குஜிலியம்பாறையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், சிவகங்கை மாவட்டம் அல்லூரில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்ற தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து சேகர் என்பவர் போட்டியிட்டார். ஒன்பதாவது சுற்று முடிவில் 300 ஓட்டுகள் […]
Tag: Local election
வாக்குசீட்டில் ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு பதில் மாற்று சின்னம் ஒதுக்கப்பட்டதால் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டில் வேறு சின்னம் மாறியிருந்ததையடுத்து, அங்குள்ள வாக்குச்சாவடி எண்.185, 186, 187, 188, 189, 190, 192, 194, 195-ல் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தலை மட்டும் ரத்து செய்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான மறு தேர்தல் […]
அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பு இயக்கம், மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க இருக்கிறது. இந்த விழிப்புணர்வு […]
நடிகர் கமல்ஹாசன் உலகநாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, உலக அறிவும் வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாஜக ஆட்சியில் தான் இலங்கை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை அகதிகளுக்கு […]
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி… ஒலிபெருக்கிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடித்து பயன்படுத்த வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே […]
திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் வாக்குச்சாவடியை மறு சீரமைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காயாமொழியில் ஏழாவது வார்டு வாக்குச்சாவடி ஐந்தாவது வார்டிற்கும் ஐந்தாவது வார்டு வாக்குச்சாவடி ஏழாவது வார்டிற்கும் மற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் கூறியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசித்தாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது என்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க கூடியது எனவும்,தலைவர் […]
தமிழகத்தில் 27மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது .இதற்கான வேட்புமனுதாக்கல்நாளை நடை பெறுகிறது . சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் .அதன்படி 9மாவட்டங்கள் தவிர 27மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்களுக்கே தேர்தல் நடைபெற உள்ளது .இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை நடைபெறுகிறது .கிராம ஊராட்சி […]
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடபெற சூழல் உருவாகி உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 3 மேயர் இடங்களை கேட்டுள்ளதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் ஜு ரம் தமிழ்நாட்டை தொற்றிக் கொண்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த 90 சதவீதம் தயாராகி விட்டது. அதேபோல அரசியல் கட்சிகளும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கி விட்டன. இருபெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்தே […]
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நவம்பர் மாதம் இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், கோரிக்கைகளை தெரிவிக்கவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், சிறப்பு அலுவலர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. […]
சதுரங்க வேட்டை படத்தைப் போன்று மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் திமுகவினர் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்றது. இதன் 9ஆம் திருவிழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு விடுமுறை நாள்களில் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி ஏற்கனவே நடைமுறையில் […]
விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படத்திற்கு முதலமைச்சரின் ஆலோசனையின்பேரில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்புக் காட்சி என்ற பெயரில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் […]
உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நவம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கக் கூடிய நிலையில் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடத்தபடும்.அதேபோல் கிராம ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் மாநகராட்சி , பேரூராட்சி , நகராட்சி பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் […]