ராணுவ வீரர் ஒருவர் பீரங்கிகளை இதய வடிவில் நிறுத்தி, தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘காதல்’ என்பது வெறும் வார்த்தை அல்ல அது மனிதர்களின் மனதில் இருக்கும் ஒரு இணை பிரியா அங்கம். இளமைப் பருவத்தில் தொடங்கும் காதலானது முதுமை வரை நம்மை பின் தொடர்ந்துவருகிறது. இவ்வாறான காதலை வெளிப்படுத்த தயங்கும் மனிதர்களின் மத்தியில், ஒரு சிலர் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி அசத்துவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது காதலியிடம் […]
Tag: #loversday
காதலர் தினத்தின்று இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பதிவிற்கு, இர்பான் பதான் கிண்டலாக பதிலளித்துள்ளார். காதலர்தினம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தினர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தனது மனைவிதான் என்றும் தனது காதலி என […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 12 வயது சிறுமி ஒருவர் மாநில கூடுதல் போலீஸ் இயக்குநரிடம் புகாரளித்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லுரியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திருமணம் செய்ய மாட்டோம் என அங்கு பயிலும் மாணவிகளை வற்புறுத்தி கட்டாயமாக உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக, ஜென் சதவர்தே (Zen Sadavarte) என்ற 12 வயது சிறுமி கூடுதல் போலீஸ் இயக்குனரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், […]
நேற்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் காதலர் தினம் கொண்டாடிய நபர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது கணவரை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்த மனைவி அவர்களை மடக்கி பிடித்து நடுரோட்டில் கணவர் திட்டி சண்டை போட்டுள்ளார். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர் இதில் அவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். […]
ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை சொல்வதாக அறிவித்திருந்த ரைசா, தனது காதலன், காதலின் ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். அண்மையில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி காதலர் தினத்தில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகையும், மாடலுமான ரைசா. உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், வீடியோ ஒன்றின் மூலம் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அறிவித்துள்ளார் ரைசா. அதில், பச்சை பசேல் என மரங்கள் சூழ்ந்திருக்கு ரம்மியமான சூழல் பின்னணியில் டேபிளில் தனியாக அமர்ந்திருக்கும் ரைசா, ‘நான் ஏற்கெனேவே கூறியதுபோல் எனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை உங்களிடம் வெளிப்படுத்தவுள்ளேன். […]
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி பூ சந்தையில் ரோஜா விற்பனை அமோகமாக காணப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் தங்களது காதலை வெளிப்படுத்தி வருவர். அந்த வகையில் காதலர் தினம் என்றாலே ரோஜா, சாக்லேட், காதலர் தின சிறப்பு அட்டை உள்ளிட்டவை அதிகம் விற்பனை செய்யப் படுபவை. அந்த வகையில், திருச்சியில் உள்ள பிரபலமான காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் […]
உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவன்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும் ‘காதல்’ என்கிற மந்திரச் சொல்லைக் கொண்டாடும் நாளாக ‘பிப்ரவரி 14’ திகழ்கிறது. ‘காதல்’ என்பது வெறும் சொல் என்பதைவிட, அது ஒரு வாழ்வியல் என்பதே மெய். அந்த வாழ்வியலைக் கடக்காத மனிதர்களே இல்லை எனக் கூறலாம். இல்லை, இல்லை… காதலே செய்திடாத சிலரும் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம், காதல் செய்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்குக் காதல். இப்படி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றாகப் பிணையப்பட்டிருக்கும் காதலுக்கு சாதி, மதம் என […]
ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் அப்டேட் குறித்து நடிகை ஓவியா, ஜிவி பிரகாஷ் என பிரபலங்கள் அடுத்தடுத்து வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். காதலர் தினத்தில் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை நடிகை ரைசா வெளியிடவுள்ளாராம். இதையடுத்து அதை எதிர்நோக்கி காத்திருப்பதாக நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ‘பிக் பாஸ்’ முதல் சீசன் மூலம் பிரபலமான மாடல் ரைசா, ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். தற்போது எஃப்ஐஆர், காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் உள்ளிட்ட படங்களில் […]
நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அதிக ஜோடிகள் ரூம் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பீச், பார்க், சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு தான் ஜோடிகள் செல்வார்கள். ஆனால் தற்போது OYO என்னும் ரூம் புக்கிங் செயலியில் காதலர்கள் பிப்ரவரி14 ஐ முன்னிட்டு அனைத்து இடங்களிலும் அதிக அளவில் ரூம் புக்கிங் செய்துள்ளனர். அனைத்து மாநிலங்களையும் கணக்கில் வைத்துப் பார்க்கும் […]
அடுத்த 10 ஆண்டுகளில் கண்கவரும் மலர் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உள்ளதாக கொலம்பிய அரசு அறிவித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மலர் ஏற்றுமதி செய்யும் நாடு கொலம்பியா. இங்கிருந்து கலர் கலராக கண்களை கவரும் வித விதமான ரோஜாக்கள், சாமந்தி என 1, 500-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 66 கோடி பூக்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா, மெக்ஸிகோவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கிறது. இந்ததினத்தையொட்டி மட்டும் 1, 000 கோடி ரூபாய்க்கு […]
காதலர் தினத்தன்று 6 புதிய படங்கள் திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். காதலர் தினம் என்பதால் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள படங்களே அதிகம் வெளியாகின்றன. இந்த ஆண்டு அப்படி வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை கீழே காண்போம். ஓ மை கடவுளே அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. முழுக்க முழுக்க காதல், திருமணம், கலாட்டா, காமெடி […]