைக்கு நிரந்தர தீர்வு…..!!

சளி தொல்லையை  தீர்ப்பதற்கான மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சளி தொல்லை இருந்தால், நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் தற்போது பெருமளவில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தான். ஆனால், சாதாரண சளி என்றால், இவ்வளவு பயம் கொள்ள தேவை இல்லை. அதேசமயம், இந்த சாதாரண சளி பிரச்சனைக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை வீணாக்குவதற்கு பதிலாக, இயற்கை […]

Categories
லைப் ஸ்டைல்

நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலையா…? உடல் சோர்வா இருக்கா…?அப்ப இத கட்டாயம் செய்ங்க…..!!

உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கான சிறு பயிற்சிமுறை  குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை பார்ப்பதுடன், இரவு, பகல் என மாறி மாறி ஷிப்ட் முறைப்படி தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்தபடியே, வேலை பார்ப்பவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக நாள்தோறும், சோர்வுடனே பணிபுரிபவர்களாக இருப்பீர்கள். ஆனால், இந்த சோர்வு நிலை நீங்கி புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செய்ய மறந்த செயல்….. 1 நாளுக்கு 3 தடவை செய்தால் போதும்…. 40% நோயை கட்டுப்படுத்தும்…..!!

உப்பின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் வீட்டில் இருக்கக்கூடிய சமைப்பதற்கு பயன்படும் உணவுப் பொருட்கள் அனைத்திலும், ஒரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இது நம் தமிழ் பாரம்பரிய உணவின் சிறப்பு. மஞ்சளுக்கு மருத்துவ குணம்  இருப்பதை போலவே, நாள்தோறும் உணவில் சேர்த்து வர கூடிய உப்பிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 3 தடவை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலைவலி….. இருமல்….. மூச்சு திணறல்….. 3 பிரச்சனைக்கும் ஒரே தீர்வு….!!

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  அடிக்கடி தலை வலிக்கிறதா? கவலை வேண்டாம் இரண்டு வெற்றிலைகளை கசக்கி சாறாக  எடுத்து அதில், கற்பூரத்தைச் சேர்த்துக் குழைத்து வலி இருக்கும் இடத்தில் தடவுங்கள் தலைவலி முற்றிலுமாக காணாமல் போய்விடும். முற்றிய வெற்றிலை சாற்றில் இரண்டு மிளகு, சிறிதளவு சுக்கு சேர்த்து தேனோடு கலந்து சாப்பிட்டு வர, மூச்சு திணறல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.  அதேபோல், வெற்றிலையில் இரண்டு மிளகுகளை வைத்து மட்டும் சாப்பிட்டு வந்தால், தீராத […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பருவம் எய்தியும் பூப்படைவில் தடையா? வலி என்ன? தீர்வு இங்கே!!

இந்த காலகட்டத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், காரணம் உணவு முறைகளின் மற்றம் மட்டுமே . ஆனாலும் மீதியுள்ள 20 சதவீதம் பெண்கள் பருவம் எய்தியும் பூப்படையாமல் இருக்கிறார்கள். அதற்கு வலி என்னவென்பதை இதில் பாப்போம்.  சரியான பருவம் வந்த பின்னும் பூப்படையாத பெண்களுக்கு சிறிதளவு எள்ளுப்பூவை எடுத்து பனங்குருத்து சாறு விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உருட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.அவ்வாறு செய்தால் அவர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எல்லா மனுஷனுக்கும் ரொம்ப அவசியம்…. பரம ஏழை என்றாலும்…… இது மட்டும் கண்டிப்பா வேணும்….!!

நிம்மதியான தூக்கத்தின் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான, நிம்மதியான தூக்கம் மட்டுமே மனிதனின் உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும்.  நல்ல  தூக்கம் மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும்.  உடலில் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது நோயெதிர்ப்பு ஆற்றல் தான். நல்ல தூக்கத்தின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒல்லியா இருக்கோம்னு வருத்தமா….? இதை சாப்பிட்டால் போதும்….. சரியான அளவில் உடல் பருமன் அதிகரிக்கும்…!!

பட்டாணியின்  மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  ஒல்லியாக தேகம் கொண்டிருப்பவர்கள் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் எடை கூடுவார்கள்.  பச்சை பட்டாணி நுரையீரலுக்கும், இதயத்திற்கும் பலத்தை தரும்.  தினமும் ஒரு கைப்பிடி அளவு காய்கறிகளுடன், பட்டாணியை சேர்த்து சாப்பிட்டு வர, நுரையீரல் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். பட்டாணியில் பீட்டா சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உடலில் கொலஸ்ட்ராலை  வெகுவாக தடுக்கிறது.  பட்டாணி உட்கொள்வதன் மூலம், அதிக எடை உள்ளவர்களுக்கு  மேற்கொண்டு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே….. குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு…. இதை சாப்பிடுங்க…!!

மக்காச்சோளத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். கருவுற்ற பெண்கள், மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி, சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், வயிற்றில் வளரும், குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.  சோளத்தில், உள்ள இரும்புச்சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை குறைபாட்டை நீக்குகிறது. 

Categories
லைப் ஸ்டைல்

மனநிலை மாற்றம் : இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது….? கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் .தெரிஞ்சிக்கோங்க….!!

பெண்கள் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒரு சில பாதுகாப்பான விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கர்ப்ப காலம் பெண்களுக்கு மிகவும் சவாலான ஒரு காலம். தங்களது குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும், வளமான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்கள் கர்ப்பத்தில் எம்மாதிரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்கிறார்கள், எம்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களின் மனநிலை அடிக்கடி மாறும். அப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று மனம்விட்டு நண்பர்கள் அல்லது கணவரிடம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி பயம் வேண்டாம்….. இதை குடிங்க….. இருமலை மறங்க….!!

இருமலை குணமாக்குவதற்கான சிறு மருத்துவ  குறிப்பு ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போதைய சூழ்நிலைக்கு இருமல் வந்தாலே அருகில் உள்ளவர்கள் நம்மிடமிருந்து நாலடி விலகி நிற்கிறார்கள். நாமும் நம் அருகில் இருப்பவர் இரும்பினால் சற்று பயத்தோடு விலகி நிற்போம். அப்படியான கால கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி இருக்க, நாமும் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகமிக நல்லது. இருமலுக்கு சிறந்த தீர்வு சுக்கு பால் செய்து கொடுப்பதே. நன்றாக காய்ச்சிய […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே….. உணவு முறையில் கவனம் தேவை….. இல்லைனா குழந்தைக்கு இந்த பிரச்சனை வரும்….!!

நாம் அன்றாடம் உணவுகளை எடுத்துக் கொள்ளும் முறையில் இருக்கும் சில சிக்கல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  பூசனம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஜைகளில் உயிர் பறிக்கும் வகையும் உண்டு. எனவே முடிந்த அளவு பூசணம் பூத்த ரொட்டிகள் மட்டுமல்லாமல், கெட்டுப்போன உணவுகளையும்  அறிந்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.  தூங்கி எழுந்தவுடன் காபி, டீ உள்ளிட்டவற்றை பருகினால் அது நாளடைவில் அல்சர் உள்ளிட்ட குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்திவிடும். தூங்கி எழுந்தவுடன் குடல் மென்மையாக இருக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கட்டிப்பிடி வைத்தியம்” தப்பா நினைக்காதீங்க…… எத்தனை பயன்கள் உள்ளது தெரியுமா…?

கட்டிப்பிடி வைத்தியத்தின் மருத்துவ குணங்கள் குறித்து  இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயர் நாம் முதன் முதலாக அறிந்தது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் வாயிலாக தான். அதில் நடிகர் கமல் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் நபர்களையும், நோயில் சிக்கி தவிக்கும் நோயாளிகளையும் அன்போடு அரவணைத்து மேற்கொள்ளும் வைத்தியமே கட்டிப்பிடி வைத்தியம்.இந்த  வைத்தியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வித ஆறுதலையும், தைரியத்தையும் அளித்து அவர்களை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் என்பதே அதனுடைய கருத்து. அதன்படி, […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆஹா டேஸ்ட் மட்டும்னு நினைச்சோம்…… இவ்ளோ பயன்கள் இருக்குதே…. இறாலின் மருத்துவ குணங்கள்….!!

இறால் உணவின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை விரும்பி உண்ணலாம். மேலும் இறால் சாப்பிடுவதால் தோல் நோய்கள் வராது.  வயதான தோற்றம் மாறும், கண்பார்வை, கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகும். இதய குழாயில் ஏற்படும் நோய்கள், எலும்பு, மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். புற்றுநோய், தைராய்டு, மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகள் வராமல் காக்கவும் இறால் உணவு உதவும். இந்த இறால் உணவு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொய்யா பழத்தில்….. இதுதான் முக்கியம்….. அந்த சத்தை நீக்கிடாதீங்க….!!

கொய்யா பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொய்யா இலையை காய்ச்சி வாயை கொப்பளித்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும். கஷாயம் செய்து குடித்தால் தொண்டை, வயிறு மற்றும் இதய நோய்களை குணமாக்கும்.  குழந்தைகள் உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யா பழத்தின் தோலில் அதிகம் சத்து உள்ளதால், தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது.  இதில் விட்டமின் சி சத்து இருப்பதால் கொய்யாப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

புற்றுநோயை தடுக்கும் “விதை”…. இத்தனை நாள் இதோட அருமை தெரியாம போச்சே….!!

திராட்சை விதையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய தலைமுறையினர் நொறுக்குத் தீனிகளையும், துரித உணவுகளையும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக பல நோய்களையும் தங்களுக்கு வரவழைத்துக்கொண்டு துன்பப்படுகிறார்கள். ஆனால், இயற்கையாகவே நம் முன்னோர்கள் சாப்பிட அறிவுறுத்திய பழங்கள், அதில் உள்ள விதைகள் என அனைத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருந்தது. அந்த வகையில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்க திராட்சை […]

Categories
லைப் ஸ்டைல்

தூக்கமின்மை பிரச்சனையா….? இதை பாலோ பண்ணுங்க…. நிம்மதியா தூங்கலாம்…..!!

தூக்கமின்மை பிரச்சனையை போக்குவதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தூக்கமின்மை பிரச்சனை இன்று பலர் இடையே இருக்கக்கூடிய பொதுவான ஒன்று. தூக்கமின்மையால் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே நிம்மதியான தூக்கம் மட்டுமே மனிதனை வாழ்வில் சந்தோசமாக வைத்திருக்கும்.  இரவில் படுத்தவுடன் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களாக  நீங்கள் இருந்தால், கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுங்கள்,   முதலில் தூங்கச் செல்லும் முன் அறையை காற்றோட்டம் நிறைந்ததாக  வைத்துக்கொள்ளுங்கள். சிறிது வெப்ப  சலனம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதற்கு மாத்திரை, மருந்தா…? இதை செய்தால் போதும்….. நிமிஷத்தில் குணமாகும்….!!

காலை தலைவலியை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். காலையில் எழுந்தவுடன் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனையாக தலைவலி இருந்து வருகிறது. இந்த தலைவலியை எதிர்கொள்ள பலர் மாத்திரை, மருந்துகளை நாள்தோறும் எடுத்து வருகின்றனர். சிலருக்கு சாதாரண இஞ்சி  டீ உள்ளிட்டவற்றை குடித்தால் தலைவலி சரியாகும். மாத்திரை, மருந்துகளை காலையில் வரும் தலைவலிக்காக நாள்தோறும் எடுத்துக் கொண்டிருந்தால், அது எதிர்காலத்தில் உடலில் மேலும் சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்தவுடன் ஏற்படும் தலைவலியை […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சாப்பாட்டு பிரியர்களே..! இப்படி மட்டும் சாப்பிடாதீங்க….. பல பிரச்சனைகளை சந்தீப்பீங்க….!!

ஒருமுறை சமைத்த உணவை மறுமுறை சூடேற்றி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்குமே இருக்கக்கூடிய மிக மோசமான பழக்கம். ஒருமுறை சமைத்த உணவை நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடு ஏற்றி சாப்பிடுவது. இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். அதிலும், ஒரு சில உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதால், பக்க விளைவுகளையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி ஏராளமான மருத்துவ செலவுகளை நமக்கு இழுத்துவிடும். […]

Categories

Tech |