Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி…. சிகிச்சை அளித்தும் பலனில்லை…. மனமுடைந்த கூலிதொழிலாயின் முடிவு….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூழைய்யாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அழகர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வயிற்று வலிக்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தினால் விரக்தியில் மனவேதனை அடைந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நகர்ப்பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்து உள்ளனர். இதில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருப்பதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தல்…. ஒத்திவைக்க தொடுக்கப்பட்ட மனு…. தளர்வுக்கு பின்னர் நடத்த உத்தரவிட்ட நீதிபதி….!!

மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நடத்தவேண்டும் என மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆவின் தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் பெரியகருப்பன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “மதுரை ஆவினில் 11 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து ஏற்கனவே ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப புழுக்கமா இருந்துச்சு…. வீடு புகுந்த மர்மநபர்…. விசாரணையில் காவல்துறை….!!

வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி கிராமத்தில் தங்கசாமி-புவனேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் காற்றோட்டமாக இருக்க கதவைத் திறந்து வைத்து துவங்கியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் 2 மணிக்கு வீடு புகுந்து புவனேஸ்வரி அணிந்திருந்த 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணிச்சலுடன் செயல்பட்ட பெண்…. மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை வீட்டார்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பெண்ணிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கௌரிசங்கர்-மாலதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணத்தின் போது மாலதியின் பெற்றோர் 51 பவுன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகள் ஆகியவற்றை மாப்பிள்ளையின் வீட்டிற்கு கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கௌரிசங்கரும் அவரது குடும்பத்தினரும் மாலதியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யார் அந்த முதியவர்….? அதிகாலை 3 மணிக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கட்டகுலம் பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது இன்னும் தெரியவரவில்லை. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சரவண பொய்கையில் குளியல்…. கொத்தனாருக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

சரவண பொய்கையில் குளிக்கச் சென்ற கொத்தனார் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கொத்தனார் பழனிகுமார் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று மாலை சரவண பொய்கையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்து ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷம் வைத்து கொன்றது யார்….? ஒரே நேரத்தில் செத்து கிடந்த 7 நாய்கள்…. புகார் அளித்தார் விலங்குகள் நல வாரிய ஆலோசகர்….!!

தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி விலங்குகள் நல வாரிய ஆலோசகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் பகுதியில் விலங்குகள் நலவாரிய ஆலோசகர் மயூர் ஹசிஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடல் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருந்ததாவது “கூடல்நகர் ரயில்வே நகர் 2வது தெருவில் ஏழு தெருநாய்கள் செத்துக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் நாய்கள் அனைத்தும் செத்து கிடப்பதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூரிலிருந்து இறங்கிய ஆட்கள்…. கண்மாயில் மீன்பிடிக்க முயன்ற 24 பேர்…. விதிகளை மீறியதால் வழக்குபதிவு….!!

கண்மாயில் மீன் பிடிக்க முயற்சி செய்த 24 பேரையும் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியூரில் இருந்து அதிக அளவு ஆட்களை இறக்கி மதுரை மாவட்டம் திருவாதவூர் நல்லாங்குளம் கண்மாயில் மீன் பிடிக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மீன்களை பிடிக்க 2 மினி வேனில் வந்தவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கண்மாயின் மீன்பிடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய காவலாளி…. பலமாக தாக்கிய 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

நிறுவனத்திற்குள் திருட முயற்சித்த 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் தொழிற்பேட்டையில் புலிக்குத்தி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் கண்ணன் மற்றும் மூக்கன் மகன் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து நிறுவனத்திற்குள் புகுந்த திருட முயற்சித்துள்ளனர். இதனை கண்ட காவலாளி புலிக்குத்தி அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் புலிக்குத்தியை சரமாரியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரருடன் நடந்த பிரச்சனை…. கோபித்துகொண்டு சென்ற மனைவி…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் ஆயுத படை போலீசில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திவ்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பணிபுரிந்த 8 இன்ஸ்பெக்டர்கள்…. பணி இடமாற்றம்…. உத்தரவிட்டார் போலீஸ் கமிஷனர்….!!

மதுரையில் பணிபுரிந்து வந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை நகரில் பணிபுரிந்து வந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்ய போலீஸ் கமிஷனர் பிரேம் ஆன்ந்த சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆறுமுகம் (காவல் கட்டுப்பாட்டு அறை)-தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2, சீனிவாசன் (மாட்டுதாவணி போலீஸ் நிலையம்)-தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, ரவிந்திரன் (கீரைத்துறை சட்ட ஒழுங்கு) மாட்டுத்தாவணி, ஆறுமுகம் (காவல் கட்டுப்பாட்டு அறை) – தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2, முகமது இஸ்திரீஸ் (தீவிர குற்றத்தடுப்பு பிரிவு) தல்லாகுளம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொல்லத்திற்கு காரில் சென்ற குடும்பம்…. ரோட்டோரத்தில் நின்ற லாரி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்….!!

ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் தனபாலன்-சலசா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். மேலும் காரை அகஸ்டின் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் வந்த கார் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் ரோட்டோரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள்…. 3086 பேருக்கு அபராதம்…. மொத்தம் 5.55 லட்சம் வசூல்….!!

ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 3086 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கபடுகிறது. மேலும் தேவை இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சாலைகளில் தேவை என்று சுற்றித்திரிபவர்களுக்கும் அபராதம் விதித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து…. மே 31 வரை நீடிக்கும்…. அறிவித்தது மதுரை கொட்ட நிர்வாகம்….!!

மே மாதம் 31-ஆம் தேதி வரை சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மே மாதம் 31ஆம் தேதி வரை சில ரயில்களை ரத்து செய்துள்ளது. அந்த ரயில்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது: நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை நாளை முதல் மே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் வைத்து காய்ச்சிய சாராயம்…. தகவலறிந்த காவல்துறையினர்…. கணவன் மனைவிக்கு கிடைத்த தண்டனை….!!

சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் காவல் துறையினருக்கு அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள தோட்டத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அவருடைய மனைவி செல்வி இருவரும் சாராயம் காய்ச்சி வைத்திருந்தனர். இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து சாராயத்தை கீழே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்ட பொருள்…. தகவலறிந்த காவல்துறையினர்…. கைது செய்யப்பட்ட பெண்….!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் சின்னழகி வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 71 மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் வைக்கப் போறோம்…. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

சாமி கும்பிடுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் பட்டைசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது தொடர்பாக ஒரே ஊரைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக சேதுராமன், கவிதா, பாஸ்கரன், ராமநாதன், திருவலிங்கம் ஆகிய ஐந்து பேர் மீதும் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத காரணம்…. ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு எடுத்த முடிவு…. கண்ணீரில் குடும்பம்….!!

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டான மாரிச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று காலை கண்மாயில் உள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் மரணத்தை தாங்க முடியாத வாலிபர்…. அக்கா வீட்டில் நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்காக வெளியே வந்தவர்…. அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த விபரீதம்…. விசாரணையில் காவல்துறையினர்….!!

முன்னாள் கவுன்சிலர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பரவை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் இவர் அங்குள்ள தனியார் பஞ்சமில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்போது அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று சமயநல்லூர் நான்குவழிச் சாலையில் அவர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அந்த சமயத்தில் மதுரையில் இருந்து விருதுநகர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையில் வியாபாரம் செய்த பெண்…. இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

கடையில் இருக்கும் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் கணேசன்-மாணிக்கவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கடையில் மாணிக்கவல்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்து சில பொருட்களை கூறி தருமாறு கேட்டுள்ளனர். அதன்பின் மாணிக்கவல்லி அந்தப் பொருட்களை எடுத்துக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. கள்ளத்தனமாய் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரத்துரை காவல்துறையினர் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் முத்து இருளாண்டி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை கண்டதும் காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த 3 கத்திகள், 45 மது பாட்டில்கள் மற்றும் 1 1/2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி விற்பனை செய்த பொருள்…. கிடைத்தது ரகசிய தகவல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கொட்டாம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கருப்பையா என்பவரது வீட்டில் 50 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்ற மாணவன்…. திடீரெனெ பாய்ந்த மின்சாரம்…. கதறி அழும் குடும்பம்….!!

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் முடுவார்பட்டி கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகன் கருபண்ண குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு குடோனில் இறக்கி வைக்கப்பட்ட அரிசி…. சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். அதே சமயத்தில் லாரி வாடகைக்கு செல்லும்போது இவரே டிரைவராகவும் செல்வது வழக்கமான ஒன்று. அதன்படி சம்பவம் நடந்த அன்று அரிசியை ஏற்றுக் கொண்டு வந்து அரசு அரிசி குடோனில் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மது அருந்தி உள்ளார். அதன்பின் அவர் மது போதையுடன் லாரியை சாலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கம்பெனியின் கதவு…. காணாமல் போன பல்வேறு பொருட்கள்…. வலைவீசிய காவல்துறையினர்….!!

கம்பெனியின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் சுந்தர் பகுதியில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல் கம்பெனியை திறப்பதற்காக வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காசு கொடுங்க…. நுங்கு வியாபாரிக்கு கிடைத்த அரிவாள் வெட்டு…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் வீரபத்திரன்-பூமா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சங்கிலிமுருகன் என்ற மகன் உள்ளான். இவர்கள் 3 பேரும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்தில் வைத்து நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நுங்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த வேலன் என்பவர் வீரபத்திரனிடம் நுங்கு கேட்டுள்ளார். அதன்படி வீரபத்திரனும் அவருக்கு நுங்கு கொடுத்துள்ளார். அதன்பின் வீரபத்திரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் பெய்த மழை…. நிரம்பியது சோத்துப்பாறை அணை…. வைகை ஆற்றிற்கு வந்த தண்ணீர்….!!

இரு கரைகளையும் தொட்டபடி மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் லேசாக குளிர்ச்சி நிலவுகிறது. மேலும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் சோத்துப்பாறை அணை முற்றிலுமாக நிரம்பி வராக நதி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீரானது ஆற்றின் இரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடை வீதிக்கு சென்ற பெண்…. மேம்பாலத்தில் நடந்த சம்பவம்…. மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் பிரேம்குமார்-சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். சுதா தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று விட்டு காளவாசல் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 மர்ம நபர்கள் சுதா சென்ற இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. பின்தொடர்ந்த 2 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழபனங்காடி பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று கடை வீதிக்கு சென்று இருந்தார். அவர் குலமங்கலம் மெயின் ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென்று வெளியான கரும்புகை…. தப்பித்த 2 தளங்கள்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடை 3 தளங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.45 மணிக்கு கடையில் இருந்து புகை வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தல்லாகுளம் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. சோதனையில் ஈடுபட உத்தரவு…. கைது செய்த காவல்துறை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அவனியாபுரம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் தப்பியோட முயன்றுள்ளது. இதில் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காய்கறி ஏற்றி கொண்டு வந்த வேன்…. தீடீரென்று வந்த வளைவு…. படுகாயமடைந்த 3 பேர்….!!

காய்கறி ஏற்றி கொண்டு வரும்போது வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது குன்னத்தூர் வளைவில் எதிர்பாராதவிதமாக வேன்  கவர்ந்துள்ளது. இதில் வேனில் வந்த அருண், ஸ்டாலின் மற்றும் டிரைவரான முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்…. பின்தொடர்ந்த 2 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் அன்பழகன்-சுவலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுவலட்சுமி மகளிர் சுய உதவி குழுவில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவர் கணக்கன்பட்டி அருகில் வந்து கொண்டிருக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. சட்டவிரோதமாக செய்த செயல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் காவல்துறையினர் டி.கல்லுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் என்.முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று செல்வராஜை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விழப்போகும் மின்கம்பம்…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்…. மறியலில் ஈடுபட போவதாக அறிவித்த மக்கள்….!!

சாய்ந்து விழபோகும் மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி மேல தோப்பு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு வீடுகள் நெருக்கமாக இருக்கும் இடத்தில் மின் கம்பம் ஒன்று உடைந்து எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து அழகர் கோவிலில் உள்ள மின்வாரிய உயர் அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் புதிய மின் கம்பம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. முககவசம் அணியாமல் சென்றவர்கள்…. 323 பேர் மீது வழக்குபதிவு….!!

முகக்கவசம் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொட்டியில் ஏற்றிய தண்ணீர்…. தூக்கி வீசப்பட்ட சிறுவன்…. கண்ணீரில் குடும்பம்….!!

மின்சாரம் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் செல்லப்பா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் என்பவருக்கு 8 வயது ஆகின்றது. சம்பவம் நடந்த அன்று செல்லப்பா தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள தொட்டியில் மோட்டார் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நகுல் எதிர்பாராதவிதமாக மோட்டாரில் உள்ள ஒயரை மிதித்துள்ளார். இதில் நகுல் தூக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென்று பெய்த மழை…. நீரில் சாய்ந்த நெற்பயிர்கள்…. கலங்கி நிற்கும் விவசாயிகள்….!!

கோடை மழையினால் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த கோடை மழையினால் வயல்களில் விளைந்து நிற்கும் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அவ்வாறு முளைக்கத் தொடங்கும் நெற்பயிர்களை பிடுங்கி சோகத்துடன் நிற்கும் விவசாயிகளை நாம்மால் படத்தில் காண முடிகிறது. இதற்காக உரிய இழப்பீடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடன் பிரச்சனை தான் காரணமா….? ஒரே குடும்பத்தில் 5 பேர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சரவணன்-ஸ்ரீநிதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி, அமுதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவர் கடந்த 20 வருடங்களாக அந்த பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சரவணனுக்கு சில மாதங்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வேலை இழந்த குடும்பங்கள்…. அவகாசம் வேண்டும் பெண்கள்…. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு….!!

பெண்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வேலை இழந்து வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த காரணத்தினால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் தாங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கட்டையால் தாக்கிய கணவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி பகுதியில் முத்து-பாண்டிசெல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக முத்துவிற்கு தனது மனைவியான பாண்டிச்செல்வியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாண்டிச்செல்வி தனது பிள்ளைகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெயிலால் வற்றி போன தெப்பக்குளம்…. வைகை ஆற்றில் நீர் வர தொடக்கம்…. அழகுற படம் பிடித்த கேமரா….!!

கேமரா ஒன்று அழகுற படம் பிடித்து மதுரை தெப்பக்குளத்தின் அழகை நமக்கு காட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அடையாளங்களில் ஒன்றாக மதுரை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தெப்பக்குளம் கடும் வெயிலால் தண்ணீர் வற்றி போனது. இந்த நிலையில் வைகை ஆற்றில் தற்போது நீர் வர தொடங்கியுள்ளது. இதனால் தெப்பக் குளத்தின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. இந்த தெப்பகுளத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கேமரா ஒன்று அழகுற படம்பிடித்து நமக்கு காட்டியுள்ளது

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்ய தாமதம்…. மழையால் முளைக்க தொடங்கும் நெல்…. வேதனையில் விவசாயிகள்….!!

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய தாமதமானதால் மழையால் நெல் முளைக்க தொடங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகில் வாகைக்குளம் கிராமத்தில் நெல் கொள்முதல் மையம் உள்ளது. இந்த கொள்முதல் மையத்தை சுற்றி உள்ள சின்ன வாகைகுளம், பெரிய வாகைகுளம், அழகுசிறை போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். அவர்கள் சாகுபடி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வார்கள். இந்த கொள்முதல் மையமானது வழக்கம்போல் கோடைகாலம் மற்றும் மழை காலங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறைமுக தேங்காய் ஏலம்…. 19 குவியல்களாக குவித்து விவசாயிகள்…. ரூ 9.14க்கு சராசரி விற்பனை….!!

மறைமுக தேங்காய் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடந்துள்ளது. இந்த ஏலத்தை விற்பனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். இதில் 60688 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்து விவசாயிகள் வைத்திருந்தனர். மேலும் இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு தேங்காயின் விலையை குறைந்தபட்ச விலையாக 7.50க்கும் அதிகபட்ச விலையாக 10.50க்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த நோயாளி…. ஊசியால் கழுத்தை குத்திக்கொண்ட அவலம்…. கண்ணீரில் குடும்பம்….!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த  பெண் ஒருவர் ஊசியால் தனது கழுத்தை குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். அவருடைய மனைவியான ஆரோக்கியமேரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் மருத்துவமனையில் இருக்கும்போது உறவினர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்காததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. விசாரணை நடத்தும் போலீசார்….!!

திடீரென மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் மயில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலக்கால் ரோடு பகுதியில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக தனது கடையை பூட்டி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்து அதிக அளவு புகை வெளியேறுவதை அப்பகுதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக செய்த செயல்…. மதுபாட்டில்களை பதுக்கி வைத்த 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்பிடூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராமன் மற்றும் பாலகுருநாதன் ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை கண்டதும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் கீழவளவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது செம்மணிபடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்…. கள்ளத்தனமாய் கடத்தி வந்த பொருள்…. அதிரடி விசாரணையில் சிக்கிய இருவர்….!!

கஞ்சாவை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள உத்தப்பநாயக்கனூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நவீன் குமார் மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் […]

Categories

Tech |