ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நானி, அடுத்த மாதம் (மார்ச்) 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில திருத்தங்களை […]
Tag: #Localelection
கடலூரில் தேர்தல் பகை காரணமாக பிரச்சாரம் செய்த நபரின் குடிசையை கொளுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த பாப்பன் கொல்லை மேற்கு நகரில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் அதே பகுதியில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான ஹலோ பிளாக் என்னும் பொருளை கடை அமர்த்தி விற்பனை செய்து வருகிறார். கடைக்கு அருகாமையிலேயே தங்க வேண்டும் என்பதற்காக ஓரிரு மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஓய்வெடுத்து வந்துள்ளார். […]
மேல குமாரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 […]
சின்னங்கள் குளறுபடியால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]
நாகப்பட்டினம் சீர்காழியில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கல் வீச்சு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் கட்டமாக நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் முடிந்தது. சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் சீர்காழி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்தும் மொத்தம் சுமார் 192 வாக்குச்சாவடிகளாகும். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் உரிய […]
உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் 10.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 10.41 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் 4,924 ஊராட்சிமன்றத் தலைவர், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை […]
சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், ஒரே முகவரியில் 46 வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், கோவை மாவட்டத்தில் சூலூர் உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சூலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சூலூரை அடுத்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் வீட்டு முகவரியில் 46 போலி வாக்காளர்கள் இடம் […]
பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]
புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]
புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]
அடையாள மை இல்லாத காரணத்தால் கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில் ஒரு 1 நேரம் கால தாமதமாகி வாக்கு பதிவு தொடங்க பட்டது . நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சியில் உள்ள எடமணல், நல்லூர், ஆணைக்காரசத்திரம் , அரசூர், புதுப்பட்டினம், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம், உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை வாக்களிப்பதாற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.சுமார் 7 மணிக்கு […]
தமிழகத்தில் முதல் கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று (27) மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. வாக்குப்பதிவுக்காக 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற […]
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் […]
தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை (27) மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். முதல் கட்டமான நாளை […]
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் 60 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் நேரத்தில் எந்த வித […]
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் விஜய் கணேஷ், சித்திரகுப்தன், கிளிமூக்கு ராஜேந்திரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காமெடி நடிகர் கிளிமூக்கு ராஜேந்திரன், ‘நாங்கள் எல்லாம் தற்போது உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்துள்ளோம். நீங்கள் தவறான ஆட்களுக்கு ஓட்டுப் போட்டால் […]
உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]
ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் தொடர்பான பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்புகள் மொத்தம் மூன்று […]
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நாமம் போடுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் உள்ளாட்சித் தேர்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் செயல்படுத்த முடியும். இதனைக் கருத்தில் கொண்டே 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக தான். உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டபோதும், அவர்கள் எந்த […]
உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு […]
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி – கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் […]
தேர்தல் நடத்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அனைத்து கட்சியினருடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக, […]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்ததால் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. அதன் பிறகு சில காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகின்றது. இதனால் எப்போது […]
சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற, இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின் ஒற்றை தலைமை மற்றும் பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒன்றரை மணி […]