பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நடத்தப்பட்டு நேற்று முன்தினம் வாக்கு எண்ணப்பட்டது . இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதில் திமுக போட்டியிட்ட 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்.பிக்களான கனிமொழி, […]
Tag: #LokSabhaElections2019
பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமாக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மட்டும் 23 இடங்களில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. […]
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று வாக்கு எண்ணப்பட்டது. இதில் பாஜக ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 தொகுதிகளை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]
மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனட பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் […]
சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 14 மற்றும் அதிமுக 08 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதோடு சேர்த்து 22 சட்ட பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 18 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக […]
சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 மற்றும் அதிமுக 11 தொகுதிகளிலும் சம நிலையில் முன்னிலை வகிக்கிறது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதோடு சேர்த்து கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது […]
மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவை தொகுதியில் திமுக தமிழகம் […]
வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு பதிவு எண்ணிக்கை நாளை (மே 23-ம் தேதி) நடைபெறுகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு […]
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் நாளை மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.இதனால் அனைவரது மத்தியிலும் மிகுந்த […]
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பான்மையாக பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சியமைப்பார் என்று அறிவிப்பு வெளியானது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை காட்டிலும் அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன. இதனால் […]
மேற்குவங்கத்தில் ஒரு வாக்குசாவடியில் மே 23_ஆம் மறு வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 11 முதல் தொடங்கி மே 19 வரை என பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23_ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் மேற்கு வங்காள மாநிலத்தின் உத்தர் தொகுதியில் உள்ள 200-ஆவது எண் வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது […]
கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வதற்கு சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி […]
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அக்கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நாளை விருந்து அளிக்கிறார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவு மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது. இத்தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி, மே 19 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்றே முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக 300 இடங்களுக்கு […]
மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு 1,421.90 புள்ளிகள் மற்றும் நிஃப்டி குறியீடு 421.10 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்ககளாக அறிவிக்கப்பட்டு நேற்று கடைசியாக 7வது கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கின. தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், 2014 ஆம் ஆண்டைப் போலவே பா.ஜ.க அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று […]
பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், இன்று இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்ககளாக அறிவிக்கப்பட்டு நேற்று கடைசியாக 7வது கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கின. தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், 2014 ஆம் ஆண்டைப் போலவே பா.ஜ.க அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று […]
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மாட்டார் என எஸ்.சி மிஸ்ரா கூறியுள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. வாக்கு பதிவு வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.கவுக்கு அதிக இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் […]
நாடு முழுவதும் 7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்து 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்திய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் நடந்தது. பீகார் (8), ஜார்கண்ட் (3), சண்டிகார் (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), […]
7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில், 1 மணி வரை 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் .7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார் (8), ஜார்கண்டில் (3), சண்டிகார் (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப்பில் மொத்தமுள்ள (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்டதேர்தல் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் உட்பட 8 மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்தலி […]
பிரதமர் மோடி கேதார்நாத் புனித குகையில் நீண்ட நேர தியானம் முடித்த பின் எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நேற்று பாரம்பரிய உடையில் நடந்து சென்று வழிபாடு செய்தார். […]
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கினை பதிவு செய்தார். ஹர்பஜன் சிங்கின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். இவர் தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தலின் இறுதி கட்ட தேர்தலில் 8 மாநிலங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று […]
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க இல்லாத அரசை அமைப்பதற்காக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது . ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளை ஓன்று சேர்க்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பிராந்திய […]
பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதார்நாத் குகையில் தியானம் செய்து வருகின்றார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருக்கின்றது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் நாத் கோவிலுக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி பாரம்பரிய உடையில் […]
மத்திய பிரதேசத்தில் நடந்த கடைசி பேரணியில், நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6-கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]
வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிப்பதற்கு போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, கொல்கத்தாவில் நடந்த வன்முறைக்கு காரணம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். கலவரத்தின் போது அவர்கள் தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களை பாதுகாப்பதற்காக, சிலை உடைந்துள்ள பகுதியில் தடயங்களை அழிக்க முயற்சி செய்கின்றார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், […]
ரவீந்திரநாத் பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்ட கல்வெட்டை அகற்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அ.தி.முக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அ.ம.முக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார். நாளை மறுநாள் 19-ம் தேதி மீதமுள்ள திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி, […]
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் […]
பா.ஜ.க இல்லாத ஆட்சியை கொண்டு வருவோமென ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இதற்கிடையே நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க.வும், காங்கிரசும் […]
திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையில் ஈடுபட்டதற்கு சரியான ஆதாரங்களை காட்டுங்கள் மோடி ஜி இல்லையெனில் சிறையில் அடைப்பேன் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. […]
வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் […]
பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து பிரசாரப்பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போது ராகுல் காந்தி பீரங்கி, நான் AK 47 என பேசினார். மக்களவை தேர்தலில் 6 கட்ட தேர்தல் நிறைவடைந்து விட்டது. இமாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற 19-ம் தேதி மக்களவை தேர்தல் 7வது கட்ட தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பா.ஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில மந்திரியும், […]
கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார். சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா நகரில் […]
மேற்கு வங்காளத்தில் என்னை ‘வெளிநபர்’ என்று கூறும் போது மம்தா டெல்லிக்கு வரும்போது அவரை வெளிநபர் என்று சொல்லலாமா? என்று அமித் ஷா கேட்டுள்ளார். பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும், மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையில் அடிக்கடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது. வெளிநபரான அமித் ஷா மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்து மக்களிடையே பிளவை உண்டாக்க முயற்சிக்கிறார்” என்று மம்தா அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா நகரில் சிந்தனையாளர்கள் கூட்டம் ஒன்றில் அமித் ஷா […]
பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றியுள்ளனர். கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா, கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே திரிணாமுல் […]
கொல்கத்தா நகரில் நடந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றசாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இந்த வன்முறை குறித்து […]
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவ அமைப்பினர் கருப்பு கொடி காட்டி அமித்ஷா திரும்பி போ என்று கோஷமிட்டனர். பல்கலை கழக மாணவர்கள் விடுதி அருகே திரிணாமுல் காங்கிரஸ் மாணவர்கள் அமித்ஷா இருந்த பிரசார வாகனத்தின் மீது […]
கொல்கத்தா நகரில் பேரணியின் போது அமித்ஷா வந்த பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் […]
முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்த காலத்தின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகள் 70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே […]
நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தாவுக்கு அமித் ஷா சவால் விட்டார். இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், […]
பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் […]
பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அளிக்கப்பட நான்காவது புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தின் நந்தேட் பகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி பிரதமர் மோடிதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசும் வகையில் ”நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும்” தொகுதி என வயநாடு தொகுதியை குறிப்பிட்டு பேசினார். பிரதமர் மோடி இப்படி பேசியது தேர்தல் விதி மீறல் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த […]
பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 4 கட்ட நிறைவடைந்த நிலையில் மீதம் இருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் […]
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் 2_ ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18 _ ஆம் தேதி நாடடைபெற்று முடிந்த நிலையில் அறிவிக்கப்படாத 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]
பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகின்றது. இதற்கான அரசியல் மத்திய , மாநில அளவிலான பிரசாரம் , தேர்தல் வாக்குறுதிகள் என மக்களை கவர்ந்து வருகின்றனர். மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடங்கும் முன்பு காங்கிரஸ் […]
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை பிரதமர் மோடி நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக […]
டெல்லியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 6 மக்களவை தொகுதி வேட்பாளர்களை அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சாந்தினி சவுக் பாராளுமன்றத் தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடகிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் ஷீலா தீட்சித், கிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லி, புதுடெல்லி […]
வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை […]
கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நேரமாக நேரமாக பெரியதாகி இறுதியாக மோதலில் முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் சித்திரை திருவிழா […]