மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். மதுரையில் நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல் அளித்துள்ளார். மதுரை […]
Tag: Madurai
மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகத்தில் இருந்து காவலர்கள் அனைவரும் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து […]
சென்னை, திருவள்ளூரில் இருந்து மதுரை சென்ற 27 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் […]
திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருடன் சேர்ந்து கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள விளாச்சேரி மொட்ட மலையை சேர்ந்தவர் கருப்பையா.. இவருக்கு 42 வயதாகிறது.. கருப்பையாவுக்கு 32 வயதில் பொன்னம்மாள் என்ற மனைவி இருக்கிறார்.. இந்த தம்பதியருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். வளையல் வியாபாரம் செய்துவரும் கருப்பையா நேற்றிரவு வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இவரது மனைவி பொன்னம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது […]
சிறுமியை கர்ப்பமாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமிக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உதயகுமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு லவ்வாக மாறியது. தான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி உதயகுமார் அந்த பெண்ணிடம் மிகவும் நெருங்கி பழகி தனிமையில் இருந்துள்ளார்.. இதனால் கர்ப்பமடைந்த சிறுமி […]
ஜவுளிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி, துணிமணிகளை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் குரு என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளிக் கடையில் துணி வாங்குவதுபோல், வந்த 2 இளைஞர்கள் ரூ 20,000 மதிப்புள்ள துணிகளை எடுத்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஊழியரிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தசம்பவம் குறித்து தகவலறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த […]
டிக்டாக் மூலம் பேசி பழகி இளைஞரை மயக்கி 97,000 ரூபாய் மோசடிசெய்த இளம் பெண்ணை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). இவர் ஒரு காலேஜில் பயின்று வருகிறார். இவருக்கு டிக்டாக் மூலமாக திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் கடந்த ஓராண்டாகப் ஆசையாக பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் பொய் காரணங்களை கூறி சுசி, ராமச்சந்திரனிடமிருந்து சுமார் ரூ 97 ஆயிரம் […]
அரசு இராசாசி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று அதிகாலை நோயாளி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையயும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கரும்பாலையில் வசித்துவரும் முருகன் என்பவர் நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த […]
மதுரையில் 9 மாத ஆண் குழந்தை சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டது தொடர்பாக 2 தம்பதியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை மாநகர் செல்லூர் போஸ் வீதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் – மேரி தம்பதியர். இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தகுழந்தையை அதே பகுதியில் உள்ள ஷாஜகான் – நாகூரம்மாள் தம்பதியருக்கு சட்ட விரோதமாக தத்து கொடுத்திருப்பதாக மதுரை […]
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இதுவரை 58 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துரையில் இதுவரை 231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு […]
மதுரையில் இன்று பச்சை அட்டைதாரர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக அரசு சார்பில் அவ்வப்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், […]
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கடந்த ஏப்., 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை […]
கொரோனா காரணமாக மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]
ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஒரே நேரத்தில் வாகன இ-பாஸ்கள் வாங்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு […]
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்ச்சகரின் தாயாருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, மூதாட்டிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூதாட்டியுடன் வசித்த அர்ச்சகர்கள் உள்ளிட்ட 7 […]
19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை 500 ரூபாய்க்கு நியாயவிலை கடைகளில் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள பொதுமக்கள் நலன் கருதி 19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள 29 ஆயிரத்து 486 நியாயவிலை […]
மதுரையில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் யூனியனான வேடர்புளியங்குளம் பகுதியில் 11/3 கோடியில் தார்சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. அந்த வகையில் சாலைகள் ஆங்காங்கே பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக தெருக்களில் ஆங்காங்கே குவியல் குவியலாக ஜல்லிக் கற்கள் கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் அப்பகுதி வழியாக […]
தேவகோட்டையில் ஊஞ்சலில் உறங்கி கொண்டிருந்த பாட்டி மற்றும் பேரன் இருவர் மீதும் தூண் விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்பகுதியில் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகின்றார். காளிமுத்தன் மனைவி 50 வயதான செல்வி அவ்வீட்டில் இருந்த தூணிலும், அருகில் உள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்து கிடந்தார். அப்போது விளையாடிவிட்டு மிகவும் களைப்பாய் வந்த அவரது பேரன் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை நகராட்சி ஆணையர் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஏற்கனவே ஒரு நபருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சுமார் 13 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டனர். அதிலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருமங்கலம் நகராட்சி ஆணையர் அதை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தார். மேலும் காய்கறி மளிகை […]
மதுரை சித்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என மாவட்ட ஆட்சியர் வினய் கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]
குழந்தைகளை ஊரடங்கை கடைபிடிக்க வைக்க கலை இலக்கிய போட்டிகளை நடத்த MP சு.வெங்கடேசன் முடிவு செய்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவானது இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு நேரம் போவதே கிடையாது. ஆகையால், அவர்களை வீட்டிற்குள் இருக்க செய்யும் விதத்திலும், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் கலை இலக்கியப் போட்டிகளை நடத்த மதுரை எம்பி முடிவு செய்திருக்கிறார். அதன்படி, பங்கேற்கும் அனைவருக்கும் […]
மதுரையில் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 35 வயதான இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து முஸ்தபா தனது சொந்த ஊர் திரும்பினார். முஸ்தபா கேரளாவில் இருந்து வந்துள்ளதால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசாருக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, முஸ்தபா மற்றும் […]
மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவது தொடர்கதையாக உள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளிய வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கடைகள் மட்டும் நேர […]
மதுரையில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மார்ச் 23 ஆம் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் பலரும் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே உற்றித்திரிவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அந்த […]
மதுரையில் சாலையோர மக்களுக்கு 3 வேலையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வீடின்றி சாலையோரம் வாழ்பவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு என்பது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் ஆர் பி உதயகுமார் உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் மதுரை திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சாலையோரம் மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் உணவின்றி தவிக்கும் […]
மதுரை அருகே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் காதலியை பார்க்க சென்றதால் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற கணிப்பில் அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விஜய் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே கண்காணிப்பில் இருந்து தப்பி சென்ற தனது காதலியை சந்தித்து விட்டு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார் விஜய். அப்போது […]
மதுரையில் கொரோனா குறித்து பொய்யான வதந்திகள் பரப்பி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருவதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பொய்யான தகவல்களை பரப்பி வருவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, மதுரை கரியமேடு பகுதியில் வசித்து வரும் கார்முகிலன் என்பவர் கொரோனா குறித்து தவறான […]
மதுரையில் மஞ்சள் தூளை தண்ணீர் லாரிகளில் போட்டு கலக்கி ரோடு முழுவதும் தெளித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். இந்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே மக்கள் வெளியில் வராமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் […]
கொரோனாவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுரை மாணவர்கள் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு என்பது உலக அளவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தட்டுப்பாடு காரணமாக விலை சற்று அதிகம் உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. மேலும் சானிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி பட கூடாது என்பதற்காக மதுரை பார்மஸி கல்லூரி மாணவர்கள் மாநகராட்சியுடன் இணைந்து நாளொன்றுக்கு […]
மதுரையில் 40 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக போலி வதந்தியை பரப்பியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் நமது மக்களிடையே தாறுமாறாக அதிகரித்து உள்ள நிலையில், அதற்கேற்றபடி மேலும் அச்சத்தை பெருக்க வதந்திகளும் அவ்வப்போது கிளப்பி விடப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் சுமார் 40 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது. ஆனால் கள நிலவரப்படி மதுரையில் […]
மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழும் அதிசய நிகழ்வு தொடங்கியுள்ளது. மதுரை முக்தீஸ்வரர் கோயில் மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவறையில் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் உள்ளார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2வது வாரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் கோயில் கருவறைக்குள் பிரவேசிக்கும். இந்த நிலையில் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசம் புதன்கிழமை தொடங்கியது. கோயில் […]
மதுரையில் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளிக்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசு விழா ஒன்றிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை சென்றிருந்தார். அங்கு அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை, அத்துமீறி முதல்வரிடம் 7 தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரும், அவருடன் தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த […]
மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் 2000 ரூபாய் பொம்மை தாள் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பசுமலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் ரூபாய் 2000 எடுக்க ராஜசேகர் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்து சிறுவர்கள் விளையாடக்கூடிய 2000 ரூபாய் பொம்மைதாள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், அதனை புகைப்படம் எடுத்தும் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் […]
மக்கள் மீது இருக்கும் கடனுக்காக எந்த அரசும் மக்களை கடனை திருப்பி செலுத்துங்கள் என்று சொல்வது கிடையாது. அரசுதான் கடனை அடைத்து வருகிறது என கமல்ஹாசன் பேச்சுக்கு திருமங்கலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதிலளித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ப.சிதம்பரம் இந்திய பொருளாதாரம் […]
மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான திட்டத்தினை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சு. வெங்கடேசன், நாளைய தினம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழி சாலைக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் […]
மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை 2ஆக பிரிப்பது தொடர்பான மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மதுரை மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்தில் மாயமான விடைத்தாள் கட்டு மூன்று மாதம் கழித்து அதே பேருந்தில் இருந்தது சர்ச்சையாகி உள்ளது. திண்டுக்கல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் விடைத்தாள் கட்டுகள் கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் உள்ள பேருந்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் 138 விடைத்தாள்கள் அடங்கிய ஒரு கட்டு மற்றும் மாயம் ஆனது. இதனால் அந்த கல்லூரிக்கான தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. . இந்த நிலையில்விடைத்தாள் கட்டு மயமான அதே பேருந்தில் […]
நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வைகை நதியைப் பாதுகாக்கும் வகையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாகச் செல்வதில்லை. […]
திருக்குறளை மேற்கோள் காட்டி, விஜய் ரசிகர் திருமங்கலத்தில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி குறித்து எதுவும் விஜய் அறிவிக்காத நிலையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நிர்வாகிகள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பிற கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பிகில்’ பட விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர், கடந்த வாரம் திரைப்படத்தில் தொடர்புடையவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் நடிகர் விஜய்யை மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பேசுபொருளாக […]
காளவாசல் சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடைய நபர்களை அதிரடியாகக் கைது செய்தும் வருகிறது. இந்நிலையில் மதுரை காளவாசல் சந்திப்பு அருகேயுள்ள வணிக வளாகத்தின் முன்புறம் 17வயது சிறுவன் கஞ்சா விற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் […]
மோதலில் ஈடுபட்ட திருச்சி பிராட்டியூர் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மீதான எப்ஐஆர்ஐ ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி பிராட்டியூர் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும் பாட்டில்களாலும் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 28 மாணவர்களை கைது […]
மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான். சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின் மோட்டார் சைக்கிள் மீது […]
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி […]
மதுரையில் தட்ச்சு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்ற நிலையில் மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக மரகதம் என்ற பெண் சிக்கியுள்ளார். ஒரு பெண்ணிற்காக விக்னேஷ் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனடிப்படையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் […]
மதுரை அருகே பத்திரிக்கையில் பெயர் போடாததால் வந்த தகராறில் பெண் ஒருவர் உயிரிழக்க மாப்பிளை கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை அடுத்த துள்ளகுட்டிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அதே பகுதியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவர்கள் இருவரும் சொந்தக்காரராக இருந்தாலும், இரு குடும்பத்தினர் இடையே நீண்ட காலமாக இருக்கும் சண்டை காரணமாக பேசிக்கொள்வதில்லை. இந்நிலையில் ராமரின் மகன் சதீஷ்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டார் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் சமயத்தில் சின்னச்சாமியின் பெயரை […]
பதிவாளர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் யாருக்கும் தகுதியில்லாததால், மீண்டும் விளம்பரம் செய்து குழு அமைத்துத் தேர்வுசெய்ய காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவுசெய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) சங்கர் இருந்துவரும் நிலையில், அப்பதவிக்கு பல்கலைக்கழகம் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 24 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என். ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லட்சுமிபதி, ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு […]
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்தும் […]
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் எட்டு படுக்கைகளை கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது கொரோன வைரஸ் சீனாவில் வேகமாக பரவி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளதால் உலகநாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவினை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கி வைத்தார். இங்கு கொரோன வைரஸ் அறிகுறிகளைக் கண்டறியும் கருவிகளுடன் இரு நுரையீரல் […]
மதுரையில் அரசு நிலத்தை தனி நபர்களுக்கு தாசில்தார் பட்டா போட்டு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்றையதினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், நாவினிப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம், மைதானம், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழக அரசிடம் தொடர்ந்து கிராம […]