வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நீர்சத்து அதிகம் காணப்படும் பழங்களில் வெள்ளரிப்பழமும் ஒன்று. நீர்சத்து அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கோடை காலங்களில் இது அதிகமாக விற்பனையாகும். கோடை காலங்களில் இதனை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த வகையில், வெள்ளரி பழத்தை அரைத்து பால் சர்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். வெள்ளரிக்காய் விதைகளை […]
Tag: Lifestyle
மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இயற்கையாகவே பெண்களுக்கும், இந்தியாவில் விளையக்கூடிய மஞ்சளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், இப்போதெல்லாம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பெண்கள் கூட மஞ்சள் பூசுவதை நிறுத்திவிட்டனர். மஞ்சள் பூசிய பெண்களின் முகத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாகவே, தற்போது பல பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு, இளமையிலேயே வயதான தோற்றத்தை அடைகிறார்கள். பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும், முக அலர்ஜியிலிருந்தும் அவர்கள் எளிதில் […]
வெள்ளைப் பூசணியின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பு நமக்கு பல இன்னல்களை தந்தபோதிலும், நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயம். சமீபத்தில் துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட்புட் சாப்பாடு சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காமல், பழச்சாறுகளை அருந்தி ஆரோக்கியத்தை கடைபிடித்து வருகிறோம். அந்தவகையில், வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், […]
சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உடலின் உள் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் போது நன்றாக தண்ணீர் குடித்தால் கழிவு நீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் உடலில் உள் பகுதியில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும். அதேபோல்தான் வெளி பகுதிகளிலும் குறிப்பாக முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து நாம் கழுவி வர பல நன்மைகளை நமக்கு […]
மஞ்சளின் மகத்துவங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமாகும். மஞ்சளை அரைத்துச் சூடு ஏற்றி அடிபட்ட இடத்தில் தடவினால் வலியும், வீக்கமும் குறையும். மஞ்சள் பொடியை வெறும் தண்ணீரில் கலந்து மிதமான வெப்பத்தில் குடித்தால் வயிற்று வலி நீங்கும். அதேபோல் மஞ்சள் பொடியை பாலில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும், சளி கட்டுப்படும். தொண்டை புண் அலர்ஜி உள்ளிட்டவை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட […]
முட்டையில் இருக்கக்கூடிய சில சிறப்பான விஷயங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அதிக அளவிலான சத்துக்களை உடலுக்கு தரக்கூடிய அதே சமயம் விலையும் குறைவாக உள்ள உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. காலை வெறும் வயிற்றில் நாட்டு முட்டையை உடைத்து குடிப்பது உடலுக்கு வலுவூட்டும். முட்டையில் புரதம் உள்ளது. இதில், உள்ள வைட்டமின் டி சத்து எலும்புகளை உறுதியாக்கும் , ஆரோக்கியத்துக்கும் உதவும். முக்கிய சத்துக்கள் அனைத்தும் உள்ள […]
தினமும் 20 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வாழ்நாள் அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. நமது முந்தைய தலைமுறையினரின் ஆயுட்காலம் 100 வயதிற்கு மேல் இருந்தது. இந்த காலகட்டத்திலும் 100 வயதிற்கு மேல் வாழக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தற்போது இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ஆயுட்காலம் குறைவதற்கான காரணம், நமது சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டது தான். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, அதே சமயம் நல்ல உடலுழைப்பை போட்டு ஆரோக்கியமாக தங்களது […]
காலை வேளையில் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தாலே புகைப்பழக்கத்தில் இருந்து நாம் படிப்படியாக மீண்டு வரலாம். புகைப்பழக்கத்தை மறக்க நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை குறித்து காண்போம். புகைப்பிடிப்பதால் வரும் விளைவுகளை நன்றாக அறிந்திருந்தாலும் அதனை கைவிடமுடியாமல் பலர் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு காலையில் எழுந்ததும் புகை பிடிக்க அவர்களின் மனம் தாவும். அப்பொழுது தான் அவர்களுக்கு அன்றைய நாளை உற்சாகமாக தொடங்கமுடியும் என்ற மனநிலைக்கு மாறியிருப்பார்கள். இத்தைகைய புகைப்பழக்கத்தை மறப்பதற்கு செய்ய […]
சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுவாக நல்ல காரியங்கள் எதுவாயினும் உதாரணத்திற்கு பிறந்த நாளாக இருக்கட்டும், திருமண நாளாக இருக்கட்டும், அல்லது காதலர் தினமாக இருக்கட்டும் இப்படி எந்த ஒரு நல்ல நாளிலும் இனிப்பை சாப்பிட்டு தொடங்குவது உகந்ததாக இருக்கும். பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு சாக்கலைட்டை பரிசாக வழங்குவர் அல்லது பரிசை பெற்று அதற்கு பதிலாக சாக்கலைட்டை வழங்குவார்கள். அதற்கு காரணம் இனிப்பு உற்சாகத்தின் அடையாளம். சாக்லேட் என்ற […]
வாழ்க்கை அழகாக மாற செய்ய வேண்டிய நற்பண்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். நீண்ட நாள் கழித்து உங்களது நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்தால் அவர்களின் சம்பளம் வயது உள்ளிட்டவற்றை கேட்க கூடாது அவர்கள் சொன்னால் தவிர, இது அவர்களிடம் நாம் கேட்கும் போது ஒரு தப்பான அபிப்ராயத்தை அல்லது அவர்கள் மனதில் ஒருவிதமான கஷ்டத்தையும் ஏற்படுத்திவிடக் கூடும். தெருவில் யாராவது சந்திக்க நேர்ந்தால் ஸ்டைலுக்காக நீங்கள் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றி விட்டு பேசவும். ஏனெனில் […]
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கருஞ்சீரகம் இயற்கையாகவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. இந்த கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொண்டால் இயற்கையாகவே நாம் ஆரோக்கியமாக வாழலாம். உதாரணமாக கருஞ்சீரகத்தின் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து குடித்தால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். அதேபோல் கருஞ்சீரகத்தின் தைலம் தலைவலி, ஜலதோஷம், இடுப்பு வலி , நரம்பு பற்றிய வலி உள்ளிட்ட வலிகளுக்கு […]
இஞ்சி தேனூரல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இஞ்சி அரை கிலோ வாங்கி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதன் மேல் வாயை ஒரு துணியால் மூடி வைத்து, துணியின் மேல் இஞ்சித் துண்டுகளை போட்டு அடுப்பை ஏற்றி தண்ணீரை கொதிக்க விடவும். அப்போது நீரின் கொதிநிலை ஆவி இஞ்சி துண்டுகளில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை முற்றிலுமாக குறைந்து விடும். ஈரப்பதம் […]
மாலை மற்றும் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். நம்மில் பலருக்கு இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். ஆனால் அப்படி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெரும்பான்மையானோர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த செய்தி தொகுப்பின் மூலம் அவற்றை அறிந்து கொள்வோம். பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் காணப்படும். இந்த பொட்டாசியம் சத்துக்கள் நாள் முழுவதும் உழைப்பால் சோர்ந்து போன தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். […]
கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கட்டிப்பிடி வைத்தியம் இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப் படுத்தியதே நடிகர் கமலஹாசன் தான். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இவர் நோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் ஒரு மன மகிழ்வை அவர்கள் பெறுவார்கள். உண்மையாகவே உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பல்வேறு விதமான அருமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில், ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் போது அவர் […]
கேரட் எண்ணெயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் […]
பாதாமின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பாதாமின் தோலில் உள்ள பிளேவனாய்டு மற்றும் வைட்டமின் இதய நோய் வராமல் கட்டுப்படுத்தும். எனவே இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாள் பாதாம் சாப்பிட்டு வர மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதம் குறையும் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கண்ட கூற்றுப்படி, அடிக்கடி பாதாம் […]
இல்லத்தரசிகளுக்கான முத்தான வீட்டு தேவைக்கான குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 […]
குழந்தைகளுக்கு மிகவும் சுவையான, ஆரோகியமான ஸ்நாக்ஸ், மிகவும் எளிமையான முறையில் செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – அரை கப் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 4 கொத்தமல்லி இலை – சிறிதளவு மிளகாய்த்தூள் […]
மனைவியுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்க்கையை நடத்த உணர்வுகளை சந்தோஷப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவருமே தங்களது வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். சிலர் தங்களது குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் சமயத்திலும் ஒரு சிலர் தங்களது குடும்பத்தினருடன் சண்டை சச்சரவால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் கணவன்-மனைவி இடையே அதிக அளவில் சண்டைகள் […]
60 வயதை தாண்டிய போதிலும் துடிப்புடனும், இளமையுடனும் செயல்பட வைக்கக்கூடிய பானம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்த காலகட்டத்தில் வயது 40ஐ தாண்டும் பட்சத்திலேயே பலரால் வயதானவர்கள் போல அனைத்து வேலைகளையும் துடிப்புடன் செய்ய முடிவதில்லை. வயதான தோற்றம் முகத்தில் காட்டிக் கொடுத்து விடுகிறது. இந்த பிரச்சனை எல்லாம் நீங்க, ஒரு மூடி துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய 2 நெல்லிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். பின் முழு […]
மனநிலை குறித்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது மனநலம் குறித்த பிரச்சனை தான். வேலைகளில் இருக்கக்கூடிய சுமை, வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனை ஆகியவற்றை மனதில் வைத்து நினைத்துக் கொண்டே இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த மனநிலை என்பது நமது உணவுகளை பொருத்தும் அமைகிறது . அந்த வகையில் தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள […]
முந்தைய காலத்தில் பயன்படுத்திய வித்தியாசமான அழகு சாதன பொருட்கள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பு. இந்தியாவில் தமிழ் பெண்களின் அழகிற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது முன்னோர்கள் வழங்கிய அழகுக்குறிப்புகள் என்பதை மறக்க முடியாது. காலத்திற்கு ஏற்றார்போல் அழகு குறிப்புகள் மாற்றமடைந்து வருகிறது. சமையலறையில் பயன்படுத்தும் பல பொருட்கள் முந்தைய காலத்தில் அழகு சாதன பொருட்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று பசுவின் சாணம் மற்றும் சிறுநீரையும் அழகுக்கு பயன்படுத்தியுள்ளனர். கேட்க அருவருக்கத்தக்க தாக இருக்கும் பசுவின் சாணம் மற்றும் […]
வியர்வை நாற்றத்தை போக்குவதற்கான வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வெளியுலகை பொருத்தவரையில் ஒரு நபர் நம்மிடம் நெருங்கி பழக வேண்டும் என்றால், நம்முடைய புறத்தோற்றம், நாம் நடந்துகொள்ளும் விதம், உடல் தோற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே பலர் நம்மிடம் பழகுவர். அந்த வகையில், பெரும்பாலானோர் உடலின் வியர்வை நாற்றத்தைத் விரும்பமாட்டார்கள். உடலில் வியர்வை அதிகம் இருப்பவர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள். நெருங்கிப் பழகுபவர்களை கூட இந்த வியர்வை நாற்றம் முகம் சுளிக்க செய்துவிடும். […]
மணத்தக்காளியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மணத்தக்காளி மிகுந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை. இதன் இலையிலிருந்து சாரை பிழிந்து எடுத்து அதில் சிறிதளவு இந்துப்பு போட்டு வாரம் இருமுறை குடித்து வர கீழ் வாயு மற்றும் சிறுநீர் தடை நீங்கும். மேலும் இந்த இலையை நன்கு வெயிலில் காய வைத்து பின் வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல் மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும். […]
குழந்தைகளிடம் தோல்வி குறித்த மன பக்குவத்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது உள்ள குழந்தைகள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டாலும் அவர்களுக்கு தோல்வியை தாங்கக்கூடிய சக்தி என்பது பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம். எதை எடுத்தாலும் அதில் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்ற எண்ணங்கள் இன்றைய குழந்தைகளில் பலரிடம் காணமுடிகிறது. ஆகையால் இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வெற்றிக் கதைகளை மற்றும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காமல் தோல்வியிலிருந்து வெற்றி பெற்றவர்களின் […]
கருவேப்பிலையின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கருவேப்பிலை பெரும்பாலானோரும் உணவில் அதிகம் சேர்க்க கூடிய ஒன்றாகும். சமையலில் கறிவேப்பிலை இல்லாமல் இருக்கவே இருக்காது. ஆனால் கருவேப்பிலையை சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கசப்பு பொருளாக பார்த்து ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் கருவேப்பிலை இரத்த சோகையை குணப் படுத்துகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் சிகிச்சைக்கு உகந்த சீரான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்லீரலை பாதுகாப்பது கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ஆகவே […]
மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மணதக்காளி ஓர் அற்புத மருத்துவம் கொண்ட கீரை .100 கிராம் கீரையில் 82 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் மணத்தக்காளிக் கீரையை தினமும் எடுத்துக் கொள்ளுவதால் உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த கீரை புற்றுநோயை வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதை தினசரி பயன்படுத்த மணத்தக்காளி கீரை கூட்டு, சூப் தயாரித்து உண்ணலாம். குறிப்பாக சூப்பை மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டைக்கு […]
கால்பந்து விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடுவதே பல உடல் பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாக்கும். அந்த வகையில், கால்பந்தாட்டம் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடையே இதய ரத்த நாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நல பாதிப்புகளை தடுப்பதாக டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் உடல் தசைகள் வலுவடைந்து நோய் தடுப்பு மண்டலமும் வலுப்படுவதாக ஆய்வு கூறுகிறது.
கோடை வெயில் காலம் தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில் வீட்டை எப்படி குளுமையாக வைப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். வெயில் காலம் தொடங்கிவிட்டது. பெரும்பான்மையான வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து வெயிலானது நேரடியாக வீட்டிற்குள் இறங்கும். ஏசி இருப்போர் வீட்டில் பிரச்சனை இல்லை. ஆனால் ஏசி இல்லாத வீட்டில் காற்றில் உள்ள வெப்பம் எரிச்சலடையச் செய்யும். வீடு முழுவதும் குளிர்ச்சியாக வைக்க செடிகள் வளர்ப்பது மாடித்தோட்டம் அமைப்பது மிக முக்கியமானது மாடியில் செடி […]
முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். வேப்பிலை, வெள்ளரி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பாக முகத்தில் அப்ளை செய்து சில மணிநேரங்களில் மசாஜ் செய்யுங்கள். இதனால் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி பொலிவு அடைந்து நல்ல […]
முக சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பது குறித்து இந்த சிறிய தொகுப்பு காண்போம். கோடை காலம் தொடங்கிய உடன் வெயிலின் தாக்கத்திலிருந்து நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும் என்றே தான் பல மக்கள் விரும்புவர். தற்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் உடலுழைப்பும் செலுத்துவதில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம் இதனால் உடல் சூடு அதிகரிக்கும். சருமம் வறண்டு காணப்படும். ஆகவே சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க அரை கப் தர்பூசணியுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக […]
பெண்கள் தங்களது மன உளைச்சலை குறைத்து ரிலாக்ஸ் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு ஆனது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வருகின்றனர். கணவன்மார்களும் வீட்டிலேயே இருப்பதால் பெண்களுக்கு இந்த சமயத்தில் வேலைப்பாடு என்பது அதிகரித்துவிட்டது. இந்த நாட்களில் பெரும்பான்மையான நேரம் பெண்கள் சமையலறையிலையே செலவிடுவது போல் ஆகி விடுவதால், […]
துளசியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுவாக எந்த ஒரு நோயாக இருந்தாலும் சரி அதை எதிர்த்துப் போராடுவதற்காக இயற்கையாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. அவற்றை துரிதமாக செயல்பட வைக்க, துளசி பயன்படுகிறது. துளசியில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஐந்து துளசி இலைகளுடன் மூன்றிலிருந்து நான்கு மிளகு சேர்த்து ஒரு […]
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பூண்டு, இஞ்சிக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பதால், தினமும் இவற்றை உணவில் சேர்க்கலாம். பூண்டில் தேன் கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம். இஞ்சியை டீ யில் போட்டு குடிக்கலாம். இஞ்சியில் ஆன்டிவைரஸ் தன்மை அதிகம் இருப்பதன் காரணமாக, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி நோய் வராமல் பாதுகாக்கிறது.
நம் உடலுக்கு வைட்டமின் C அளிக்க கூடிய, இதயத்திற்கு பலம் அளிக்கக்கூடிய இயற்கையின் இராணி கொய்யாவின் நன்மைகள் பற்றி அறிவோம்..! வெள்ளை, சிவப்பு மற்றும் சற்று நீண்ட வகை கொய்யா பழங்கள் உள்ளன. அனைத்து வகைகளிலும் ஒரே வகையான சத்துக்களே அடங்கியுள்ளன. இது காய் பருவத்தில் பச்சை நிறத்திலும் நன்கு பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இப்பழத்தில் பல வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நெல்லிக்கனிக்கு அடுத்து அதிக வைட்டமின் சி இப்பழத்தில் உள்ளது இதனால் […]
நொச்சி இலையின் மருத்துவ குணம் குறித்து இந்து செய்தி தொகுப்பில் காண்போம். நொச்சி இலை என்ற நிலையை நாம் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். கிராமப்புறத்தில் இருப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த இலை குறித்த மருத்துவ குணத்தை அறிந்திருப்பர். மூட்டுவலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து இந்த நொச்சி இலை. இந்த இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் மூட்டுவலி குணமடையும். சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க […]
டிராகன் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த ஓட்டுயிர் கொடி போன்ற உயரமான டிராகன் பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதனுடைய மருத்துவ குணங்களை பின்வருமாறு காணலாம். டிராகன் பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோய் வருவதையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாக செயல்பட வைக்கிறது. இந்த பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. […]
ஆரோக்கியமான திணை வகைகளை கொண்டு கருப்பட்டி கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நமது முன்னோர்கள் உடல் சக்திக்கு எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் தினை வகைகள் முக்கியமானது. அதிலும் கம்பு, கேழ்வரகு, திணை இவை மூன்றும் அதிகச் சத்துக்கள் கொண்டவை. இவை மூன்றையும் வைத்து ஒரு ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு நாம் எளிமையாக தயார் செய்யலாம். அது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். திணை, கம்பு, […]
சளி உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் சளி இருமல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் சாதாரண சளித் தொல்லைக்கு அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல இயலாது. மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நமது முன்னோர்களின் நாட்டு மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்கலாம். அந்த வகையில் தூதுவளை மிக மிக நல்லது. தூதுவளை கசாயம் சளியை குணப்படுத்துவதில் […]
கருப்பு உளுந்தில் உள்ள மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது உளுந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது வெள்ளை உளுந்து தான். கருப்புஉளுந்து நமது சிறு வயதிலோ அல்லது நமது தாய் தந்தையரின் இளம் வயது காலகட்டத்தில் தான் அதிகம் பயன்படுத்தியிருப்பர். கருப்பு உளுந்தை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை. ஆனால் வெள்ளை உளுந்தை விட கருப்புஉளுந்துக்கு தான் அதிக சத்து என்பது இருக்கிறது. கருப்பு உளுந்து இட்லி, தோசை மாவு அரைக்க […]
இஞ்சியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இஞ்சி பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. அந்த வகையில், இஞ்சிச்சாறு உடலை வலுப்படுத்தும் என நமது சித்தர்கள் மருத்துவ குறிப்பு எழுதி வைத்துள்ளனர். இஞ்சி சாறை எடுத்தவுடன் 10 நிமிடம் வைத்திருந்தால் அடியில் வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வண்டல் படியும். அதை விட்டுவிட்டு மேலே உள்ள தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். […]
கானா வாழையின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கானாவாழை இதனை பெரும்பாலும் கிராமபுறத்தில் வாழும் மக்கள் அறிந்திருப்பர். ஆனால் நகர்ப்புறங்களில் வாழ்வோருக்கு இது பற்றி தெரியாது. கானா வாழை பொதுவாக ஈரமான பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது. சிறப்பான தாம்பத்தியத்துக்கு பெரிதும் உதவக்கூடியது கானா வாழை. கானா வாழையுடன் முருங்கைப் பூ, துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து கூட்டு வைத்து கொள்ளுங்கள். பின் நெய் கலந்த சாதத்தோடு கூட்டு சேர்த்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் […]
ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கீரை வகைகளில் நாம் அரிதாக கேட்கும் பெயர் பசலைக் கீரை. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பும் அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பீட்ரூட் இரத்த சோகையை நீக்கும் தன்மை கொண்டது. வல்லாரைக்கீரை ஞாபக சக்தியை கொடுக்க கூடியது. மேலும் உடலுக்கு பல்வேறு சக்திகளை வழங்குகிறது. மாம்பழம் உண்டால் இருதயம் வலிமை […]
வீட்டிலேயே ஒரு சில எளிய மருத்துவங்களை இயற்கையாக மேற் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சுத்தமான பசும்பாலில் வெண்தாமரை மலர்களைப் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் வரும் ஆவியை கண்ணில் விட்டால் கண் தொடர்பான நோய்கள் அதிக அளவில் குணமாக வாய்ப்புண்டு. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடனடியாக வயிறு சுத்தமாகும். பெரும்பாலானோர் தற்போது அவதிப்படும் ஒரு பிரச்சனை உடல் சூடு. வெயில் […]
வல்லாரை பக்கோடா செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையான பொருள்கள்: ஒரு கப் கடலை மாவு அல்லது பச்சை மாவு,அரை கப் நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை நன்கு கழுவி பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் ஒரு கப் கடலை மாவுடன் நறுக்கிய வெங்காயம் அரை கப் நறுக்கிய வெங்காயம். தேவையான அளவு இஞ்சி, பூண்டு, சீரகம் […]
வல்லாரை கீரையின் மருத்துவக் குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வல்லாரைக்கீரை உடல் வலிமையை அதிகரித்து மன அமைதியை கொடுக்கக்கூடியது. இதில் ரத்தம் உறையாமல் இருக்க உதவும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எலும்புகளை வலுப்படுத்தி சிவப்பணுக்களை அதிகப்படுத்துகிறது. உணவையே மருந்தாக எடுக்க நினைப்பவர்களுக்கு வல்லாரை சிறந்த ஒன்று. வல்லாரை கீரையின் விலையும் குறைவுதான் அதேபோல் அதை சமைத்து சாப்பிடுவதும் எளிது. வல்லாரையை மெயின் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை லேசாக எண்ணெயில் பொரித்து […]
உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலானோர் தங்களது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எம்மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். முட்டையை காலை உணவாக […]
சளி இருமல் காய்ச்சல் மூன்றையும் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நம்முடைய உறவினர்களை நம் வீட்டிற்கு அழைக்க மறுக்கிறோம். அவர்களும் வர மறுக்கிறார்கள். காரணம் நோய் தொற்று எளிதாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனிடம் பரவுகிறது என்பதற்காகத்தான். சொந்த வீட்டுக்குள்ளேயே சாதாரணமாக இருமினாலோ, தும்மினாலோ ஒருவித அச்சத்துடன் பார்க்கிறார்கள். இந்த சளி […]
பழைய சோற்றின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கிடைக்கின்ற காய்கறிகளை வாங்கி அதற்கேற்றவாறு சமைத்து உணவு சாப்பிட்டு வருகின்றனர் மக்கள். இந்த சூழ்நிலையில் நாம் நமது பழைய பாரம்பரிய உணவுகளை சற்று திரும்பி பார்க்கலாம். பழைய சோறு வயிறு தொடர்பான நோய்களை நீக்கும். உடல் […]
நமது கால்களை எப்படி பளபளப்பாக வைத்திருப்பது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாம் சுத்தபத்தமாக இருக்கிறோமா என்பதை முடிவு செய்வது நம்முடைய தோற்றம் தான். அதிலும் அனைத்து இடங்களையும் நாம் பளபளப்பாக வைத்திருந்தால் மற்றவர்கள் பார்வைக்கு நாம் சிறப்பாக தெரிவோம். உதாரணமாக தலை முதல் கால் வரை அத்தனையையும் பளபளப்பாக வைத்திருப்பது நம்முடைய கடமை. உதாரணமாக எங்கேயாவது உறவினர்கள் வீட்டிற்கு செல்கிறோம் என்றால் நமது செருப்பை கழட்டி விட்டு தான் உள்ளே செல்வோம். அப்போது […]