முன்னாள் துணை தாசில்தார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வானமாமலை நகரைச் சார்ந்தவர் முன்னாள் துணை தாசில்தார் ரவீந்திரன். இவர் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பியது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது 65 பவுன் நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரொக்கப்பணம், […]
Tag: Madurai
மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக மதுரைக்கு வந்து சென்னை திரும்புவோருக்கு முறையான பேருந்து வசதி செய்யாததால் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்களிடையே கேட்ட போது “விடுமுறையை முடித்த பின்னர் ஊருக்குத் திரும்பும் பயணிகளுக்கு ஏற்றார்போல் பேருந்து வசதி இயக்கப்படவில்லை எனவும் பயணிகளை முறையாக வரிசைப்படுத்தி அனுப்பவில்லை எனவும் பொதுவாக விடுமுறையை கழித்த பின்னர் […]
ஒரு திருமண விழாவில் வித்தியாசமாக செல்போன் செயலி மூலம் மொய் பணம் வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொய் எழுதும் பழக்கமானது மிகவும் விசேஷமான ஒன்றாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்து போன்ற அனைத்து குடும்ப விழாக்களிலும் மொய் பணம் வசூலித்து அதனை நோட்டு போட்டு எழுதி, அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை திரும்ப எழுதுவர். இந்நிலையில் மதுரை போன்ற மாவட்டங்களில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பணத்தை நோட்டுப் போட்டு […]
முகக் கவசம் அணிந்து வருமாறு கூறிய காவலாளியை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு முக கவசம் அணியாமல் ஐந்து வாலிபர்கள் படம் பார்க்க வந்ததுள்ளனர். இதனால் அவர்களிடம் முக கவசம் அணிந்து தான் உள்ளே வரவேண்டும் என அங்கிருந்த காவலாளி கதிரேசன் என்பவர் கூறியிருக்கிறார். […]
திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை அடிக்கடி தொந்தரவு செய்த மகனை தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். மதுரை மாவட்டத்திலுள்ள வடிவேல்கரை மேற்குத் தெருவில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கதிரவனுக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு தனது பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சாமிநாதன், கதிரவன் இரவில் தூங்கிக் […]
மதுரை ஹைகோர்ட் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அயன்பாப்பாகுடியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்கின்றனர் என்றும், அரசிடம் அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு சட்டவிரோதமாக இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் […]
சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் குடும்பத்தாரின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சூர்யா நகர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமாரபட்டிக்கு புறப்பட்டனர். அப்போது ஒரே காரில் தந்தை, மகன் இருவரும் சென்றனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மற்றொரு காரில் பின்னால் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
பொங்கல் திருநாள் என்றாலே நம் அனைவருக்கும் பெரும்பாலும் ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். தமிழர்களின் பெருமையையும், வீரத்தையும் பரிசளிக்கும் விதமாக இந்தப் போட்டி அமைந்திருக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது பெயர்களை வழங்குவார்கள். கலந்து கொள்ளும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் அடக்கும் காளைக்கேற்ப பரிசு வழங்கப்படும். அந்தவகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு என்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கியுள்ளார். மதுரை முத்து பட்டிணபுரம் பகுதியை சேர்ந்த […]
பொங்கல் திருவிழா என்றாலே நாம் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஜல்லிக்கட்டு தான். பொங்கல் திருநாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழாவானது நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்தவுடன் இந்த சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்ட்ராக்டர் வீட்டில் தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் என்ற தொகுதியில் ரமேஷ் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். அதன்பின் ரமேஷ் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு, […]
தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி ஆகியோர் பொங்கலன்று வருகை தர இருக்கிறார்கள். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும். அதேபோல் இந்தாண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப் புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையின் போது நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நாட்டா மதுரை மாவட்டம் அவனியாபுரம் வருகை […]
நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தில்லை நடராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு விசாரணை முடிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் […]
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி ரோடு பகுதியில் வந்த வாகனங்களை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் கீரைத்துறை பசும்பொன் நகரை சார்ந்த ராமகிருஷ்ணன், குமாரவேல், அனுப்பாண்டி, காளீஸ்வரன் […]
இரண்டு சக்கர வாகனத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோவிலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அதன்பின்பு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் திருடிய நபர்களை தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வாகன […]
திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் பவித்ரா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் பவித்ராவின் தந்தை தனது மகளை அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இத்தகைய நிலையில் பவித்ரா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் வெகு […]
டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் அனைத்து தென் மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து கொண்டு செல்லப்படும் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசலை டேங்கர் லாரிகளிலிருந்து திருடுவதாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு செய்யப்படும் மண்பானைகள் அழகர் மலையின் அடிவாரத்தில் செய்யப்படுகிறது. அங்குள்ள மண்ணில் கலக்கும் நீரில் மூலிகை குணங்கள் காணப்படுவதால் அங்கு செய்யப்படும் பானைகளுக்கு அவை தனிச்சிறப்பு சேர்க்கிறது. இதனால் தான் இந்த மண்பானைகளை வாங்குவதற்கு மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இப்பகுதிகளுக்கு […]
தனியார் நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்று இணைந்து ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளனர். மதுரை முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களான அழகர்கோவில் , ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், கீழக்குயில் குடியில் உள்ள புராண சின்னங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 15 நிமிடத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் ஒருவருக்கு ரூபாய் 6000 […]
தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை தாதா அங்கோடா லொக்காவின் மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் தீவிர காட்டம் தொடங்கியுள்ளனர். கோவை சேரன் மாநகரில் தலைமறைவாக இருந்த இலங்கை தாதா அங்கோடா லொக்கா கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவருடன் தங்கியிருந்த இலங்கை காதலி அமானி தான்சி , மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானஸ்வரன் ஆகிய 3 பேரையும் அங்கோடா லொக்கா உடலை மதுரைக்கு கொண்டு சென்று எறித்தனர். அங்கோடா லொக்கா […]
தமிழகத்தோடு அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் கால தாமதம் ? என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நிறைவடைய உள்ள நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமான பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பம் இல்லையா ? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி ஆகியோர் […]
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Manager. காலிப்பணியிடங்கள் : 176 , பணியிடம் : மதுரை, சம்பளம் : ரூ 19,500 – ரூ62,000, கல்வித்தகுதி : B.E, Master Degree, வயது : 30, விண்ணப்பிக்க கட்டணம் : ரூ 250, விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 9, மேலும் விரிவான விவரங்களுக்கு www .aavinfedrecruitment . com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். […]
போதையில் இளைஞர்கள் மழையில் நனைந்தபடி திருப்பரங்குன்றம் மலையில் சறுக்கிக் கொண்டு விபரீத விளையாட்டில் ஈடுபடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலான கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது.. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலையின் மேல் அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு மதுபோதையில் உயரமான மலையிலிருந்து விபரீதமாக சறுக்கி விளையாடியதோடு மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக அபாயகரமான விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.. மழை பெய்யும்போது மலைக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் மதுகுடித்து விட்டு […]
மதுரையில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவி இறந்த முப்பதாவது நாளில் அவரை போலவே தத்துரூபமாக சிலை ஒன்றை உருவாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்னும் பிரபல தொழிலதிபர். அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவர் மனைவி பிச்சைமணி அம்மாள் என்றால் அவ்வளவு பிரியம். இந்நிலையில் இவரது மனைவி கடந்த 30 நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று உடல் […]
திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பரபரப்பு போஸ்டர் ஒன்றை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ‘தமிழக முதல்வர் […]
நடிகர் சூர்யாவை பாராட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொண்ட பட்டாளம் ஆகும். நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவது உள்ளிட்ட நற்செயல்களில் சூர்யா அடிக்கடி தலையிடுவதால் அவர் […]
நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் பிரபல நடிகர் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் அவர்களது திருமண நாள். இந்த நன்னாளை அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொண்டாடாமல், அவரது ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி விஜய் அவர்களுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இளையதளபதியின் ரசிகர் இயக்கம் ஒன்று இதற்கெல்லாம் ஒருபடி […]
மதுரை அருகே பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்த படத்தில் ரூபாய் ஒரு லட்சம் கொரோனாவுக்கான நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். மதுரை பகுதிகளில் யாசகம் பெற்று வரும் பூல்பாண்டியன் என்ற முதியவர் தனக்கு பிச்சையாக மக்கள் அளிக்கும் பணத்தை தன் உணவு தேவைக்கு போக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் பணம் உணவு தேவை போக, அதிகமாக வரும் பட்சத்தில், கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை அவர் […]
திருமண ஆசைகாட்டி 17 வயது சிறுமியை சீரழித்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி.. ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் மற்றும் மகன் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 7ஆம் தேதியன்று மதியம் 2 மணியளவில் டியூசனுக்கு படிக்கச் சென்ற பால்பாண்டியின் மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.. எனவே மகள் காணாமல் போய்விட்டதாக நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பால்பாண்டி […]
மதுரை அருகே பட்டப்பகலில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் தேதிமுகவின் முக்கிய பிரமுகர் ஆவார். மேலும் இவர் மேலூர் யூனியன் தொகுதியின் முன்னாள் கவுன்சிலரும் ஆவார். இந்நிலையில் நேற்று திருவாதவூர் பகுதிகளில் இருந்து மேலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் செந்தில் பாண்டியன் சென்று கொண்டிருக்கும் போது அவரை திடீரென வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரே நாளில், 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதையடுத்து, அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
முன்விரோதம் காரணமாக மேல அனுப்பானடி பகுதியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மீது மதுரை மாநகர் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தநிலையில், இன்று அதிகாலை முத்துக்குமார் அனுப்பானடி ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முத்துக்குமாரை […]
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சிலதினங்களாக மெல்ல குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது.. கொரோனா வைரஸ் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் அதிக அளவில் பரவி வந்தது.. அதனை தொடர்ந்து மதுரையில் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வந்தது.. மதுரையில் கடந்த வாரம் முன்பு வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 200இல் இருந்து 300 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். […]
வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதையடுத்து, பள்ளி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகள் கவிதா. இவருக்கு வயது 16 ஆகிறது.. இவர் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு 11ஆம் படிக்கவுள்ளார். இதற்கிடையே மாணவி கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் 23 வயது மகன் செல்லப்பாண்டி என்பவரை 2 ஆண்டுகளாக தீவிரமாக […]
சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாசிலாமணி என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான். இந்தநிலையில், 2 நாள்கள் சிறுமியை பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவருகிறது.. […]
இளைஞரை தாக்கிய சங்கரன் கோவில் இன்ஸ்பெக்டர் உட்பட 6 காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சங்கரன்கோவில் மலை யான்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தங்கத்துரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 […]
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்து, அவரிடமிருந்த 141 கிலோ கஞ்சா, 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலையடுத்து எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை வலைவீசி தேடிவந்தனர்.. இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று […]
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,955 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,379 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,201ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,703 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]
சிலைமான் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.. மதுரை சிலைமான் அடுத்துள்ள சக்குடி மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்.. வயது 22 ஆகிறது.. சதீஷ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. இந்நிலையில் தான் சிறுமியின் காதல் விவகாரம் பற்றி வீட்டுக்குத் தெரிய வந்ததையடுத்து, அந்த சிறுமியின் தாய் சதீஷ் வீட்டிற்குச் சென்று, “எனது மகளிடம் பேசுவதை […]
மதுரை மாவட்டத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,477 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 944 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,672ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா […]
மதுரை மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாவட்டத்தில் 204 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,279 ஆக இருந்தது. அதில், 448 பேர் குணமடைந்த நிலையில் 820 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் . இந்த நிலையில், இன்று 175 பேருக்கு கொரோனா இருப்பதாக […]
மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கு […]
மதுரையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதித்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரை வருகை தந்ததன் காரணமாக தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1073ஆக உள்ளது. 423 சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் 641ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு […]
கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஓன்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள காரான் ஊராட்சி தலைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியராஜ். இவரது மகன் காளிதாஸ்(24) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா(21) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மதுரை புதூர் பகுதியிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.. அதனைத்தொடர்ந்து அந்த ஜோடி ராமநாதபுரம் […]
சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை […]
மதுரையில் மேலும் 96 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000த்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்புகள் 1,084 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும் நேற்று வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 574 ஆக இருந்த நிலையில், இன்று 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமாயில் […]
பாஜக இளைஞரணி நிர்வாகியை தாக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி.. இவர் ஜூன் 22ஆம் தேதி, உமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகியான சங்கரபாண்டி என்பவரை தாக்க முற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.. அதனால் இரு தரப்பினரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 23ஆம் தேதி) புகாரளித்தனர்.. இந்நிலையில் மதுரை […]
தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 2.5 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர் ஹேக் செய்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சின்ன சொக்கிகுளம் அருகே இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) கணக்கு உள்ளது. இந்தநிலையில் தான் மாரியப்பன் நேற்று சின்ன சொக்கிகுளம் வங்கிக்கு சென்று, தன்னுடைய வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அலுவலர்கள், உடனடியாக […]
மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகனை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு 705 ஆக அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு […]