உசிலம்பட்டியில் அதிமுகவினரின் வைத்திருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பார்வட் ப்ளாக் கட்சியின் மறைந்த மாநில பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத் தேவருக்கு 97_ஆவது பிறந்த தினத்தையொட்டி உசிலம்பட்டியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அதிமுகவினரின் பேனர்கள் இருந்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, அமமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பெரும் பரபராப்பு ஏற்படது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]
Tag: Madurai
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேனியை சேர்ந்த, சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 3 பேரும் […]
திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , மார்க்கெட் , கடை வீதிகள் என நடந்து சென்று தி மு க தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்கெட்டில் வணிகர்கள் , மக்களிடம் , கலந்துரையாடிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வேட்பாளருடன் சேர்ந்து குடித்தார். இதையடுத்து அங்கிருந்த ஏராளமான இளைஞர்கள் […]
நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில் ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் […]
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா சுயநினைவுவில் இல்லாத நிலையில் கையெழுத்தில் சர்சை போன்ற காரணங்களை முன்வைத்து வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி நீதிபதி […]
மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து […]
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உறுதியளித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் தேர்தலின் போது முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எப்படி வேட்பு மனுவில் கையெழுத்து பெறப்பட்டது , சுயநினைவு […]
நாடாளுமன்ற தேர்தலில் மதுரைக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் வரக்கூடிய ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது . தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குபதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மும்மரமாக செய்து வருகிறது . இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18_ஆம் தேதி சித்திரை திருவிழா என்பது மதுரையில் மிக விமரிசையாக நடைபெறும் . ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெறும் […]
என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , சி.பி.எம் , சிபிஐ , விசிக , மதிமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , இந்திய ஜனநாயக கட்சி , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட […]
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை […]
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கக் கூடிய நிலையில் அன்றைய தினம் மக்களவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் . மேலும் மதுரையில் நடைபெறும் வாக்குப்பதிவு தேதியை மாற்றி வைக்கக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் . […]
தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டவுட் பிளக்ஸ் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதும் குற்றம் என அனைத்து பத்திரிக்கை , செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அந்த மனுவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் மிகப்பெரும் அளவில் மக்களை வாகனங்களில் அழைத்து வருகின்றனர் . அதன் வழியாகத்தான் பணமும் அவர்களுக்கு சென்று சேர்கிறது . எனவே பொதுக்கூட்டங்களுக்கு […]